மாலை 6.30 மணிக்கு கடத்துவோம்.. நடுவானில் இண்டிகோ விமான பயணிகள் அலறல்.. துண்டுசீட்டால் திக்திக்

  • பெங்களூர்: பெங்களூரில் இருந்து லக்னோவிற்கு இன்று மாலையில் புறப்பட்ட இண்டிகோ விமானம் வானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது விமானத்தின் கழிவறையில் ''இந்த விமானம் மாலை 6.30 மணிக்கு கடத்தப்படும்'' என்று ஆங்கிலத்தில் துண்டு சீட்டு கிடந்ததால் பயணிகள் பீதியடைந்தனர். அவசர அவசரமாக விமானம் மீண்டும் பெங்களூரில் தரையிறக்கப்பட்ட நிலையில் விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது.

    Advertisement

    பெங்களூர் கெம்பேகவுடா விமான நிலையத்தில் இருந்து இன்று மாலையில் உத்தர பிரதேச தலைநகர் லக்னோவிற்கு இண்டிகோ விமானம் (6E-451) புறப்பட்டு சென்றது.

    Advertisement

    இந்த விமானம் ஓடுபாதையை விட்டு வானில் பறக்க தொடங்கியது. கொஞ்சம், கொஞ்சமாக பைலட்டுகள் விமானத்தின் உயரத்தை உயர்த்தி கொண்டிருந்தனர்.

    அப்போது விமானத்தின் கழிவறையில் துண்டு சீட்டு ஒன்று கிடந்தது. அதில், ''இந்த விமானம் மாலை 6.30 மணிக்கு கடத்தப்பட உள்ளது. இதனை புறக்கணித்தால் அதன்பிறகு ஏற்படும் விளைவுகளை பார்க்கலாம்'' என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருந்தது. இதுபற்றி உடனடியாக விமான பணியாளர்கள் பைலட்டிடம் தகவல் தெரிவித்தனர். இதனால் பயணிகள் பதறிப்போயினர்.

    சுதாரித்து கொண்ட பைலட் பெங்களூர் விமான கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு சம்பவத்தை கூறினார். அதோடு விமானத்தை பெங்களூரில் அவசரமாக தரையிறக்க முன்னுரிமை அடிப்படையில் அனுமதி கோரினார். விமான நிலைய கட்டுப்பாட்டு பிரிவினர் அனுமதி வழங்கியதை தொடர்ந்து விமானம் வெ பத்திரமாக யாரும் இல்லாத இடத்தில் தரையிறக்கப்பட்டது.

    Advertisement

    உடனடியாக விமானத்தில் இருந்து அனைவரும் கீழே இறக்கிவிடப்பட்டனர். மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், போலீசார் உடனடியாக விமானத்தை கட்டுப்பாட்டுக்குள் எடுத்தனர். பயணிகளிடமும் விசாரைண மேற்கொண்டனர். அப்போது சந்தேகப்படும் படியாக யாரும் இல்லாதது தெரியவந்தது.

    அதுமட்டுமின்றி முன்னெச்சரிக்கையாக விமானத்திலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள் அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தினர். மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. இந்த சோதனையில் சர்ச்சைக்குரிய பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் அனைவரும் நிம்மதியடைந்தனர்.

    இருப்பினும் விமானம் கடத்தப்பட உள்ளதாக துண்டுசீட்டில் எழுதி கழிவறையில் போட்டது யார்? அதன் பின்னணி என்ன? என்பது பற்றி போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    English Summary

    An IndiGo flight from Bengaluru to Lucknow was in the air when a note-written in English and stating, "This flight will be hijacked at 6:30 PM"-was discovered in the aircraft's lavatory, causing panic among the passengers. The flight was promptly diverted back to Bengaluru, where it has since landed, and an investigation is currently underway.