கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்! ஆதிக்கம் செலுத்தும் டி.கே.சிவகுமார் ஆதரவாளர்கள்.. யார் யாருக்கு இடம்?

  • பெங்களூர்: கர்நாடகாவின் புதிய முதல்வராக டி.கே.சிவகுமார் சமீபத்தில் பொறுப்பேற்றார். இதைதொடர்ந்து தற்போது அவர் தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுகிறது. இன்று புதியதாக 18 பேர் பதவி ஏற்றுக்கொள்கிறார்கள்.

    Advertisement

    புதிய அமைச்சர்களின் பட்டியலில் யார் யாருக்கு இடம் கிடைத்திருக்கிறது? முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் ஆதரவாளர்கள் முழுமையாக ஓரம் கட்டப்பட்டிருக்கிறார்களா? என்பதை பார்க்கலாம்.

    Advertisement

    இன்று மாலை 5 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறும். இதில் பதவியேற்கும் அமைச்சர்களின் பட்டியல் முன்கூட்டியே மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி, காங்கிரஸ் கமிட்டியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோரின் ஒப்புதல்களை பெற்றிருக்கிறது.

    சாதி, மதம் மற்றும் கர்நாடாகவின் மாவட்டங்களை சமமாக பிரதிநிதித்துப்படும் வகையில் இந்த லிஸ்ட் தயாரிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக புதிய முகங்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இப்போதைக்கு முதல்வர் உட்பட 14 அமைச்சர்கள் இருக்கின்றனர். இந்த எண்ணிக்கையை 34 வரை உயர்த்திக்கொள்ளலாம். இதன் அடிப்படையில்தான் கூடுதல் அமைச்சர்கள் இன்று பதவியேற்றுக்கொள்கின்றனர்.

    Advertisement

    இந்த புதிய அமைச்சரவை மூத்த தலைவர்கள் மற்றும் இளம் எம்எல்ஏக்கள் கொண்ட கலவையாக அமைந்திருக்கிறது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைமை வெளியிட்டிருக்கும் அதிகாரப்பூர்வ பட்டியலில் இடம் பெற்றிருப்பவர்களின் பெயர்கள், எந்த தொகுதி? எந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன.

    • விஜயானந்த் காஷப்பனவர் - ஹங்குண்ட் - பஞ்சமசாலி
    • பசவராஜ் ராயரெட்டி - யெல்பர்கா - லிங்காயத்
    • எச்.சி. பாலகிருஷ்ணா - மகடி - வொக்கலிகா
    • சிவராஜ் தங்கடகி - கனககிரி - தலித்
    • அஜய் சிங் - ஜெவர்கி - ராஜ்புத்
    • எஸ்.எஸ். மல்லிகார்ஜுன் - தாவணகெரே - லிங்காயத்
    • சிவலிங்ககவுடா - அர்சிகெரே - வொக்கலிகா
    • ஜமீர் அகமது - சாமராஜப்பேட்டை - முஸ்லிம்
    • செல்வராயசுவாமி - மண்டியா - வொக்கலிகா
    • டி.ரகுமூர்த்தி - சால்லகெரே - வால்மீகி
    • லக்ஷ்மன் சவடி - அதானி - லிங்காயத்
    • காயத்திரி சாந்தகவுடா - எம்எல்சி - வொக்கலிகா
    • மது பங்காரப்பா - சொரபா - எடிகா
    • ருத்ரப்பா லாமணி - ஹாவேரி - லம்பானி
    • ரிஸ்வான் அர்ஷாத் - சிவாஜிநகர் - முஸ்லிம்
    • புட்டரங்கஷெட்டி - சாமராஜநகர் - உப்பாறை
    • சந்தோஷ் லாட் - கல்கட்கி - மராத்தா
    • மங்கலு வைத்யா - பட்கல் - தலித்
    • நரேந்திர சுவாமி - மலவள்ளி - தலித்
    • கே.எஸ். பசவண்டப்பா - மாயகொண்டா - தலித்

    ஆகியோர் புதிய அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.

    English Summary

    Karnataka Cabinet Expansion: D.K. Shivakumar recently assumed office as the new Chief Minister of Karnataka. Following this, the cabinet led by him is now being expanded. Eighteen new members are taking the oath of office today.