விஜய்யை திருப்தி படுத்த இரவோடு இரவாக காவிரி நீர் திறப்பு! டிகே சிவக்குமார் மீது கர்நாடக பாஜக அட்டாக்

  • பெங்களூர்: தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறக்கக் கூடாது என்று கூறி கர்நாடகாவில் விவசாய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக நாளை மாண்டியாவில் பாஜக போராட்டம் அறிவித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா, 'தமிழக முதல்வர் விஜய்யை திருப்திப்படுத்த இரவோடு இரவாக காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டப்பட்டு இருக்கிறது' என்று டிகே சிவக்குமார் மீது விமர்சனத்தை முன்வைத்தார்.

    Advertisement

    காவிரி நீரை பகிர்ந்து கொள்வதில் தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும் இடையே பிரச்சினை உள்ளது. காவிரியில் தமிழகத்திற்கு உரிமைப்படி கிடைக்க வேண்டிய நீரை கூட கொடுக்க மறுத்து கர்நாடகா அடாவடி செய்து வருகிறது. இதற்கிடையே தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 500 கன அடி நீர் திறக்க வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்டது.

    Advertisement

    காவிரி நீரை திறக்கக் கூடாது

    இதனை ஏற்க மறுத்து அடம் பிடித்து வரும் கர்நாடகா மேல் முறையீடு செய்யப்படும் என்று கூறி வருகிறது. தங்களுக்கு குடிநீருக்கே தண்ணீர் இல்லாத போது தமிழகத்திற்கு எப்படி தண்ணீர் திறக்க முடியும் என்று கேள்வி எழுப்பும் கன்னட அமைப்புகள், தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கக் கூடாது என்று கூறி போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக மண்டியா மாவட்ட விவசாயிகள் எங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் திறக்காத நிலையில், தமிழகத்துக்கு தண்ணீர் எப்படி திறக்க முடியும்? என கேள்வி எழுப்பியதுடன் எக்காரணம் கொண்டும் தமிழகத்துக்கு கர்நாடக அரசு காவிரி நீரை திறக்கக் கூடாது என வலியுறுத்தியும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    Advertisement

    கர்நாடகாவில் பாஜக போராட்டம்

    இரவில் அவர்கள் தீப்பந்தங்களை கைகளில் ஏந்தி போராடினர். 2-வது நாளாக நேற்றும் மண்டியா, மைசூர் மாவட்டங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். கைகளில் காலி குடங்களுடன் மண்டியா டவுனில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில், தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கக் கூடாது என்று கர்நாடக பாஜகவும் கூறியுள்ளது. இது குறித்து கர்நாடக மாநில பாஜக தலைவர் விஜயேந்திரா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    விஜய்யை திருப்திப்படுத்த தண்ணீர் திறப்பு

    தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறக்கும்படி காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது. கர்நாடகத்தில் தண்ணீர் இல்லாதபோது, தமிழகத்துக்கு எப்படி தண்ணீர் கொடுக்க முடியும். தமிழக முதல்வர் விஜய்யை திருப்திப்படுத்த இரவோடு இரவாக தண்ணீர் திறந்துவிட்டுள்ளனர். கர்நாடகத்தில் வறட்சி இருக்கிறது என்பதை கர்நாடக அரசு மறந்துவிட்டது. தண்ணீர் திறந்தால் கர்நாடக விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள்.

    Advertisement

    விவசாயிகளின் வாழ்க்கையுடன் முதல்வர் டிகே சிவக்குமார் விளையாடுகிறார். அமைச்சரவை விரிவாக்கத்தில்தான் அவருக்கு கவனம் உள்ளது. தண்ணீர் பிரச்சினை பற்றி சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளவில்லை. தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்கப்படாது என்பதை வலியுறுத்தி நாளை மாண்டியாவில் பாஜக போராட்டம் நடத்தப்படும். வழக்குகளை கண்டு பாஜக அஞ்சாது.

    English Summary

    Karnataka BJP attacks DK Shivakumar: Farmer organizations in Karnataka are protesting against release of Cauvery water to Tamil Nadu. The BJP has announced a protest tomorrow in Mandya regarding this issue. Speaking to the media, Karnataka BJP President Vijayendra criticized DK Sivakumar saying that 'water has been opened in the Cauvery overnight to satisfy the Chief Minister of Tamil Nadu Vijay'.