பெங்களூர்: கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை தீவிரமடைந்திருப்பதால், அம்மாநில அணைகளிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இதனால், தமிழகத்திற்கு வரும் காவிரி நீரின் அளவும் உயர்ந்திருக்கிறது.
கர்நாடகாவின் கே.ஆர்.எஸ் அணையிலிருந்து முன்னதாக வினாநடிக்கு 2,498 கனஅடி அளவுக்கு தண்ணீர் திறக்கப்பட்டிருந்தது. தற்போது 4,712 கனஅடியாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல கபினி அணையிலிருந்து 6,100 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 6,600 கனஅடியாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 6,500 கனஅடியிலிருந்து 10,000 கனஅடியாக உயர்ந்திருக்கிறது.
நீர்வரத்து அதிகரித்திருப்பதால், ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இருப்பினும், பாதுகாப்பு காரணமாக பரிசல் இயக்க அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து 15 நாட்களாக பரிசல் இயக்க அனுமதிக்கப்படாததால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்திருக்கின்றனர். மறுபுறம் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்திருப்பதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை தாண்டியிருக்கிறது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக 2,000 கனஅடி நீர் திறக்கப்பட்டிருக்கிறது. செப்.1ம் தேதி அணையை முதலமைச்சர் விஜய் ஆய்வு செய்து, டெல்டா பாசனத்திற்காக நீரை திறந்து வைக்கிறார். ஒவ்வொரு வருஷமும் காவிரி தண்ணீருக்காக நாம் தொடர்ந்து சண்டை செய்ய வேண்டியதாக இருக்கிறது. இந்த ஆண்டும் இப்படித்தான். ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்க வேண்டும். லட்சக்கணக்கான ஏக்கர் பாசன நிலங்கள் இந்த தண்ணீரை நம்பிதான் இருக்கிறது. எனவே உரிய நேரத்தில் கர்நாடகா தண்ணீரை கொடுக்கக வேண்டும் என்று தமிழகம் கேட்டது. ஆனால், கர்நாடகா கொடுக்கவில்லை. இப்படி இருக்கையில், தற்போது வேறு வழியில்லாமல் கர்நாடகா தண்ணீரை திறந்திருக்கிறது. கர்நாடகாவின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியிருக்கும் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருப்பதால், அம்மாநில அணைகளிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.