அவ்வளவு தூரம் சொன்ன டெல்லி மேலிடம்.. முடியவே முடியாது.. திட்டவட்டமாக மறுத்த சித்தராமையா.. ட்விஸ்ட்

  • பெங்களூர்: கர்நாடகக் காங்கிரஸ் கோட்டையில் கடந்த சில நாட்களாக நீடித்து வந்த அரசியல் யுத்தம் முடிவுக்கு வருகிறது. முதலமைச்சர் சித்தராமையா இன்று மதியம் தனது பதவியை முறைப்படி ராஜினாமா செய்கிறார். அவரை டெல்லிக்கு அழைத்து முக்கியமான பதவியைத் தர மேலிடம் அழைத்துள்ள போதிலும், அதை சித்தராமையா திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்

    Advertisement

    கர்நாடக அரசியலில் கடந்த சில நாட்களாகவே மிகப் பெரிய அதிகாரப் போர் நடந்து கொண்டு இருந்தது. சித்தராமையாவுக்கு பதிலாக டிகே சிவக்குமாரை முதல்வராக்க வேண்டும் என்று அவருடைய ஆதரவாளர்கள் வலியுறுத்தினர். டெல்லி தலைமை நேரடியாகக் கேட்டுக் கொண்டதால் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்யச் சம்மதித்தார். இது தொடர்பான அறிவிப்பை அவர் இன்று வெளியிட்டிருந்தார்.

    Advertisement

    சித்தராமையா மறுப்பு

    அதற்குப் பதிலாகத் தேசிய அளவிலான முக்கியப் பொறுப்பு மற்றும் ராஜ்யசபா எம்பி ஆஃபர்களை சித்தராமையாவுக்கு காங்கிரஸ் மேலிடம் வழங்கியது. இருப்பினும், அதில் தனக்குச் சிறிதும் விருப்பமில்லை எனச் சொல்லி 77 வயதான சித்தராமையா அதை மறுத்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குத் தான் கர்நாடகாவிலேயே தங்கி, வெறும் எம்.எல்.ஏ-வாக மட்டுமே மக்கள் பணியாற்ற விரும்புவதாகக் கூறியிருக்கிறார். மேலும், தவிடுபொடியான தனது அஹிந்தா சமூகக் கூட்டணியை மீண்டும் பலப்படுத்தவே அவர் திட்டமிட்டுள்ளதாகவும் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    ராஜினாமா

    தனது இந்த இறுதி முடிவை இன்று மாலையே டெல்லி மேலிடத்திடம் அவர் முறைப்படி தெரிவிக்கவுள்ளார். முன்னதாக, ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பெங்களூரில் இல்லாதது இந்த ஆட்சி மாற்றத்திற்குப் பெரிய முட்டுக்கட்டையாகப் பார்க்கப்பட்டது. நேற்றிரவு திடீரென மும்பைக்குப் புறப்பட்டுச் சென்ற ஆளுநர் கெலாட், இன்று காலை அங்கிருந்து தனது சொந்த ஊரான இந்தூருக்குப் பயணித்துள்ளார்.

    Advertisement

    இதற்கிடையே, ஆளுநர் நேரில் இல்லாவிட்டாலும் திட்டமிட்டபடி இன்று மதியமே ராஜினாமா வேலைகளை முடிக்கச் சித்தராமையா முகாம் முடிவெடுத்துள்ளது. இன்று மதியம் 2:30 முதல் 3:00 மணிக்குள் பெங்களூர் ராஜ் பவனுக்குச் செல்லும் சித்தராமையா, ஆளுநரின் செயலாளரிடம் தனது அதிகாரப்பூர்வ ராஜினாமா கடிதத்தை முறைப்படி ஒப்படைக்கிறார். சித்தராமையா விட்டுக் கொடுத்ததை அடுத்து, கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் அசுர வேகத்தில் நடந்து வருகின்றன.

    அடுத்து என்ன

    வரும் சனிக்கிழமை (மே 30) டி.கே.சிவக்குமார் கர்நாடகாவின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்க அதிக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்வர் மாற்றத்தோடு மிகப் பெரிய அமைச்சரவை மாற்றமும் நடக்கும் எனத் தெரிகிறது. சித்தராமையா முகாமை சமாதானப்படுத்த, டி.கே.சிவக்குமார் அமைச்சரவையில் சித்தராமையாவின் மிக நெருங்கிய விசுவாசிகள் மற்றும் மூத்த ஆதரவாளர்கள் பலருக்கு மிக முக்கியமான, பவர்ஃபுல்லான அமைச்சரவை போர்ட்ஃபோலியோக்கள் ஒதுக்கப்பட மேலிடம் பச்சைக்கொடி காட்டியுள்ளது.

    Advertisement

    காங்கிரஸ் மேலிடம்

    இருப்பினும், உள்கட்சிப் பூசலைத் தற்காலிகமாக மறைக்க, "இதுவரை காங்கிரஸ் சட்டமன்றக் கட்சி கூட்டத்தைக் கூட்டவில்லை" எனச் சொல்லி மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா தொடர்ந்து மழுப்பி வருகிறார். டெல்லி கட்டளைக்குக் கட்டுப்பட்டாலும், தனது சுயமரியாதையை விட்டுக்கொடுக்க மறுத்துள்ளார் சித்தராமையா!. ராகுல் காந்தியின் வார்த்தைக்காக முதல்வர் நாற்காலியை விட்டுத் தந்ததாலும் டெல்லிக்கு சென்று மாநில அரசியலில் லைம்லைட்டை இழக்கத் தயாராக இல்லை சித்தராமையா!

    English Summary

    Karnataka Chief Minister Siddaramaiah rejected Rajya Sabha and national role offers from Delhi(கர்நாடகாவில் சித்தராமையா அடுத்த திட்டம்): Siddaramaiah Rejects Congress Delhi Offers latest news in tamil.