தமிழர்களுக்கு வார்னிங்.. ஆக.,10ல் கர்நாடகா - தமிழ்நாடு எல்லை மூடல்- பந்த்க்கு முன்பே வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை

  • பெங்களூர்: ''தமிழகத்தை கண்டித்து திட்டமிட்டப்படி ஆகஸ்ட் 13ம் தேதி கர்நாடகா பந்த் நடத்தப்படும். அதற்கு முன்பாக தமிழகத்துக்கு எச்சரிக்கை விடுக்கும் நோக்கத்தில் ஆகஸ்ட் 10ம் தேதி கர்நாடகா - தமிழ்நாடு எல்லையான அத்திப்பள்ளியில் பந்த் நடத்தப்படும்'' என்று வாட்டாள் நாகராஜ் மிரட்டல் விடுத்துள்ளார்.

    Advertisement

    கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட முயன்று வருகிறது. இங்கு அணை கட்டினால் தமிழகத்துக்கு காவிரியில் கிடைக்க வேண்டிய தண்ணீர் கிடைக்காது. இதனால் தமிழகம் சார்பில் மேகதாது அணை திட்டத்துக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    Advertisement

    இந்நிலையில் தான் காவிரியில் தமிழகம் தண்ணீர் கேட்பது, மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவிப்பது உள்ளிட்டவற்றை கண்டித்து கன்னட கூட்டமைப்பின் தலைவரும் கன்னட கூட்டமைப்பின் தலைவரும், வாட்டாள் சலுவளி கட்சியின் தலைவருமான வாட்டாள் நாகராஜ் பந்த் அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக கர்நாடகா முழுவதும் ஆகஸ்ட் 13ம் தேதி பந்த் நடத்தப்படும் என்று வாட்டாள் நாகராஜ் ஏற்கனவே அறிவித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக தான் இன்று வாட்டாள் நாகராஜ் புதிய மிரட்டலை விடுத்துள்ளார். மேகதாது அணை திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும் என்று கூறி கர்நாடகாவின் ராமநகர் (மேகதாது அணை அமைய உள்ள மாவட்டம்)ஐகூரு பகுதியில் கருப்பு பட்டை அணிந்து இன்று வாட்டாள் நாகராஜ் போராட்டம் நடத்தினார்.

    Advertisement

    இந்த போராட்டத்துக்கு பிறகு வாட்டாள் நாகராஜ் கூறியதாவது: ''காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு தொடர்ந்து துன்புறுத்தலை கொடுத்து வருகிறது. பெங்களூர் மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்க்க உடனடியாக மேகதாது அணையை கட்ட வேண்டும். இந்த திட்டத்துக்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை. காவிரி விஷயத்தில் அரசு விளையாட கூடாது.

    மேகதாது அணை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக ஆகஸ்ட் 13ம் தேதி கர்நாடகாவில் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பந்த் நடத்த வேண்டாம் என்று முதல்வர் (டிகே சிவக்குமார்) கோரிக்கை வைக்கிறார். ஆனால் டிகே சிவக்குமார் எந்த பேச்சுவார்த்தைக்கும் வரவில்லை. இதனால் பந்த் முடிவில் இருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை.

    Advertisement

    ஆகஸ்ட் 13 பந்த்-க்கு முன்பாக ஆகஸ்ட் 10ம் தேதி கர்நாடகா - தமிழ்நாட எல்லையான அத்திப்பள்ளியில் பந்த் போராட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த போராட்டம் ஆகஸ்ட் 13ம் தேதி போராட்டத்துக்கு முன்னோட்டமாக தமிழகத்துக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் நடைபெற உள்ளது'' என்றார். இதனால் ஆகஸ்ட் 10ம் தேதி வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட அமைப்பினர் கர்நாடகா - தமிழ்நாடு எல்லையான அத்திப்பள்ளியில் போராட்டம் நடத்தி சாலையை மூடலாம் என்பதால் இருமாநிலங்கள் இடையே போக்குவரத்து பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    English Summary

    "A Karnataka bandh will be held on August 13 as planned to condemn Tamil Nadu. Prior to that, a bandh will be observed on August 10 at Attibele-on the Karnataka-Tamil Nadu border-to issue a warning to Tamil Nadu," threatened Vatal Nagaraj.