கர்நாடகா ஐஏஎஸ் அதிகாரி ஞானேந்திர குமார் திடீர் மாயம்.. முறைகேடு சர்ச்சைக்கு நடுவே பரபரப்பு

  • பெங்களூர்: கர்நாடகாவில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வரும் ஞானேந்திர குமார் கங்வார் திடீரென்று மாயமாகி உள்ளது. பெங்களூரில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் பயணித்த ஐஏஎஸ் அதிகாரி ஞானேந்திர குமார் கங்வாரை யாராலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இவர் கர்நாடகா அரசு பணியாளர் தேர்வாணையத்தி்ல் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக பணியாற்றியபோது பல்வேறு சர்ச்சைகள் எழுந்து விசாரணை தீவிரமாகி வரும் நிலையில் மாயமாகி உள்ளது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.

    Advertisement

    கர்நாடகாவில் தொழில் மற்றும் வணிகத்துறையில் சிறு-குறு நடுத்தர தொழில் துறையின் இயக்குநராக பணியாற்றி வருபவர் ஞானேந்திர குமார் ஐஏஎஸ். இவர் கடந்த 2016ம் ஆண்டின் பேட்ச்சை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஆவார்.

    Advertisement

    கடந்த 20ம் தேதி பெங்களூர் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு இண்டிகோ விமானத்தில் ஞானேந்திர குமார் கங்வார் பயணித்தார். அதன்பிறகு அவர் மாயமாகி உள்ளார். குடும்பத்தினர், அதிகாரிகளால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் எங்கு இருக்கிறார்? என்பது தெரியவில்லை.

    இதுதொடர்பாக பெங்களூர் நகர மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ''ஞானேந்திர குமார் கங்வார் ஐஏஎஸ் பெங்களூர் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் ஆகஸ்ட் 20ம் தேி சென்றார். அங்கிருந்து இண்டிகோ விமானத்தில் மாலை 3 மணிக்கு டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். டெல்லியில் மாலை 6 மணிக்கு அவர் தரையிறங்கினார். வாடகை காரில் அவர் விமான நிலையத்தில் இருந்து சென்ற நிலையில் அதன்பிறகு மாயமானார்.

    Advertisement

    ஞானேந்திர குமார் ஐஏஎஸ் கடைசி நேரத்தில் இண்டிகோ விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்தார். எச்டிஎப்சி வங்கி கணக்கில் இருந்து ரூ.30,200க்கு டிக்கெட் எடுத்துள்ளார். ஞானேந்திர குமார் கங்வார் கடைசியாக பயணித்த வாடகை காரை தேடி வருகிறோம். தற்போது வரை குடும்பத்தினர் யாரும் புகார் அளிக்கவில்லை. அவர்கள் யார் மீதும் சந்தேகம் தெரிவிக்கவில்லை.'' என்று கூறியுள்ளனர்.

    இதுபற்றி கர்நாடகாவின் உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கேவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்பாது அவர், ''ஞானேந்திர குமார் கங்வார் ஐஏஎஸ் கடந்த 2 முதல் 3 நாட்களாக மாயமாகி உள்ளார். குடும்பத்தினர் யாரும் புகார் அளிக்கவில்லை. தற்போது வரை அவர் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது'' என்றார்.

    Advertisement

    தற்போது மாயமாகி உள்ள ஞானேந்திர குமார் கங்வார் ஐஏஎஸ் கர்நாடகாவின் அரசு பணியாளர் தேர்வாணையத்தில் பணியாற்றினார். கர்நாடகா அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக அவர் பணியாற்றினார். கடந்த மார்ச் மாதம் அவர் அந்த பணியில் இருந்து மாற்றப்பட்டார். இவர் கர்நாடகா அரசு பணியாளர் தேர்வாணையத்தில் பணியாற்றியபோது அங்கு பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்தன.

    குறிப்பாக கர்நாடகா அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக இருக்கும் சிவசங்கரப்பா சாகுகார் தனது மகளை போலி வருமான சான்று அடிப்படையில் அரசு பணியில் சேர்த்து சர்ச்சையில் சிக்கினார். சிவசங்கரப்பா சாகுகார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் மீதானஅடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக கர்நாடகா அமைச்சரவை ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டிற்கு பரிந்துரை செய்துள்ளது.

    Advertisement

    இதனால் இந்த விவகாரத்தில் ஞானேந்திர குமார் ஐஏஎஸ் தலைமறைவாகி உள்ளாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இருப்பினும் அதுபற்றி அதிகாரிகள் யாரும் உறுதி செய்யவில்லை. ஞானேந்திர குமார் கங்வார் ஐஏஎஸ்ஸை தேடும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    English Summary

    Gyanendra Kumar Gangwar, an IAS officer serving in Karnataka, has suddenly gone missing. He has been unreachable since traveling by flight from Bengaluru to Delhi. His disappearance has raised various suspicions, particularly as it coincides with an intensifying investigation into controversies that arose during his tenure as the Controller of Examinations for the Karnataka Public Service Commission.