கர்நாடகா அரசு பஸ்களில் டீசலுக்கே பணம் இல்லாததால் டிக்கெட் விலை தாறுமாறாக உயர்வு! மகளிருக்கு இலவச பயணம் காரணமா?

  • பெங்களூர்: கர்நாடகாவில் 'சக்தி' திட்டம் என்ற பெயரில் மகளிருக்கு மாநிலம் முழுவதும் இலவச பயணம் வழங்கப்பட்டு வருகிறது. இது அரசு போக்குவரத்து கழகங்களுக்கு இழப்பை ஏற்படுத்தி வருகிறது. டீசலுக்கு கூட பணமில்லை என முதல்வர் டிகே சிவக்குமார் புலம்பினார். இந்நிலையில் தான் பெங்களூர் உள்பட கர்நாடகா முழுவதும் அரசு பஸ்களின் டிக்கெட் கட்டணம் தாறுமாறாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக டிகே சிவக்குமார் பொறுப்பு வகித்து வருகிறார். போக்குவரத்து துறை அமைச்சராக பைரதி சுரேஷ் இருக்கிறார்.

    Advertisement

    கர்நாடகா அரசு பஸ்களில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அதுல் குமார் திவாரி தலைமையில் பொது போக்குவரத்து கட்டண முறைப்படுத்தும் கமிட்டி அமைக்கப்பட்டது.

    இந்த கமிட்டி ஆய்வுகள் மேற்கொண் கேஆர்எஸ்டிசி பஸ்களில் 25 சதவீதமும், பிஎம்டிசி பஸ்களில் 40 சதவீதமும் கட்டணத்தை உயர்த்த அரசுக்கு பரிந்துரை செய்தது. இந்த குழு பரிந்துரையை அரசு ஏற்றது. இந்நிலையில் தான் இன்று கர்நாடகாவில் அரசு பஸ்களின் டிக்கெட் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

    அதன்படி கேஆர்ஆர்டிசி பஸ்களில் 25 சதவீதத்துக்கு பதில் 23 சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பெங்களூரில் ஓடும் பிஎம்டிசி பஸ்களில் 40 சதவீதத்துக்கு பதில் 33 சதவீதம் முதல் 35 சதவீதம் வரை பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வர உள்ளது. இது பிஎம்டிசி, கேஎஸ்ஆர்டிசி, என்டபிள்யூகேஆர்டிசி, கேகேஆர்டிசி என்ற 4 போக்குவரத்து கழக பஸ்களுக்கும் பொருந்தும்.

    Advertisement

    அதன்படி பிஎம்டிசி சாதாரண பஸ்களில் பெங்களூரில் இருந்து நெலமங்களா, ஒசப்பேட்டைக்கான டிக்கெட் கட்டணம் ரூ.35ல் இருந்து ரூ.44 ஆகவும், தொட்டப்பள்ளாப்புரா மற்றும் ஆனேக்கல்லிற்கு ரூ.38 ல் இருந்து ரூ.47 ஆகவும், மாகடி, மாலூருக்கான டிக்கெட் கட்டணம் ரூ.46ல் இருந்து ரூ.57 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    அதோடு சாதாரண பிஎம்டிசி பஸ்களில் குறைந்தபட்சம் கட்டணம் ரூ.6ல் இருந்து ரூ.10 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் அதிகபட்ச கட்டணம் ரூ.35ல் இருந்து ரூ.47 ஆக அதிகரித்துள்ளது. வஜ்ரா ஏசி பஸ்சில் டிக்கெட் அதிகப்டச கட்டணம் ரூ.75ல் இருந்து ரூ.90 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் 'வாயுவஜ்ரா' பஸ்களில் அதிகபட்ச கட்டணம் ரூ.405ல் இருந்து ரூ.425 ஆக அதிகரித்துள்ளது.

    Advertisement

    கேஎஸ்ஆர்டி பஸ்களை எடுத்து கொண்டால் பெங்களூரில் இருந்து கோலார், துமகூருக்கான கட்டணம் ரூ.81ல் இருந்து ரூ.100 ஆக உயர்ந்துள்ளது. மண்டாவிற்கான கட்டணம் ரூ.110ல் இருந்து 136 ஆகவும், மைசூருவுக்கான கட்டணம் ரூ.160ல் இருந்து ரூ.197 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

    கர்நாடகாவில் தற்போது 'சக்தி' திட்டம் என்ற பெயரில் மகளிருக்கான இலவச பயண திட்டம் நடைமுறையில் உள்ளது. கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் இந்த திட்டம் அமலுக்கு வந்தது. கர்நாடகா முழுவதும் பெண்கள் இலவசமாக சாதாரண அரசு பஸ்களில் பயணிக்க முடியும். இந்த திட்டத்தால் கர்நாடகா போக்குவரத்து கழகங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த இழப்பீட்டை சரிசெய்யவே கர்நாடகா அரசு தற்போது டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி உள்ளதாக பாஜக, ஜேடிஎஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.

    Advertisement

    ஆனால் இதனை கர்நாடகா முதல்வர் டிகே சிவக்குமார் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் பைரதி சுரேஷ் மறுத்தனர். டிகே சிவக்குமார் இன்று அளித்த பேட்டியில், ''கடந்த வாரம் பஸ்களுக்கு டீசல் நிரப்ப கூட பணமில்லை. பெட்ரோல் மற்றும் டீசல் விகைள் அதிகரித்துள்ளன. இதனால் பஸ் கட்டணத்தையும் நாங்கள் உயர்த்தி உள்ளோம். டீசல் விலை குறைந்தால் நாங்களும் பஸ் கட்டணத்தை குறைப்போம்'' என்று எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

    அதேபோல் போக்குவரத்து துறை அமைச்சர் பைரதி சுரேஷ் அளித்த பேட்டியில், ''தமிழ்நாடு, மகாராஷ்டிராவில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் தான் கர்நாடகாவிலும் பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. எங்களுக்கு லாபம் சம்பாதிக்கும் நோக்கம் இல்லை. இருப்பினும் பிஎம்டிசி மற்றும் கேஎஸ்ஆர்டிசி உள்ளிட்ட போக்குவரத்து கழகங்களை காப்பாற்றும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது'' என்றார்.

    Advertisement

    இருப்பினும் இவர்களின் கருத்துகளை கேட்ட பாஜகவினரோ 'சக்தி' திட்டத்தில் பெண்களின் இலவச பயணத்தால் இழப்பு ஏற்பட்டாலும் கூட அதனை டிகே சிவக்குமார் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் பைரதி சுரேஷ் வெளிப்படையாக ஒப்புககொள்ள மறுக்கின்றனர். மாறாக பெட்ரோல், டீசல் விலை உயர்வால் தான் கட்டண உயர்த்தப்பட்டுள்ளது என்று மத்திய அரசை கைகாட்டுவதாக குற்றம்சாட்டி உள்ளனர்.

    English Summary

    Karnataka Bus Fare Hikes: In Karnataka, a scheme called 'Shakti' provides free travel for women across the state. With state-run transport corporations suffering losses-to the point where they reportedly lacked the funds even to purchase diesel-Deputy Chief Minister D.K. Shivakumar expressed his concern. Against this backdrop, bus fares for state-run transport services-including in Bengaluru and throughout Karnataka-have been increased by up to Rs. 10.