தண்ணீர் தர முடியாது.. நாங்க சுப்ரீம் கோர்ட்டுக்கு போறோம்! கட் அண்ட் ரைட்டாக பேசிய டிகே சிவக்குமார்!

  • பெங்களூர்: தற்போதைய நிலையில் தங்களின் குடிநீர் தேவைக்காக 40 டி.எம்.சி. தண்ணீரை இருப்பு வைப்பது அவசியம் என்றும் என்றும், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடவேண்டும் என்ற காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

    Advertisement

    தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 3 ஆயிரத்து 500 கனஅடி வீதம், 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்க பெங்களூருவில் முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தலைமையில் அனைத்துகட்சி கூட்டம் நடைபெற்றது.

    Advertisement

    இந்த கூட்டத்தில் முன்னாள் முதல்வர் சித்தராமையா, மத்திய அமைச்சர் குமாரசாமி, கர்நாடகா மாநில பாஜக தலைவர்கள் அசோகா, பசவராஜ் பொம்மை, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

    டிகே சிவக்குமார்

    கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.கே.சிவக்குமார்," கர்நாடக அணைகள் நிலவரம், மற்றும் நிலத்தடி நீர் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. தற்போதைய நிலையில் தங்களின் குடிநீர் தேவைக்காக 40 டி.எம்.சி. தண்ணீரை இருப்பு வைப்பது அவசியம். தண்ணீர் கோரி தமிழகத்திடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் வந்துள்ள போதும் கர்நாடக மக்கள் மற்றும் விவசாயிகளின் நலனே முக்கியம்.

    Advertisement

    தமிழக அரசு

    எனவே அனைத்துக் கட்சி' கூட்ட முடிவின் படி காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும். கபினி அணை நிரம்பும் நிலையில் உள்ளது. தமிழகத்தில் நீர் பற்றாக்குறை உள்ளது. குடிநீரை கருத்தில் கொண்டு ஒத்துழைக்க தமிழக அரசும் கேட்டுக்கொண்டது. கர்நாடக மக்கள், விவசாயிகளின் நலனை காப்பதே முதன்மை.

    காவிரி ஆணையம்

    தமிழ்நாட்டுக்கு 15 நாட்கள் விநாடிக்கு 3,500 கன அடி உபரி நீர் திறக்க காவிரி ஆணையம் தெரிவித்திருந்தது. காவிரி விவகாரத்தில் மூத்த தலைவர்கள், சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு ஜூன் மாதத்தில் மட்டும் 2.9 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக 40 டிஎம் சி தண்ணீர் கட்டாயம் இருப்பு இருக்க வேண்டும். அரசின் முடிவுக்கு கர்நாடக தலைவர்கள் அனைவரும் ஒத்துழைப்பதாக உறுதி அளித்துள்ளனர்.

    Advertisement

    கர்நாடக காங்கிரஸ்

    காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழகத்திடமிருந்து பல கோரிக்கை வந்துள்ளது. காவிரி விவகாரத்தில் திமுக தனியாக சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டுள்ளது. விவசாய சங்கங்கள், கன்னட அமைப்புகள் முழு அடைப்பு அறிவிப்பை திரும்ப பெற வேண்டும். அனைத்து கட்சி கூட்டத்தில் கூறியது போல் காவிரி விவகாரத்தில் மேல்முறையீடு செய்யப்படும். நான் விவசாயியின் மகன், விவசாயிகளுக்கு ஆதரவாக கர்நாடக காங்கிரஸ் நிற்கும்.

    மேகதாது திட்டம்

    காவிரி விவகாரத்தில் கர்நாடகா மக்கள், விவசாயிகள் நலனை காப்பேன். தற்போதைய சூழல் அமைதியடைந்த பின் தமிழ்நாடு முதல்-அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் மேகதாது திட்டத்தால் தமிழ்நாடே அதிகளவில் பயன்பெறும். மேகதாது திட்டத்தின் விரிவான அறிக்கையை திருத்தி மீண்டும் அனுப்ப உள்ளோம். மாநிலத்தின் நலன் கருதி மிகுந்த எச்சரிக்கை, பொறுப்புடன் அரசு முடிவு எடுக்கும்." என்றார்.

    English Summary

    Karnataka to challenge Cauvery water release order in Supreme Court, says DK Shivakumar after all-party meeting.