பெங்களூர்: கர்நாடக அரசியலில் முக்கிய திருப்புமுனை ஏற்பட்டு, புதிய வரலாற்று நிகழ்வு நடக்க உள்ளது. முதலமைச்சர் சித்தராமையா பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, துணை முதலமைச்சர் டிகே.சிவக்குமார் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். இன்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து, நடத்தும் ஆலோசனைகளில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.
மாதக் கணக்கில் இருந்த ஊகங்கள், கணிப்புகளுக்கு பிறகு, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா வியாழக்கிழமை பதவியிலிருந்து விலகினார். சித்தராமையா தலைமையிலான ஆட்சி குறித்து பல்வேறு விமர்சனங்கள் இருந்த வேலையில் கட்சியின் உயர்மட்ட முடிவின்படி அவர் பதவி விலகியுள்ளார்.
இந்த நிலையில் கர்நாடக துணை முதலமைச்சர் டிகே.சிவக்குமார் இன்று டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோரை சந்திக்கிறார். கர்நாடக அமைச்சரவை மாற்றம், புதிய அமைச்சரவை அமைப்பு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் இந்த சந்திப்பில் விவாதிக்கப்படும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சித்தராமையா, டிகே.சிவக்குமார் மற்றும் காங்கிரஸ் கர்நாடகப் பொறுப்பாளர் ரண்தீப் சிங் சுர்ஜேவாலா ஆகியோர் கட்சியின் உயர்மட்டத் தலைவர்களுடன் விரிவான ஆலோசனை நடத்த உள்ளனர். கர்நாடக அரசில் சமூக மற்றும் பிராந்திய சமநிலையைப் பேணும் வகையில் நான்கு துணை முதலமைச்சர்களை நியமிக்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இது சமூகத்தின் பல்வேறு பிரிவினருக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் நோக்கில் எடுக்கப்படும் முடிவாகும். மேலும், சித்தராமையாவின் மகன் யதீந்திரா சட்டமன்ற மேலவை உறுப்பினராக உள்ள நிலையில், அவரை புதிய அமைச்சரவையில் சேர்த்து முக்கிய துறையை வழங்கும் வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் சித்தராமையாவின் அரசியல் பயணம் அவரது குடும்பம் மூலம் தொடரும். சித்தராமையா அமைச்சரவையில் இருந்த பல அமைச்சர்கள் புதிய அமைச்சரவையில் இடம் பெற வாய்ப்பில்லை என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் டி.கே.சிவக்குமார் தலைமையிலான புதிய அமைச்சரவை அமைப்பதற்கான காங்கிரஸ் சட்டமன்றக் கட்சி கூட்டத்தின் தேதி இன்று இறுதி செய்யப்படும். அதைத் தொடர்ந்து டி.கே.சிவக்குமார் முதலமைச்சராக பதவியேற்கும் தேதியும் அறிவிக்கப்படும். துணை முதலமைச்சர் பதவி சமீப காலமாக வந்த ஒரு விஷயம், இதை கூட்டணி கட்சிகளுக்கு பலத்தை கொடுப்பதற்காகவும், அடுத்த தலைமுறை தலைவர்களுக்கு கூடுதல் பொறுப்பு கொடுப்பதற்காகவும் முதலில் உருவாக்கப்பட்டது. ஆனால் தற்போது கர்நாடக காங்கிரஸ் அரசு சமூகம் மற்றும் பிராந்திய சமநிலைக்காக 4 துணை முதல்வர்களை நியமிப்பது புதிய முன்னுதாரணமாக அமையலாம். இதன் மூலம் அடுத்தடுத்த சட்டமன்ற தேர்தலில் ஓன்றுக்கும் மேற்பட்ட துணை முதல்வர்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் உருவாகும் வாய்ப்பு உருவாகும்.டிகே.சிவக்குமார் டெல்லி பயணம்
நான்கு துணை முதலமைச்சர்கள் நியமனம்?
புதிய அமைச்சரவை அமைப்பு