கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட்

  • பெங்களூர்: கர்நாடகக் காங்கிரஸ் கட்சிக்குள் கடந்த 3 ஆண்டுகளாக நீடித்து வந்த 'சித்தராமையா Vs டி.கே.சிவக்குமார்' போட்டி, இன்று காலை திடீர் திருப்பத்தை எட்டியுள்ளது. முதலமைச்சர் சித்தராமையா இன்று காலை தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாகத் தகவல்கள் வெளியான சூழலில், ஆளுநர் தாவர்சந்த் கெலாட் குடும்பத்தில் ஏற்பட்ட எமெர்ஜென்சி காரணமாக நேற்றிரவு திடீரென இந்தூருக்கு சென்றுள்ளது கர்நாடக அரசியலில் ஒரு புதிய ட்விஸ்ட்டை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    கர்நாடகாவில் சித்தராமையாவுக்கு பதிலாக டிகே சிவக்குமாரை முதல்வர் பதவிக்குக் கொண்டு வர வேண்டும் என்று அவருடைய ஆதரவாளர்கள் நீண்ட காலமாகவே கோரிக்கை விடுத்து வந்தனர். இது தொடர்பாக இரு தலைவர்களையும் அழைத்து டெல்லி மேலிடம் நேரடியாக ஆலோசனையை நடத்தியது.

    Advertisement

    ஆளுநர் காணோம்

    டெல்லி மேலிடத்தின் உத்தரவைத் தொடர்ந்து, முதலமைச்சர் சித்தராமையா இன்று காலை 11 மணிக்குத் தனது பதவியை முறைப்படி ராஜினாமா செய்யவிருந்தார். அதற்கு முன்னதாக, தனது இல்லத்தில் டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட அமைச்சரவை சகாக்களுக்கு அவர் மெகா பிரேக்பாஸ்ட் விருந்து அளிப்பது. திட்டமாகும். இந்த பிரேக் பாஸ்ட்டை தொடர்ந்து சித்தராமையா இன்று காலை ஆளுநரை நேரில் சந்தித்துத் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கத் திட்டமிட்டிருந்தார்.

    ஆனால், ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டின் குடும்பத்தில் ஏதோ எமெர்ஜென்சி ஏற்பட்டதால், நேற்றிரவு 11:30 மணி விமானத்தில் அவர் தனது சொந்த ஊரான இந்தூருக்கு அவசரமாகப் புறப்பட்டுச் சென்றுவிட்டார். அவர் மீண்டும் பெங்களூரு திரும்புவதற்கான விமான டிக்கெட்டுகள் இன்னும் புக் செய்யப்படாததால், சித்தராமையா தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் அலுவலகத்திற்கு முறைப்படி அனுப்பி வைக்க மாற்று ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்.

    Advertisement

    விடை கொடுத்தனர்

    "மேலிடத்தின் உத்தரவுக்குக் கட்டுப்படுவேன்" எனச் சித்தராமையா நேற்று சட்டப்பேரவை வளாகத்தில் அதிகாரிகளிடம் விடைபெற்ற போதே, கோட்டை ஊழியர்கள் பலரும் கண்ணீர் மல்க அவருக்கு விடை கொடுத்தனர்.

    மூத்த காங்கிரஸ் எம்எல்ஏ ஆர்.வி.தேஷ்பாண்டேவிடம் பேசிய சித்தராமையா, "பல எம்எல்ஏக்கள் என்னை ராஜினாமா செய்ய வேண்டாம் என்று வற்புறுத்துகிறார்கள். ஆனால், நான் டெல்லி மேலிடத்திற்கு ஒரு வாக்கு கொடுத்துள்ளேன், அதை நான் கண்டிப்பாகக் காப்பாற்றுவேன்" என்று தனது முடிவைத் தெளிவுபடுத்தியுள்ளார். ராகுல் காந்தி நேரடியாகக் கேட்டுக்கொண்டதாலேயே, 77 வயதான சித்தராமையா தனது நாற்காலியை விட்டுக் கொடுக்க சம்மதித்துள்ளார்.

    Advertisement

    சித்தராமையாவின் இந்த முடிவால் கர்நாடகாவின் அரசியல் களம் இரு துருவங்களாகப் பிரிந்து கொதித்துக் கொண்டிருக்கிறது. டி.கே.சிவக்குமார் தான் அடுத்த முதலமைச்சர் என்பது உறுதியானதால், பெங்களூர் மற்றும் ராமனகராவில் அவருடைய ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து, கேக் வெட்டி கொண்டாட்டங்களில் குதித்துள்ளனர்.

    கொந்தளிப்பு

    அதேநேரம் மறுபுறம், கர்நாடகப் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் கூட்டமைப்பான AHINDA காங்கிரஸிற்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. "பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் தலித் மக்களின் வாக்குகளால் தான் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. சித்தராமையாவை நீக்கினால் மாநிலம் தழுவிய மெகா போராட்டங்களை நடத்துவோம்" என அவர்கள் எச்சரித்தனர். நேற்றுதான் தனது இறுதி ராஜதந்திர நகர்வாக, சாதி வாரிக் கணக்கெடுப்பு (Caste Census Report) அறிக்கையையும் சித்தராமையா முறைப்படி பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Advertisement

    இந்த உள்கட்சிப் பூசலைப் பார்த்து கர்நாடக பாஜக தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா காங்கிரஸை நக்கலடித்துள்ளார். இது தொடர்பாக அவர்கள், "கடந்த 3 ஆண்டுகளில் சித்தராமையா அரசு நிர்வாகத்தில் முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டது என்பதை டெல்லி காங்கிரஸ் மேலிடமே ஒப்புக்கொண்டுவிட்டது. இப்போது யார் முதலமைச்சராகப் பதவியேற்றாலும், இந்த உள்கட்சிப் பூசலால் கர்நாடகாவில் ஆட்சி நிலைக்காது. மாநிலம் விரைவில் இடைக்காலத் தேர்தலை நோக்கி நகரப் போவது மட்டும் நிஜம்" என்று பதிவிட்டுள்ளார்.

    சிக்கல் தான்

    சித்தராமையா நாற்காலியை விட்டு இறங்கினாலும், 'அஹிந்தா' கூட்டணியின் அதிருப்தியும், பாஜகவின் தேர்தல் கணக்குகளும் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்கும் டி.கே.சிவக்குமாருக்கு முள் படுக்கையாகவே அமையப் போகிறது. ஆளுநர் பெங்களூருவில் இல்லாத இந்தச் சூழலில், டிகே சிவக்குமார் முதல்வராகப் பதவியேற்பதற்குள் இன்னும் எத்தனை ட்விஸ்ட்டுகள் அரங்கேறப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    English Summary

    Karnataka Chief Minister Siddaramaiah planned resignation faced a sudden delay after Governor Thawarchand Gehlot flew to Indore due to a family emergency(கர்நாடக முதல்வர் சித்தராமையா ராஜினமா): Siddaramaiah Resignation Delayed latest in tamil.