தமிழகம் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும்! மேகதாது விவகாரத்தில்.. வாயை விட்ட டிகே சிவக்குமார்

  • பெங்களூர்: தமிழ்நாடு கர்நாடகா இடையே இப்போது மேகதாது விவகாரம் மீண்டும் பெரிதாக வெடித்துள்ளது. தமிழ்நாடு என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும்... மேகதாதுவில் அணை கட்டும் எங்களது முயற்சியை அவர்களால் தடுக்கவே முடியாது என்று டெல்லியில் கர்நாடகத் துணை முதல்வர் டி கே சிவக்குமார் கூறியுள்ளார். இது அரசியல் அரங்கில் மீண்டும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

    Advertisement

    தமிழ்நாடு கர்நாடகா இடையே பல ஆண்டுகளாகவே இருக்கும் முக்கியமான பிரச்சினை காவிரி. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்த போதிலும், கர்நாடகா விடாமல் பிரச்சினை செய்து வருகிறது. குறிப்பாக மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்று அடம்பிடித்து வருகிறது. இந்த விவகாரத்தில் டிகே சிவக்குமார் இப்போது கூறியுள்ள கருத்துகளே சர்ச்சையைக் கிளப்பியது.

    Advertisement

    சர்ச்சை பேச்சு

    கர்நாடகாவில் தங்களின் 3 ஆண்டுக்காலச் சாதனைகளைப் பட்டியலிட்ட கையோடு, "மேகதாது அணைக்கான புதிய விரிவான திட்ட அறிக்கையை இன்னும் 10 நாட்களில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப் போகிறோம். மத்திய நீர்வள ஆணையத்தின் ஒப்புதல் கிடைத்த உடனே பூமி பூஜை போட்டு வேலையைத் தொடங்குவோம். இதில் தலையிடத் தமிழ்நாட்டிற்கு எவ்விதத் தார்மீக உரிமையும் இல்லை. தமிழ்நாடு என்ன செய்தாலும் அவர்களால் இதைத் தடுக்க முடியாது" என டி.கே.சிவக்குமார் பெங்களூரில் கூறியது சலசலப்பை உருவாக்கியது.

    பின்னணி

    டி.கே.சிவக்குமாரின் இந்த நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் அண்மையில் வழங்கிய ஒரு முக்கிய தீர்ப்புதான் முக்கிய காரணமாக இருக்கிறது. அதாவது கடந்த 2025 நவம்பர் 13ம் தேதி மேகதாது அணைத் திட்டம் இன்னும் ஆரம்பக் கட்டத்தில் இருப்பதால், அது முந்தைய காவிரித் தீர்ப்புகளை மீறுகிறதா இல்லையா என்பதை மத்திய நீர்வள ஆணையம் போன்ற நிபுணத்துவக் குழுதான் தீர்மானிக்க வேண்டும் எனக் கூறியது.

    Advertisement

    இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மறுஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் அடியோடு தள்ளுபடி செய்தது. இதுதான் கர்நாடகாவிற்குப் புதிய தெம்பைக் கொடுத்துள்ளது. இந்தத் தீர்ப்பிற்கு பிறகே கர்நாடகா இதுபோல பேசி வருகிறது. மறுபுறம் தமிழ்நாடு அரசும் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளது. முதல்வர் சி.ஜோசப் விஜய் நீர்வளத்துறை, சட்டத்துறை மற்றும் காவிரி சட்ட வல்லுநர்களுடன் ஒரு அவசர ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டினார்.

    காவிரி நடுவர் மன்றம்

    காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் 2018ம் ஆண்டு இறுதித் தீர்ப்பின்படி, கீழ்மடை மாநிலமான தமிழ்நாட்டின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றிப் புதிய நீர்த்தேக்கங்களைக் கர்நாடகா ஒருதலைப்பட்சமாகக் கட்டிவிட முடியாது என்பதுதான் தமிழகத்தின் வாதமாக இருக்கிறது. நீதிமன்றத்தின் தற்போதைய உத்தரவை விரிவாக ஆராய்ந்து, மத்திய அரசிடம் கர்நாடகா புதிய டிபிஆர் தாக்கல் செய்ய முற்படும் போதே, அதனைத் தடுத்து நிறுத்த அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்கத் தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

    Advertisement

    தமிழ்நாடு

    இந்த விவகாரம் வெறும் நிர்வாகப் பிரச்சினையாக மட்டும் நில்லாமல், தமிழ்நாட்டின் 14 டெல்டா மாவட்டங்களின் 5 கோடி மக்களின் குடிநீர் மற்றும் விவசாய வாழ்வாதாரப் பிரச்சினையாக மாறியுள்ளது. மறுபுறம், தமிழ்நாட்டில் விஜய்யின் தவெக அரசில் காங்கிரஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. விஜய் அரசில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் மேகதாதுவை எதிர்க்கிறது. அதேநேரம் கர்நாடகாவில் உள்ள அதே காங்கிரஸ் அரசு மேகதாது திட்டம் வேண்டும் என அடம் பிடிக்கிறது. அதற்கு பெங்களூர் குடிநீரை ஒரு காரணமாகச் சொல்கிறார்கள்.

    இந்த இக்கட்டான சூழலைப் பயன்படுத்தி, தவெக அரசை லாக் செய்ய திமுக, அதிமுக, பாமக மற்றும் நாம் தமிழர் போன்ற எதிர்க்கட்சிகள் களம் இறங்கியுள்ளன. மேலும், மேகதாது விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையைக் காக்க உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என இடதுசாரிகள் விஜய் அரசுக்குக் கடுமையான பிரஷர் கொடுத்து வருகின்றன.

    English Summary

    Karnataka Deputy CM D.K. Shivakumar announced plans to submit a fresh Mekedatu DPR to the Centre within 10 days(மேகதாது விவகாரத்தில் தமிழ்நாடு அரசை சீண்டும் கர்நாடகா): DK Shivakumar on Mekedatu Dam latest news in tamil.