இட்லி, வடை, சாம்பார்.. கர்நாடகாவில் நாளை நடக்கும் மிக பெரிய அரசியல் மாற்றம்! ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்

  • பெங்களூர்: கர்நாடக காங்கிரஸ் அரசில் கடந்த ஓராண்டாகவே நீடித்து வந்த முதலமைச்சர் நாற்காலிப் போட்டி ஒரு வழியாக முடிவுக்கு வருகிறது. பெங்களூரில் உள்ள முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லமான காவேரியில் நாளை (வியாழக்கிழமை) காலை நடக்கவிருக்கும் ஒரு பிரேக்பாஸ்ட் மீட்டிங்கை நோக்கி நகர்ந்துள்ளது. இட்லி, வடை, சாம்பார் என உணவுகளுடன் அரங்கேறவிருக்கும் இந்த பிரேக்பாஸ்ட் அரசியல் சந்திப்பு, ஒரு மிகப் பெரிய ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது.

    Advertisement

    கடந்த சில நாட்களாகவே கர்நாடகா காங்கிரஸ் தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டிருந்தனர். முதல்வர் மாற்றம் குறித்து அங்குத் தீவிர ஆலோசனை நடந்தது. டெல்லி இந்திரா பவனில் கிட்டத்தட்ட 6 மணிநேரம் நடந்த மெகா பஞ்சாயத்திற்குப் பிறகு, அகில இந்தியக் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

    Advertisement

    விளக்கம்

    அப்போது சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் இருவரையும் இருபுறமும் அமர வைத்துக்கொண்டு, "ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் அனைத்தும் வெறும் வதந்திகள்.. டெல்லியில் கர்நாடக ராஜ்யசபா தேர்தல் குறித்து மட்டுமே விவாதிக்கப்பட்டது" என விளக்கம் கொடுத்தார்.

    ஆனால், அந்தப் பிரஸ் மீட்டில் இரு தலைவர்களின் இறுக்கமான முகபாவனைகளே திரைமறைவில் ஏதோ பெரிய விஷயம் நடந்துள்ளது என்பதை அம்பலப்படுத்தியது. பொதுவெளியில் மறுத்தாலும், காங்கிரஸ் மேலிடம் டி.கே.சிவக்குமாரை முதலமைச்சராக்க முழுமையாகப் பச்சைக்கொடி காட்டிவிட்டதாக டெல்லி வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. ஏனென்றால் 2023 சட்டமன்றத் தேர்தல் வெற்றியின் போதே முதல் 2.5 ஆண்டுகள் சித்தராமையா, அடுத்த 2.5 ஆண்டுகள் டிகே சிவக்குமார் என உறுதியளிக்கப்பட்டு இருந்தது. இப்போது 2.5 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், தனக்கு முதல்வர் நாற்காலி வேண்டும் என்பதில் சிவக்குமார் உறுதியாக இருக்கிறார்.

    Advertisement

    சிவக்குமார்

    கடந்த ஜனவரி மாதத்தில் கர்நாடகாவின் மிக நீண்ட காலம் முதலமைச்சராக இருந்தவர் என்ற தேவராஜ் அர்ஸின் வரலாற்றுச் சாதனையை 77 வயதான சித்தராமையா முறியடித்தார். அதன் பிறகு கேரளா, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள் நடந்த நிலையில், அது முடிந்தவுடன் இந்த மாற்றத்தை நடத்த டெல்லி திட்டமிட்டிருந்தது. கடந்த வாரம் டி.கே. சிவக்குமார் பிறந்தநாளின் போது அவருடைய ஆதரவாளர்கள் ஒட்டிய "Next CM" போஸ்டர்களே மீண்டும் இதைத் தொடங்கி வைத்தது.

    அதன்படி, சித்தராமையாவுக்கு ஜூன் மாதம் காலியாகும் மல்லிகார்ஜுன கார்கேவின் ராஜ்யசபா எம்பி பதவி அல்லது டெல்லியில் தேசிய அளவிலான முக்கியப் பொறுப்பு வழங்கப்படும். அதேபோல டி.கே. சிவக்குமாரின் சகோதரர் டி.கே.சுரேஷுக்கும் ராஜ்யசபா சீட் வழங்கப்பட வாய்ப்புள்ளது. இந்த அதிரடித் திருப்பங்களுக்கு மத்தியில், கர்நாடகக் காங்கிரஸ் உள்கட்சிப் பொறுப்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா இன்று மதியம் அவசரமாகப் பெங்களூர் வருகிறார்.

    Advertisement

    அடுத்து என்ன

    இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய மாநில உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வரா, "முதலமைச்சரை டெல்லி மேலிடம் அழைத்துப் பேசியது உண்மைதான்.. ஆனால் உள்ளே என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாது. இன்று சுர்ஜேவாலா பெங்களூர் வருகிறார்.. அவர்தான் இந்த ஒட்டுமொத்தக் குழப்பங்களையும் தீர்த்து வைப்பார். நாளை காலை முதலமைச்சர் ஒரு பிரேக்பாஸ்ட் மீட்டிங்கிற்கு அழைத்துள்ளார்" என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார்.

    நாளை அதிகாலை டெல்லியிலிருந்து புறப்படும் டி.கே.சிவக்குமார், காலை 8:30 மணிக்கு பெங்களூர் வந்தடைகிறார். சரியாக 9 மணிக்கு முதலமைச்சர் சித்தராமையாவின் காவேரி இல்லத்தில் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரேக்பாஸ்ட் மீட்டிங் அரங்கேறுகிறது. இதற்கு முன்பு கடந்த டிசம்பரில் நான்கு நாட்களுக்குள் இரண்டு முறை இவர்கள் பிரேக்பாஸ்ட் சாப்பிட்டும் உள்கட்சிப் பூசல் தீரவில்லை. ஆனால் இம்முறை, இந்த காலை உணவுச் சந்திப்பிற்குப் பிறகு, சித்தராமையா தனது விசுவாச எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்திவிட்டு, தனது அதிகாரப்பூர்வ ராஜினாமா கடிதத்தை வழங்க அதிக வாய்ப்புள்ளதாகக் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    Advertisement

    மாற்றம் ஆரம்பம்

    அதாவது டிகே சிவக்குமார் ஆதரவாளர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த மாற்றம் நாளை தொடங்கலாம். நாளைய தினம் சித்தராமையா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யலாம். அதைத் தொடர்ந்து சனிக்கிழமை டிகே சிவக்குமார் முதல்வராகப் பதவியேற்பார் எனத் தெரிகிறது.

    English Summary

    Following high-level Congress meetings in Delhi, Karnataka CM Siddaramaiah is expected to hold a decisive breakfast meeting with Deputy CM D.K. Shivakumar(கர்நாடகாவில் நடக்கும் மிக பெரிய அரசியல் மாற்றம்): Karnataka Leadership Shift latest news in tamil.