மனைவி - மகனை கொன்று தற்கொலை செய்த ஜவுளிக்கடை ஓனர்! மகளிர் இலவச பஸ் பயண திட்டத்தால் விபரீத முடிவாம்

  • பெங்களூர்: தமிழகத்தை போல் கர்நாடகாவில் மகளிருக்கு இலவச பஸ் பயணம் அமலில் உள்ளது. இந்நிலையில் தான் மகளிர் இலவச பஸ் பயண திட்டத்தால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறி ஜவுளிக்கடை உரிமையாளர் ஒருவர் தனது மனைவி மற்றும் மகனை கொன்றுவிட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Advertisement

    தமிழகத்தில் 'விடியல் பயணம்' என்ற பெயரில் பெண்களுக்கு இலவச பஸ் பயண திட்டம் செயல்பாட்டில் உள்ளது. அதேபோல் காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவிலும் 'சக்தி திட்டம்' என்ற பெயரில் மகளிருக்கு இலவச பஸ் பயண திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டங்களால் ஏராளமான பெண்கள் தினந்தோறும் பயனடைந்து வருகின்றனர்.

    Advertisement

    ஆனால் கர்நாடகாவில் ஜவுளிக்கடை உரிமையாளர் ஒருவர் மகளிர் இலவச பஸ் பயண திட்டத்தால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறி மனைவி, மகனை கொன்று தற்கொலை செய்துள்ள சம்பவம் அனைவரையும் திடுக்கிட வைத்துள்ளது. இதுபற்றிய விஷயம் வருமாறு:

    கர்நாடகாவின் மண்டியா மாவட்டத்தை சேர்ந்தவர் பிரபாகர். இவர் ஜவுளி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பெயர் ஜோதி (வயது 55). இந்த தம்பதிக்கு 30 வயதில் மகன் உள்ளார். அவரது பெயர் சந்தோஷ். ஒரு மகள் உள்ளார். பிரபாகர் வங்கி மற்றும் பைானான்சியர்களிடம் கடன் வாங்கி ஜவுளி கடை நடத்தி வந்தார்.

    Advertisement

    மகன் சந்தோஷ்க்கு கடந்த 6 வாரங்களுக்கு முன்பாக தான் மேக்னா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இந்நிலையில் தான் நேற்று காலையில் மேக்னா கண்விழித்தார். காலை உணவு செய்ய அவர் மாமியார் ஜோதியை எழுப்ப சென்றார். அப்போது அவரது அறையில் கணவர் சந்தோஷ் மற்றும் மாமியார் ஜோதி பேச்சு மூச்சு இன்றி கிடந்தனர்.

    இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மேக்னா தனது மாமனார் பிரபாகருக்கு போன் செய்து பார்த்தார். ஆனால் அவர் போன் எடுக்கவில்லை. இதையடுத்து அருகே உள்ள கடைக்கு சென்று பார்த்தபோது அவர் அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தார். இதுபற்றி அறிந்தவுடன் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

    Advertisement

    அப்போது பிரபாகரின் மனைவி ஜோதி மற்றும் மகன் சந்தோஷ் ஆகியோர் கழுத்து இறுக்கி கொல்லப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனால் பிரபாகர் தனது மனைவி மற்றும் மகனை கொன்றுவிட்டு தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். பிறகு 3 பேரின் உடல்களையும் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே தான் தற்கொலைக்கு முன்பாக பிரபாகர் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் சிக்கியது. அதில், ''பெண்களுக்கு கர்நாடகா அரசு சார்பில் இலவச பஸ் பயணத்தை வழங்கும் 'சக்தி' திட்டம் வழங்கப்பட்டது. இதனால் என்னுடைய கடையில் வியாபாரம் இல்லை. மண்டியாவை சேர்ந்த பெண்கள் என்னுடைய கடைக்கு வருவதை தவிர்த்து இலவசமாக பஸ்களில் பயணித்து மைசூரு, பெங்களூர் சென்று துணிகள் வாங்கினார். இதனால் இழப்பு ஏற்பட்டது. கடன் கழுத்தை நெரித்தது. இதனால் வேறு வழியின்றி மனைவி, மகனை கொன்று தற்கொலை செய்து விடுகிறேன்'' என்று கூறியுள்ளார்.

    Advertisement

    இருப்பினும் இந்த வழக்கில் போலீசாருக்கு சில சந்தேகம் உள்ளது. அதாவது பிரபாகர் எப்படி தனது மனைவி மற்றும் 30 வயது மகன் ஆகியோரை ஒரே நேரத்தில் கழுத்து இறுக்கி கொலை செய்து இருக்க முடியும் என்ற சந்தேகம் உள்ளது. இதுபற்றியும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுபற்றி பிரபாகரரின் மருமகள் மேக்னா கூறுகையில், ''நேற்று இரவு நானும், எனது கணவரும் சாப்பிட்டு விட்டு அறைக்கு தூங்க சென்றோம். என்னுடைய மாமனார் பிரபாகர் மாியார் ஜோதி ஆகியோர் இன்னொரு அறையில் தூங்க சென்றனர். ஆனால் இரவில் எனது கணவர் எப்படி மாமனார் - மாமியார் அறைக்கு சென்றனர் என்பது தெரியவில்லை. நான் காலையில் எழுந்து பார்த்தபோது தான் இருவரும் இறந்து கிடந்தனர்'' என்று கூறி அழுதார்.

    Advertisement

    இதுபற்றி பிரபாகரின் அண்ணன் வெங்கடராமு சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகாலில் வசித்து வருகிறார். இவர் கூறுகையில்,, ''என் தம்பிக்கு பணக்கஷ்டம் இருந்தது. அவனது இந்த முடிவுக்கு பொருளாதாரம் சார்ந்த பிரச்சனை முக்கிய காரணமாக இருக்க வாய்ப்புள்ளது'' என்று கண்கலங்கினார்.

    English Summary

    Like Tamil Nadu, Karnataka has implemented a free bus travel scheme for women. Against this backdrop, a tragic incident has occurred where a textile shop owner killed his wife and son before taking his own life, claiming that the free bus travel scheme for women had caused losses to his business.