பெண் சப் இன்ஸ்பெக்டர் கன்னத்தில் அறைந்த பாஜக எம்எல்ஏ மகள்.. பாய்ந்தது வழக்கு.. என்ன நடந்தது?

  • பெங்களூர்: கோவிலுக்குள் அனுமதிக்காததால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கோபமடைந்த பாஜக எம்எல்ஏவின் மகள், பெண் சப் இன்ஸ்பெக்டரை அவதூறாக திட்டி தீர்த்து கன்னத்தில் அறைந்த சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றி பெண் சப் இன்ஸ்பெக்டர் கொடுத்த புகாரில் எம்எல்ஏவின் மகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    Advertisement

    கர்நாடகாவின்

    துமகூரு புறநகர் தொகுதி பா.ஜனதா எம்எல்ஏ சுரேஷ் கவுடா. இவரது மகள் மகள் ஐஸ்வர்யா. கடந்த 12ம் தேதி ஐஸ்வர்யா மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணாவில் உள்ள லட்சுமி நரசிம்மசாமி கோவிலுக்கு சென்றார்.

    Advertisement

    கோவிலில் கூட்டம் அதிகமாக இருந்தது. ஐஸ்வர்யா விஐபி வரிசையில் நுழைய முயன்றார். அப்போது அங்கு பணியில் இருந்த மண்டியா மகளிர் போலீஸ் நிலையத்தின் எஸ்ஐ சவிதா பட்டீல் தடுத்து நிறுத்தினார்.

    சவிதாவிடம், தன்னை கோவில் கருவறைக்கு அருகில் செல்ல அனுமதிக்கும்படி ஐஸ்வர்யா கேட்டுள்ளார்.
    இதற்கு மறுப்பு தெரிவித்த சவிதா, 'கூட்டம் அதிகமாக உள்ளது. நீங்கள் வரிசையில் தான் செல்ல வேண்டும். உங்களை மட்டும் உள்ளே அனுமதித்தால் மற்ற பக்தர்கள் வாக்குவாதம் செய்யலாம். இல்லாவிட்டால் அவர்களும் அனுமதி கோரலாம்'' என்று கூறியுள்ளார். இதனால் ஐஸ்வர்யா டென்ஷனானார்.

    Advertisement

    எஸ்ஐ சவிதா பட்டீல் மற்றும் ஐஸ்வர்யா இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இதற்கிடையே தான் அங்கு வந்த சர்க்கிள் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சாதாரண உடையில் கருவறைக்கு அருகே சென்றார். அவர் வரிசையில் நிற்கவில்லை. இதனால் ஐஸ்வர்யா அதுபற்றி சப் இன்ஸ்பெக்டர் சவிதாவிடம் கேள்வி எழுப்பினார். இது இருவருக்கும் இடையே வாக்குவாதத்தை ஏற்படுததியது.

    அப்போது சப்-இன்ஸ்பெக்டர் சவிதாவை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், அவரது கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஐஸ்வர்யா மீது கியாதனஹள்ளி போலீசில் சப் - இன்ஸ்பெக்டர் சவிதா புகாரளித்தார். அதன்பேரில் போலீசார் ஐஸ்வர்யா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    Advertisement

    இந்த விவகாரம் கர்நாடகாவில் சர்ச்சையை கிளப்பிய நிலையில் ஐஸ்வர்யாவின் தந்தையான பாஜக எம்எல்ஏ சுரேஷ் கவுடா மன்னிப்பு கோரினார். தனது மகள் செய்த தவறுக்கான தான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Enraged after being denied entry into a temple, the daughter of a BJP MLA verbally abused a female Sub-Inspector and slapped her across the face. A case has been registered against the MLA's daughter based on the complaint filed by the female Sub-Inspector.