மானியம் வாங்கினால் பத்தாது! கன்னடர்களுக்கு வேலை தரணும் IT கம்பெனிகளுக்கு கர்நாடக அரசு திட்டவட்டம்

  • பெங்களூர்: கர்நாடகாவில் செயல்படும் ஐடி நிறுவனங்கள், அரசிடம் மானியங்கள் மற்றும் சலுகைகளைப் பெறும்போது, தகுதியுள்ள உள்ளூர் கன்னடர்களுக்கும் வேலைவாய்ப்பில் உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று அமைச்சர் பிரியங்க் கார்கே வலியுறுத்தியுள்ளார். இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்.

    Advertisement

    இந்தியாவிலேயே ஐடி தலைநகராக கர்நாடக தலைநகர் பெங்களூர் இருக்கிறது. இந்தியாவின் டாப் ஐடி நிறுவனங்கள் பெங்களூரில் தான் தனது அலுவலகங்களை வைத்துள்ளன. இதனால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இளைஞர்கள் பெங்களூர் செல்வது வாடிக்கையாக இருக்கிறது.

    Advertisement

    கர்நாடக அமைச்சர்

    இதற்கிடையே பெங்களூரில் உள்ள சில நிறுவனங்கள், கன்னட இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சமூக வலைத்தளங்களில் இது தொடர்பாக சிலர் தங்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர். இது கர்நாடகாவில் பெரிய விஷயமாக வெடித்துள்ளது. இந்தச் சூழலில் தான் கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே இது தொடர்பாக சில முக்கிய கருத்துகளை கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர், "பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனங்களுக்கு நாங்கள் ஒன்றை மட்டும் தெளிவாக சொல்லி கொள்கிறோம். நீங்கள் இங்கு தொழில் தொடங்கும்போது, மாநிலத்தை சேர்ந்த தகுதியானவர்களையும் வேலைக்கு எடுத்து கொள்வது குறித்து பரிசீலிக்க வேண்டும். எங்களிடமிருந்து மானியங்களையும் சலுகைகளையும் பெறுகிறீர்கள் கர்நாடகாவில் உங்கள் அலுவலகம் இருக்கிறது என்றால், தகுதியுள்ள உள்ளூர் விண்ணப்பதாரர்களை 100 சதவீதம் பரிசீலிக்க வேண்டும்.

    Advertisement

    மாறி வரும் ஐடி

    ஏஐ வேகமாக வளர்ந்து வரும் சூழலில் ஐடி சந்தை மொத்தமாக மாறி வருகிறது. புதிய வேலைவாய்ப்புகள் முன்பு இருந்ததைவிட 40 முதல் 50 சதவீதம் வரை குறைந்துள்ளதுள்ளன. இந்த மாற்றங்களை எதிர்கொள்ள, உள்ளூர் இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துவது அவசியம். புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப இளைஞர்களை தயார்படுத்த கர்நாடக அரசு திறன் மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

    கர்நாடக அரசின் ரூ.300 கோடி மதிப்பிலான 'நிபுணா கர்நாடகா' திட்டத்தின் மூலம் உள்ளூர் இளைஞர்கள் திறன்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது எந்த துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளதோ.. அதற்கேற்ப பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஏற்கனவே இத்திட்டத்தில் இணைந்துள்ளனர்.

    Advertisement

    ஓபன்ஏஐ, கூகுளின் ஜெமினி, ஆன்த்ரோபிக் உள்ளிட்ட நிறுவனங்களுடன் தொடர்பில் இருந்து, புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ற பயிற்சிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். உள்ளூரில் திறன்களை வளர்த்து, உலகளவில் வேலைவாய்ப்புகளை பெறுவதே இத்திட்டத்தின் நோக்கம்" என்று விளக்கியுள்ளார்.

    பின்னணி

    சமீபத்தில் இது தொடர்பாக இணையத்தில் வீடியோ ஒன்று பரவியது. அதில் சில நிறுவனங்கள் கன்னட மொழி பேசும் இளைஞர்களை விட அண்டை மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதாக பெண் ஒருவர் குற்றம்சாட்டியிருந்தார். கர்நாடகாவிலேயே வேலைவாய்ப்புகளில் உள்ளூர் இளைஞர்கள் புறக்கணிக்கப்படுவதாக புகார்கள் எழுந்து, விவாதத்தை உருவாக்கியது.

    டிகே சிவக்குமார்

    இந்த விவகாரத்தில் ஏற்கனவே கர்நாடக முதல்வர் டிகே சிவகுமார் எச்சரிக்கை விடுத்திருந்தார். அதாவது தகுதியுள்ள கன்னட இளைஞர்கள் புறக்கணிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிவகுமார் எச்சரித்திருந்தார். உள்ளூர் இளைஞர்களுக்கு கல்வித் தகுதி மற்றும் திறன்களுக்கு ஏற்ற வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று துணை முதல்வர் ஜி. பரமேஸ்வராவும் வலியுறுத்தியுள்ளார்.

    Advertisement

    இதற்கிடையே தனியார் துறையில் உள்ளூர் மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு 2024ல் கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. ஆனால், தொழில்துறையினரின் எதிர்ப்பைத் தொடர்ந்து அது நிறுத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Karnataka Minister Priyank Kharge has urged IT companies receiving state subsidies and incentives to consider eligible local candidates(கர்நாடகா ஐடி வேலைகள்): Karnataka IT Jobs latest news in tamil.