ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார்

  • பெங்களூர்: கர்நாடக காங்கிரஸ் கட்சிக்குள் கடந்த ஓராண்டாகவே புகைந்து வந்த 'சித்தராமையா Vs டி.கே.சிவக்குமார்' போட்டி, டெல்லி மேலிடத்தின் அதிரடித் தலையீட்டால் ஒரு சுவாரசியமான கிளைமாக்ஸை எட்டியுள்ளது. டெல்லி இந்திரா பவனில் நடந்த 6 மணிநேர மெகா பஞ்சாயத்திற்குப் பிறகு, முதலமைச்சர் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய இறுதியாகச் சம்மதித்துள்ளார். ஆனாலும், அவரது தரப்பு வேறு ஒரு டிமாண்ட்டை வைத்துள்ளதாம். இது தொடர்பாக நாம் விரிவாக பார்க்கலாம்.

    Advertisement

    கர்நாடகாவில் சித்தராமையா முதல்வராகவும் டிகே சிவக்குமார் துணை முதல்வராகவும் இருந்தனர். இருப்பினும், 2.5 ஆண்டுகளுக்கு பிறகு டிகே சிவக்குமாரை முதல்வர் பதவிக்கு கொண்டு வர வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். சமீப காலங்களில் இந்த மோதல் உச்சத்திற்கு போனது. டெல்லியில் முகாமிட்ட சிவக்குமார் ஆதரவாளர்கள் இது தொடர்பாக டெல்லி மேலிடத்திடம் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தினர்.

    Advertisement

    6 மணி நேரம்

    இரு தரப்பையும் சமாதானப்படுத்த டெல்லி மேலிடம் இருவரையும் அழைத்தது. டெல்லி இந்திரா பவனில் இது தொடர்பாக ஆலோசனை கூட்டமும் நடந்தது. சுமார் 6 மணி நேரம் விரிவான ஆலோசனை நடந்த நிலையில், சித்தராமையாவை ராஜினாமா செய்ய சம்மதிக்க வைத்தேன். டெல்லி மேலிடத்தின் ஃபார்முலாப்படி, சித்தராமையாவுக்கு ராஜ்யசபா எம்பி பதவி வழங்கப்பட்டு, டெல்லியில் தேசிய அளவிலான முக்கியப் பொறுப்பு வழங்கப்படவுள்ளது. ஆனால், அதை ஏற்கிறாரா இல்லையா என்பது தெளிவாக தெரியவில்லை.

    "மேலிட உத்தரவுக்குக் கட்டுப்படுவேன்" எனச் சித்தராமையா தனது விசுவாசிகளிடம் உருகினாலும், அவர் முறைப்படி ராஜினாமா கடிதத்தை வழங்குவதற்கு முன் அவரது ஆதரவாளர்கள் டெல்லிக்கு பல்வேறு கோரிக்கைகளை அனுப்பியுள்ளனர். அதாவது டி.கே.சிவக்குமார் முதலமைச்சராகப் பதவியேற்றால், ஒட்டுமொத்த அதிகாரமும் அவரது கைகளுக்குச் சென்றுவிடும் என சித்தராமையா முகாம் அஞ்சுகிறது.

    Advertisement

    சித்தராமையா

    இதைக் கட்டுப்படுத்த, டிகே சிவக்குமார் முதல்வர்.. அவருக்கு கீழ் பல துணை முதலமைச்சர்களை நியமிக்க வேண்டும் எனச் சித்தராமையா தரப்பு ஒற்றைக் காலில் நிற்கிறது. அதுமட்டுமன்றி, டி.கே.எஸ் முதலமைச்சரான பிறகு காலியாகும் கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவர் நாற்காலியையும் தங்களின் சாய்ஸ் நபருக்கே வழங்க வேண்டும் எனப் பிரஷர் கொடுத்து வருகின்றனர்.

    மறுபுறம், இந்த மல்டிபிள் துணை சிஎம் கோரிக்கையை டி.கே.சிவக்குமார் முற்றிலுமாக நிராகரித்துள்ளார். தனக்குக் கீழே பல அதிகார மையங்கள் உருவாவதை அவர் விரும்பவில்லை. மேலிடம் மிகவும் வற்புறுத்தினால், ஒரே ஒரு துணை முதலமைச்சரை மட்டும் நியமிக்க அவர் சம்மதிக்கலாம்.. ஆனால் பல துணை முதல்வர்களுக்கு சான்ஸே இல்லை எனத் திட்டவட்டமாகக் கூறிவிட்டார். இன்று முழுவதும் டெல்லியிலேயே முகாமிட்டுள்ள டிகே சிவக்குமார், நாளை (வியாழக்கிழமை) அதிகாலை பெங்களூர் திரும்பிச் சித்தராமையாவுடன் ஒரு முக்கியப் பிரேக்பாஸ்ட் மீட்டிங்கில் பங்கேற்கவுள்ளார்.

    Advertisement

    ராகுல்- பிரியங்கா

    பொதுவாக முக்கிய விவகாரங்களில் ராகுல்- பிரியங்கா நிலைப்பாடு ஒரே மாதிரி இருக்கும். ஆனால், கர்நாடகா விவகாரத்தில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்திக்கு இடையே நீடித்த கருத்து வேறுபாடுகள் நிலவியுள்ளன. அதாவது கர்நாடகாவில் தேர்தல் வர இன்னும் இரண்டு ஆண்டுகளே உள்ள சூழலில், 2023ல் ஒக்கலிகா வாக்குகளைத் திரட்டித் தந்த டி.கே.சிவக்குமாருக்கு முதலமைச்சராக தன்னை நிரூபிக்கப் போதிய கால அவகாசம் தர வேண்டும் என நினைக்கும் பிரியங்கா காந்தி இந்த முதல்வர் மாற்றத்திற்கே ஆதரவாக நின்றிருக்கிறார்.

    ராகுல் தயக்கம்

    ஆனால் ராகுல் காந்தியோ, காங்கிரஸின் தற்போதைய முதலமைச்சர்களில் சித்தராமையா மட்டுமே ஒரே ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத் தலைவர் என்பதால், அவரை மாற்றுவது நாடாளுமன்றத் தேர்தல் கணக்குகளைப் பாதிக்கும் எனத் தொடக்கத்தில் தயக்கம் காட்டியுள்ளார். இறுதியாக சோனியா காந்தியிடம் நடத்தப்பட்ட அவசர ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகே இந்த ஃபார்முலா லாக் செய்யப்பட்டுள்ளது.

    Advertisement

    தற்போது கர்நாடக காங்கிரஸ் பொறுப்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா இன்று மதியம் பெங்களூர் வரவுள்ள நிலையில், அடுத்த ஒரு வாரத்திற்குள் கர்நாடகாவில் புதிய முதல்வர் பதவியேற்பார்.

    English Summary

    Karnataka CM Siddaramaiah agreed to resign, paving the way for Deputy CM D.K. Shivakumar to take over(கர்நாடகாவில் முதல்வர் பதவியில் ஏற்பட்ட மாற்றம்): Karnataka Congress Leadership Change latest news in tamil.