நீதிபதி முன் ஏடாகூடமாய் பேசிய வக்கீலுக்கு.. வித்தியாசமான தண்டனை! நீதிமன்றத்தின் புது யோசனை!

  • பெங்களூர்: கர்நாடகாவில் நீதிபதி முன் மிரட்டல் தொனியில் பேசிய வழக்கறிஞருக்கு நீதிமன்றம் சரியான பாடத்தை புகட்டியிருக்கிறது. அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் தண்டனை பரவலாக கவனம் பெற்றிருக்கிறது.

    Advertisement

    கொப்பல் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கை, தங்களுக்கு சாதகமாக வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக் கேரி குற்றவாளிகள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

    Advertisement

    இந்த மனு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்திருந்தது. அப்போது குற்றவாளிகள் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.ரங்கசாமி ஆஜராகியிருந்தார். நீதிமன்றம் வந்தோமா.. சரியான பாயிண்ட்டை வைத்து வாதாடினோமா என்று இல்லாமல்.. கருப்பு பட ஆர்.ஜே.பாலாஜி் மாதிரி, தடாலடியாக நடந்துக்கொண்டார். நீதிமன்றம் இந்த மனுவை நிராகரித்த போது.. ரங்கசாமி, நீதிபதியை மிரட்டும் தொனியில் பேசியிருந்தார். மட்டுமல்லாது நீதிமன்றத்தின் கண்ணியத்தை குறைக்கும் வகையிலும் அவர் நடந்துக்கொண்டார்.

    இந்த விவகாரம் இத்துடன் முடிந்துவிடவில்லை. வழக்கு மேல்முறையீட்டுக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஹன்சதே சஞ்சீவ்குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கறிஞர் ரங்கசாமி கீழமை நீதிமன்றத்தில் செய்த அலப்பறைகள் நீதிபதிகளின் காதுகளுக்கு ஏற்கெனவே வந்து சேர்ந்திருந்தது.

    Advertisement

    விசாரணையில் ரங்கசாமியின் நடத்தைக்கு கடும் கண்டனம் தெரிவித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், "வழக்கறிஞர்கள் என்பவர்கள் நீதியை நிலைநாட்டுவதில் நீதிமன்றத்தின் சமமான பங்காளிகள். எனவேதான் அவர்கள் சமுதாயத்தில் சிறப்பு அந்தஸ்தை அனுபவிக்கிறார்கள். எனவே, நீதிமன்றங்கள் சீராக இயங்குவதை உறுதி செய்வதும் கண்ணியமாகவும் நாகரிகமாகவும் வாதாடுவதும் அவர்களின் கடமை" என்று ரங்கசாமிக்கு குட்டு வைத்திருந்தனர்.

    பின்னர், ரங்கசாமி தனது நடத்தைக்கு நீதிபதிகளிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். எனவே அவர் மீது குற்றவியல் நடவடிக்கையை தொடர விரும்பாத நீதிமன்றம், அவர் தவறுக்காக ரூ.1,000 அபராதம் விதித்தது. மட்டுமல்லாது அரசு நிலத்திலோ அல்லது பள்ளி, கல்லூரி வளாகங்களிலோ 1,000 பழம் தரும் மரக்கன்றுகளை நட வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

    Advertisement

    அலப்பறை செய்த வழக்கறிஞருக்கு பாடம் புகட்டும் விதமாக மரக்கன்றுகளை நட சொல்லி நீதிமன்றம் தண்டனை கொடுத்திருப்பது, பரவலாக வரவேற்பையும் கவனத்தையும் பெற்றிருக்கிறது.

    English Summary

    Karnataka: The court has taught a fitting lesson to a lawyer who spoke in a threatening tone before a judge in Karnataka. The punishment imposed on him has garnered widespread attention.