கார்கே மகன் - சித்தராமையாவின் மகனுக்கு இடம்.. கர்நாடகாவின் புதிய அமைச்சர்கள் யார் யார்? முழு லிஸ்ட்


  • பெங்களூர்: கர்நாடகாவின் புதிய முதல் அமைச்சராக டிகே சிவக்குமார் இன்று பதவியேற்று கொண்டார். அவருடன் மொத்தம் 13 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இதில் ஒருவர் துணை முதல்வர். மற்ற 12 பேர் அமைச்சர்கள் ஆவார்கள். இவர்கள் யார் யார்? பின்னணி என்ன? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

    Advertisement

    கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சித்தராமையா பொறுப்பு வகித்து வந்தார். துணை முதல்வராக டிகே சிவக்குமார் இருந்தார். இந்நிலையில் தான் முதல்வர் பதவியை கடந்த 28 ம் தேதி சித்தராமையா ராஜினாமா செய்தார். புதிய முதல்வராக டிகே சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டார்.

    Advertisement

    இதையடுத்து கர்நாடகா முதல்வராக இன்று மாலை 4.05 மணிக்கு டிகே சிவக்குமார் பதவியேற்றார். கர்நாடகா ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் டிகே சிவக்குமாருக்கு கர்நாடகா ஆளுநர் தாவர் சந்த் கெலாட் பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.
    டிகே சிவக்குமாருடன் மொத்தம் 13 பேர் பதவியேற்று கொண்டனர். இதில் ஒருவர் துணை முதல்வர் ஆவார். மற்ற 12 பேர் அமைச்சர்கள் ஆவார்கள்.

    * அதன்படி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜி பரமேஸ்வர் துணை முதல்வராக பதவியேற்று கொண்டார்.
    * கேஎச் முனியப்பா - அமைச்சர்
    *கேஜே ஜார்ஜ் - அமைச்சர்
    * எம்பி பாட்டீல் - அமைச்சர்
    * ராமலிங்க ரெட்டி - அமைச்சர்
    *சதீஷ் ஜார்கிகோளி - அமைச்சர்
    *கிருஷ்ணபைரே கவுடா - அமைச்சர்
    *பிரியங்க் கார்கே (காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகன் ) - அமைச்சர்
    * யுடி காதர் - அமைச்சர்
    * ஈஸ்வர் காண்ட்ரே - அமைச்சர்
    *யதீந்திரா சித்தராமையா (முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் மகன்) - அமைச்சர்
    * பைரதி சுரேஷ் - அமைச்சர்
    * ஷரண் பிரகாஷ் பாட்டீல் - அமைச்சர்
    என்று மொத்தம் 14 பேர் இன்று பதவியேற்று கொண்டனர்.

    English Summary

    Karnataka Ministers oath: D.K. Shivakumar took oath today as the new Chief Minister of Karnataka. Along with him, a total of 13 individuals were sworn in as ministers. Of these, one is the Deputy Chief Minister, while the remaining 12 are Cabinet Ministers. Let us take a look here at who these individuals are and what their backgrounds entail.