பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம்

  • பெங்களூர்: கர்நாடகாவின் முதல் அமைச்சராக பொறுப்பேற்றுள்ள டிகே சிவக்குமார் தனது அமைச்சர்களுக்கு நேற்று இரவு இலாகா ஒதுக்கீடு செய்துள்ளார். பெங்களூர் நகர வளர்ச்சி துறை உள்பட யார் யாருக்கு எந்தெந்த இலாகா? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

    Advertisement

    கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக பொறுப்பு வகித்து வந்த சித்தராமையா கடந்த மாதம் 28 ம் தேதி ராஜினாமா செய்தார். இதையடுத்து கர்நாடகாவின் புதிய முதல்வராக டிகே சிவக்குமார் நேற்று முன்தினம் மாலையில் பதவியேற்றார்.

    Advertisement

    டிகே சிவக்குமாருக்கு கர்நாடகா ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.

    டிகே சிவக்குமாருடன் மொத்தம் 13 பேர் பதவியேற்று கொண்டனர். இதில் ஒருவர் துணை முதல்வராகவும், 12 பேர் அமைச்சர்களாகவும் பொறுப்பு வகித்தனர்.

    இந்நிலையில் தான், டிகே சிவக்குமார் தலைமையிலான துணை முதல்வர், அமைச்சர்களுக்கு நேற்று இரவு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதன் விவரம் வருமாறு:

    * ஜி பரமேஸ்வர் - துணை முதல்வர் பதவியுடன் வருவாய் மற்றும் விளையாட்டு துறை
    * கேஎச் முனியப்பா - உணவு - பொது விநியோகம் மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை
    * கேஜே ஜார்ஜ் - மின்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை

    Advertisement

    * எம்பி பாட்டீல் - பெரிய மற்றும் நடுத்தர வர்த்தகம், உள்கட்டமைப்பு மேம்பாட்டு துறை
    * ராமலிங்க ரெட்டி - பெரிய மற்றும் நடுத்தர நீர்ப்பாசனத்துறை (இன்று காலையில் ராஜினாமா செய்துள்ளார்)
    * சதீஷ் ஜார்கிகோளி - பொதுப்பணித்துறை

    * கிருஷ்ணபைரே கவுடா - பெங்களூர் நகர வள்ர்ச்சி துறை
    *பிரியங்க் கார்கே (காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகன் ) - போலீஸ் அமைச்சர் (உளவுத்துறையை தவிர)
    * யுடி காதர் - சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை

    * ஈஸ்வர் காண்ட்ரே - ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ்
    * யதீந்திரா சித்தராமையா (முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் மகன்) - நகர மேம்பாட்டு துறை
    * பைரதி சுரேஷ் - போக்குவரத்து துறை
    * சரண் பிரகாஷ் பாட்டீல் - மருத்து கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    Advertisement

    இதில் ராமலிங்க ரெட்டி இன்று காலையில் ராஜினாமா செய்தார். இவர், 8 வது முறையாக எம்எல்ஏவாக உள்ளார். தற்போது பெங்களூர் பிடிஎம் லே-அவுட் சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக உள்ளார். இவர் பெங்களூர் நகர வளர்ச்சி துறையை எதிர்பார்த்தார். இவர், பெரிய மற்றும் நடுத்தர நீர்ப்பாசனத்துறை வழங்கப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த ராமலிங் ரெட்டி இன்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இது முதல்வர் டிகே சிவக்குமாருக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Karnataka Ministers Portfolios: Karnataka's Chief Minister D.K. Shivakumar allocated portfolios to his ministers last night. Here is a look at which minister has been allocated which portfolio.