மகளுடன் ஒரே அறையில் இருந்த தொழிலாளியை அடித்தே கொன்ற தமிழக தொழிலதிபர்.. பெங்களூரில் ஷாக்

  • பெங்களூர்: பெங்களூரில் தனது மகளுடன் ஒரே அறையில் இருந்த தொழிலாளியை கிரிக்கெட் மட்டை, பைப் கொண்டு கொடூரமாக தாக்கி தமிழகத்தை சேர்ந்த தொழிலதிபர் கொன்ற சம்பவம் திடுக்கிட வைத்துள்ளது.

    Advertisement

    தமிழகத்தை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 45). இவர் பெங்களூர் எலகங்காவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் 'ஸ்வீட் கார்ன்' தயாரிக்கும் மெஷின்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்

    Advertisement

    இவரிடம் கேரளாவின் பாலக்காடு மாவட்டம் திருவெகப்புரா பகுதியை சேர்ந்த கிரண் (22) என்பவர் தனது சகோதரருடன் வேலை செய்து வந்தார்.

    ஆனந்துக்கு 19 வயதில் மகள் இருக்கிறார். இவர் மைசூரில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். விடுமுறையின்போது வீட்டுக்கு வந்து செல்வது உண்டு. அப்போது கிரண் அந்த பெண்ணுடன் பழகி உள்ளார். இந்த பழக்கம் இருவருக்கும் நெருக்கமாகி உள்ளது.இதுபற்றி ஆனந்த்துக்கு தெரியவந்தது. தனது மகளை கிரண் விரும்புவதோடு, திருமணம் செய்து கொள்வாரோ என்று பயந்தார்.

    இதனால் கிரணை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று திட்டமிட்டார். கடந்த 2 ம் தேதி ஆனந்த்தின் மகள் வீட்டில் இருந்தார். அப்போது அவரிடம் தமிழ்நாடு சென்று வருவதாக கூறிவிட்டு ஆனந்த் தனது மனைவியுடன் அங்கிருந்து சென்றார். ஆனால் அடுத்த சில மணிநேரங்களில் ஆனந்த் வீட்டிற்கு வந்தார்.

    Advertisement

    அப்போது ஆனந்த் மகளுடன், கிரண் தனி அறையில் இருந்துள்ளார். இதனால் கோபமடைந்த ஆனந்த் கிரணை பிடித்து சரமாரியாக தாக்கினார். பிறகு அவர் தனது மகளை சிக்கபள்ளாப்பூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். மீண்டும் கிரணை கிரிக்கெட் பேட், பைப் உள்ளிட்டவற்றால் கொடூரமாக தாக்கினார். இரக்கமே இல்லாமல் வயிறு மற்றும் மார்பில் தாக்கினார்.

    இதில் படுகாயமடைந்த நிலையில் கிரண் மயங்கினார். உடனடியாக ஆட்டோ வரவழைத்து அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் கிரண் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர். தற்போது ஆனந்த் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    English Summary

    In a shocking incident in Bengaluru, a businessman from Tamil Nadu brutally beat a worker-who was staying in the same room as his own daughter-to death using a cricket bat and a pipe.