பெங்களூர்: கர்நாடகா உரிய நேரத்தில் தண்ணீர் திறக்காததால், தமிழகத்தில் குறுவை சாகுபடி பாதித்திருக்கிறது. இப்படி இருக்கையில், மேகதாது அணையை விரைந்து கட்டி முடிக்க வேண்டும் என்றும், அணையிலிருந்து தமிழகத்திற்கு உரிய நீரை கொடுப்போம் என்றும் கர்நாடகா மத்திய அரசிடம் பேசியிருப்பது விவாதங்களை கிளப்பியிருக்கிறது.
நேற்று டெல்லியில், மத்திய நீர் ஆணையத்தின் தலைவர், அனுபம் பிரசாத்தை கர்நாடகாவின் நீர்வளத்துறை அமைச்சர் என். சலுவராயசாமி நேரில் சந்தித்திருந்தார். இந்த சந்திப்பின்போது கர்நாடக நீர்வளத்துறையின் கூடுதல் தலமை செயலாளர் கௌரவ் குப்தா உள்ளிட்ட அதிகாரிகளும் உடன் இருந்தனர். இவர்கள், மேகதாது அணை திட்டத்திற்கு சீக்கிரம் ஒப்புதல் கொடுங்கள் என்று மத்திய அரசை வலியுறுத்தியுள்ளனர்.
திட்டத்தின் விரிவான அறிக்கை குறித்து மத்திய நீர் ஆணையம் முன்னர் தெரிவித்திருந்த கருத்துக்கள் மற்றும் கர்நாடக அரசு ஆணையத்திடம் சமர்ப்பித்த விரிவான இணக்க அறிக்கை ஆகியவற்றை, மத்திய நீர் ஆணைய தலைவரிடம் கர்நாடக அமைச்சரும், அதிகாரிகளும் விரிவாக முன்வைத்திருந்தனர். இந்த திட்டம் எங்களுக்கு லட்சியத் திட்டம் என்றும் கர்நாடகா இதில் உறுதியாக இருக்கிறது. நீர் ஆணைய தலைவரிடம் பேசிய கர்நாடக அமைச்சர், "கள நிலவரம் மற்றும் தொழில்நுட்ப விளக்கங்கள் குறித்து ஆணையத் தலைவருக்கு தெளிவுப்படுத்தப்பட்டிருக்கிறது. மட்டுமல்லாது இந்த திட்டத்தை விரைவாக செயல்படுத்த தேவையான கூடுதல் தொழில்நுட்ப விளக்கங்களை திறம்பட அளிப்பதன் மூலம் மத்திய நீர் ஆணையம் முழ ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார். காலநிலை மாற்றம் காரணமாக பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு கிடைக்கவில்லை. இதுபோன்ற நேரங்களில் மேகதாது அணை கட்டினால் பெங்களூர் நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்ட மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும். நீர்மின் உற்பத்தியையும் இந்த திட்டம் சாத்தியமாக்கும். மழை பெய்யாத வறட்சி ஆண்டுகளில்.. தமிழகத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட நீரை தொடர்ந்து திறந்துவிடவும்.. இரு மாநிலங்களுக்கும் இந்த அணை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் மத்திய நீர் ஆணையத்திடம் கர்நாடக அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். அணை குறித்து அமைச்சர் கூறுகையில், "இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் மாநில அரசு உறுதியாக இருக்கிறது. நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் தொழில்நுட்ப ஆய்வுகளை முடித்து திட்டத்துக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார். பேச்செல்லாம் நல்லா வாழைப்பழம் மாதிரிதான் இருக்கு.. ஆனா, உரிய நேரத்தில் தமிழகத்திற்கு தண்ணீரை கர்நாடகா கொடுப்பதில்லயே என்று விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. உதாரணமாக இந்த ஆண்டை எடுத்துக்கொள்ளுங்கள். ஜூன் 12ம் தேதி கர்நாடகா தண்ணீரை திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால், மழையில்லை.. தண்ணீர் இல்லை என்று பஞ்ச பாட்டு பாடி.. நமக்கான தண்ணீரை கொடுக்கவில்லை. இதனால், டெல்டா மாவட்டங்கள் முழுமையாக வறட்சியடைந்திருக்கின்றன. அதேபோல. 5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நடக்க வேண்டிய குறுவை சாகுபடி.. வெறும் 3 லட்சம் ஏக்கராக சுருங்கியிருக்கிறது. இப்போவே இந்த லட்சணம் எனில்.. மேகதாது அணை கட்டிவிட்டால்.. காவிரி நீரை கண்ணில் கூட காட்டாது கர்நாடகா என்று சொல்லப்படுகிறது.கர்நாடகாவின் வலியுறுத்தல்
முழு ஒத்துழைப்பு
அணை குறித்து உருட்டு
தமிழகத்தின் நிலை