பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்றின் பாதிப்பு அதிகரித்து வருவது பெரும் சுகாதார கவலையை ஏற்படுத்தியுள்ளது. 2025-26 ஆம் ஆண்டின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, இந்த குறிப்பிட்ட வயதினரில் சுமார் 7000க்கும் அதிகமான பேருக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது எப்படி பரவியது என்ற விவரம் வெளியாகி உள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சி, வாழ்க்கைமுறை மாற்றங்கள் மற்றும் போதிய விழிப்புணர்வின்மை காரணமாக இந்த வயதினரிடையே எச்.ஐ.வி பரவல் அதிகரித்துள்ளதாக மாநில சுகாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
வீட்டை விட்டு வெளியேறி கல்லூரி விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்களிடையே போதிய பாதுகாப்பு விழிப்புணர்வு இல்லாததால், சில குறிப்பிட்ட விடுதிகளில் அதிக அளவிலான தொற்று பரவல் வேகமெடுத்துள்ளது. இளம் ஆண்களிடையே.. ஆண் - ஆண் உடலுறவு வழியிலான தொற்று பரவல் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அதேபோல் பெண் - பெண் உறவுகளும் இதற்கு காரணமாகி உள்ளது. இன்றைய டிஜிட்டல் யுகத்தில், பெங்களூர் போன்ற பெரிய நகரங்களில் டேட்டிங் செயலிகள் மூலம் அறிமுகமில்லாத நபர்களுடன் உடலுறவு கொள்ளும் பழக்கம் அதிகரித்துள்ளது. போலி கணக்குகள் பயன்படுத்தப்படுவதால், தொற்று கண்டறியப்பட்டால் தொடர்புகளைக் கண்டறிவது மிகவும் சவாலாக மாறுகிறது. பல இளைஞர்கள் தங்களுக்கு எச்.ஐ.வி பாதிப்பு வராது என்ற தவறான நம்பிக்கையில் உள்ளனர். மேலும், எச்.ஐ.வி பரவும் ஆபத்தை அதிகரிக்கும் பிற பால்வினை நோய்கள் (STIs) குறித்த விழிப்புணர்வு குறைவாக இருப்பதும், முறையான பாதுகாப்பு சாதனங்களை பயன்படுத்தாததும் முக்கியக் காரணமாகும். ஆண்கள் ஒரே நேரத்தில் பல பெண் பாலியல் தொழிலாளர்களுடனும் தொடர்பு வைப்பது காரணமாக உள்ளது. அதேபோல் பெண்கள் பல ஆண் நண்பர்களுடன் தொடர்பு வைப்பதும் காரணமாக பார்க்கப்படுகிறது. இது வெவ்வேறு குழுக்களிடையே சங்கிலி போல பரவி, வைரஸ் இளைஞர்களிடையே அதிவேகமாகப் பரவ வழிவகுக்கிறது. பலர் பரிசோதனை செய்யாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். கர்நாடகாவில் ஒட்டுமொத்தமாக 54,000 க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பதை அறியாமலேயே வாழ்ந்து வருகின்றனர். இதனால் அவர்கள் அறியாமலேயே மற்றவர்களுக்கும் வைரஸைப் பரப்பும் சூழல் உருவாகிறது. கடந்த சில வாரங்களாவே கர்நாடகாவில் 7,000-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு எச்.ஐ.வி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, மேலும் கல்லூரிகளில் கட்டாயப் பரிசோதனை நடத்தப்படவுள்ளது என்ற செய்திகள் பரவின. இதனைத் தொடர்ந்து, ஜூலை 29, 2026 அன்று கர்நாடக மாநில எய்ட்ஸ் தடுப்புச் சங்கம் மற்றும் அதன் திட்ட இயக்குநர் பத்மா பசவந்தப்பா ஆகியோர் ஒரு அதிகாரப்பூர்வ விளக்க வீடியோவையும் அறிவிப்பையும் வெளியிட்டனர்.. 7,000 கல்லூரி மாணவர்களுக்கு எச்.ஐ.வி உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், கல்லூரிகளில் கட்டாயப் பரிசோதனை நடத்தப்படவுள்ளதாகவும் பரவிய செய்திகள் பாதி மட்டுமே உண்மையானது. இதெல்லாம் ஒரே நேரத்தில் பரவிய வைரஸ் அல்ல.. மொத்தமாக டார்கெட் செய்து எடுக்கப்பட்ட சோதனையில் கண்டறியப்பட்ட முடிவுகள். அதாவது.. ஒரே நாளில் இத்தனை பேருக்கு எய்ட்ஸ் வரவில்லை. மாறாக வேறு வேறு மாதங்களில், வேறு வேறு இடங்களில் பரவிய எய்ட்ஸ் பாதிப்புகள் இவை என்று விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. கல்லூரிகளில் எச்.ஐ.வி பரிசோதனை ஒருபோதும் கட்டாயமாக்கப்படவில்லை.. அது முற்றிலும் சுய விருப்பத்தின் பேரிலேயே நடத்தப்படுகிறது என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.தொற்று பரவலுக்கான முதன்மை காரணங்கள்
கல்லூரி விடுதிகளில் உள்ள சூழல்
ஆண்களுடனான உடலுறவு
டேட்டிங் செயலிகள் மற்றும் அநாமதேய தொடர்புகள்
பாதுகாப்பற்ற உடலுறவு மற்றும் குறைந்த ஆபத்து உணர்வு
பாலியல் உறவுகள்
தாமதமான பரிசோதனை