கர்நாடகாவில் இப்படி மனைவி? கணவனை கொன்று, உயிர் துடிக்கும் மகன் பக்கத்தில் படுத்தபடி.. இன்சுலின் வேற

  • பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் ஒரு அப்பார்ட்மெண்ட்டில் இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது.. தாலி கட்டிய கணவர் கொலை செய்யப்பட்டு விழுந்து கிடந்துள்ளார். பெற்ற மகன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியிருக்கிறார்.. ஆனால், எதையும் கண்டுகொள்ளாமல், அதே இடத்தில் அந்த பெண் செல்போனில் ரீல்ஸ் பார்த்து கொண்டிருந்தாராம். நினைத்து கூட பார்க்க முடியாத இந்த பயங்கரம் கர்நாடகா மாநிலத்தில் நடந்துள்ளது.

    Advertisement

    கர்நாடகா மாநிலம் அப்பார்தார்வாட் பல்கலைக்கழக சாலை அருகே உள்ளது அந்த அப்பார்ட்மெண்ட்.. இங்கு வசித்து வருபவர் கிரண் ஹொன்னன்னவர்... இவர் ஒரு டாக்டர்.. அங்குள்ள தனியார் மருத்துவமனையில் மயக்க மருந்து நிபுணராக பணியாற்றி வருபவர்..

    Advertisement

    கர்நாடகா டாக்டர் தம்பதி

    இவரது மனைவி பெயர் பிரியா.. இவரும் டாக்டர்.. கண் சிகிச்சை நிபுணராக உள்ளார்.. இந்த தம்பதிக்கு 10 வயதில் நிகித் உட்பட மூன்று மகன்கள் உள்ளனர்.

    நேற்றைய தினம் கிரணின் உறவினர்கள் அவரை தொடர்புகொள்ள முயற்சி செய்துள்ளனர். ஆனால், பிரியா போனை எடுத்து, கணவர் ரெஸ்ட் எடுத்து கொண்டிருப்பதாக சொல்லி உள்ளார். மறுபடியும் உறவினர்கள் போன் செய்துள்ளனர்.. ஆனால், நீண்ட நேரமாகியும் எந்த பதிலும் வரவில்லை..

    இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் அந்த அடுக்குமாடி வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளனர். அங்கே கிரண் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

    Advertisement

    பிரியா மகன் ரத்த வெள்ளத்தில்

    அதே ரூமில், ரத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மகன் நிகித் விழுந்து கிடந்துள்ளான். மகனுக்கு பக்கத்தில் படுத்துக்கொண்டு, பிரியா தனது செல்போனை பார்த்துக்கொண்டிருந்தாராம்.. இதை பார்த்து மொத்த பேரும் அதிர்ச்சியில் உறைந்துவீட்டனர்.. உடனே இது குறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீஸ் கமிஷனர் சசிகுமார் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயமடைந்த சிறுவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த கிரணின் உடல் போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    இன்சுலின் ஊசி

    பிரியாவே கணவனையும், மகனையும் குத்தி கொன்றிருக்கலாம் என்பதால்,பிரியாவிடம் விசாரணை ஆரம்பமானது. ஆனால், அவர் முன்னுக்குப் பின் முரணான பதில்களை அளித்துள்ளார்..

    இதையடுத்து, அடுத்தக்கட்ட விசாரணையை தீவிரப்படுத்தினார்கள்.. இதில்தான் தற்போது கூடுதல் தகவல்கள் வெளியாகி உள்ளன.. பிரியா தன் கணவரைக் கொன்று, மகனைக் காயப்படுத்திய பிறகு, பிரியா தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்ளவோ அல்லது உயிரை மாய்த்துக் கொள்ளவோ முயற்சி செய்திருக்கலாம் என்று காவல்துறை கருதுகிறது.

    சிகிச்சையில் பிரியா

    அதனால்தான் பிரியா தனக்குத்தானே இன்சுலின் ஊசி செலுத்திக்கொண்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் உடனடியாக பிரியாவை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.. அவர் சுயநினைவுடன் இல்லாததால், அவரிடம் முழுமையான வாக்குமூலத்தைப் பெறுவதிலும் சிக்கல் நீடிக்கிறதாம்.. டாக்டர்களின் அனுமதி கிடைத்தவுடன் அவரிடம் விசாரணை நடத்த காவல்துறை திட்டமிட்டுள்ளது.

    Advertisement

    அதேபோல சம்பவம் நடந்த வீட்டில் வெளியாட்கள் யாரும் உள்ளே நுழைந்ததற்கான தடயங்கள் இல்லை என்பது விசாரணையில் உறுதியாகியுள்ளது. அந்த அப்பார்ட்மெண்ட்டின் சிசிடிவி காட்சிகளிலும் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.. எனவே இந்த கொடூரத்தை செய்தது வீட்டிற்குள்ளேயே இருந்த நபர்கள் என்பதை உறுதிப்படுத்துகின்றன.

    மனநலம் பாதிப்பா?

    அதேபோல பிரியாவின் மனநிலை குறித்த சந்தேகங்களும் எழுப்பப்பட்டுள்ளன. மகனைத் தாக்கிவிட்டு, அவன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நிலையில் அவர் அமைதியாக செல்போனைப் பார்த்துக் கொண்டிருந்த விதம், அவருக்கு மனநிலை பிரச்சனையாக இருக்குமோ? என்ற சந்தேகமும் கிளம்பி உள்ளது.. மற்றொருபக்கம் குடும்பத் தகராறு அல்லது தனிப்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக இந்தச் சம்பவம் நடந்திருக்கலாமா என்ற கோணத்தில்தான் போலீசார் மும்முரமாகி வருகிறார்கள்.

    Advertisement

    தார்வாட் காவல்துறை ஆணையர் என். சசிகுமார் தலைமையிலான குழுவினர், தடயவியல் நிபுணர்களின் அறிக்கைகளையும், மருத்துவமனை பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். பிரியா குணமடைந்த பிறகு அளிக்கப்படும் வாக்குமூலமே, இந்த கொடூர சம்பவத்திற்கான உண்மையான காரணத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கர்நாடகாவின் மருத்துவ வட்டாரத்தையே இந்த சம்பவம் உலுக்கி எடுத்து வருகிறது.. எனினும், காவல்துறையினரால் மிகுந்த கவனத்துடனும், தீவிரத்தன்மையுடன் இந்த வழக்கு விசாரணை கையாளப்பட்டு வருகிறது....!!

    Topics: #husband

    English Summary

    Karnataka Doctor Wife Kills Husband, Lies Beside Injured Son After Insulin Shot