நாடாளுமன்றம், சட்டசபைகளை கலைக்கனும்.. எல்லா தேர்தலிலும் முறைகேடுதான்! மல்லிகார்ஜுன கார்கே பேச்சு

  • பெங்களூர்: இன்று ஒட்டு மொத்த நாடும் சட்ட விரோத தேர்தல்கள் மூலம் நடத்தப்படுகிறது. மோடி சட்டவிரோத பிரதமராக உள்ளார். அமித்ஷாவும் சட்ட விரோத அமைச்சராகவே உள்ளார் எனவும், சட்ட விரோதமாக நடத்தப்பட்ட தேர்தல் மூலம் அமைக்கப்பட்டு இருக்கும் நாடாளுமன்றம், சட்டசபைகளை கலைக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

    Advertisement

    எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக செயல்பட்டதாக குற்றசாட்டுகள் எழுந்துள்ளன. இரு தேர்தல் ஆணையர்கள் எதிர்ப்பு தெரிவித்தும் அதனை பொருட்படுத்தாமல் தலைமை தேர்தல் ஆணையர் செயல்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

    Advertisement

    சட்டவிரோத தேர்தல்கள்

    இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நாடு முழுவதும் அனைத்து சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக மல்லிகர்ஜுன கார்கே கூறியதாவது:-

    இன்று ஒட்டு மொத்த நாடும் சட்ட விரோத தேர்தல்கள் மூலம் நடத்தப்படுகிறது. மோடி சட்ட விரோத பிரதமராக உள்ளார். அமித்ஷாவும் சட்ட விரோத அமைச்சராகவே உள்ளார். மேலும் எந்த பகுதியில் தேர்வு செய்யப்பட்டு இருந்தாலும் சரி.. அனைத்து முதல்வரும் சட்டவிரோதமானவர்களே.. அனைத்து தேர்தலும் சட்ட விரோதமானவை.

    Advertisement

    நாடாளுமன்றம், சட்டசபைகளை கலைக்க வேண்டும்

    சட்ட விரோதமாக நடத்தப்பட்ட தேர்தல் மூலம் அமைக்கப்பட்டு இருக்கும் நாடாளுமன்றம், சட்டசபைகளை கலைக்க வேண்டும். வாக்குச்சீட்டுகளை பயன்படுத்தி புதிய தேர்தல்களை நடத்த வேண்டும். இவிஎம் இயந்திரம் தவறாக பயன்படுத்தப்படுவதாக அவர்களது கட்சியினரே கூறுகிறார்கள். வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணியில் பல முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. இந்த செயல்முறையில் பல தவறுகள் உள்ளன.

    ஜனநாயகத்தை பாஜக வலுவிழக்க செய்கிறது

    இதன் மூலம் ஜனநாயகத்தை பாஜக வலுவிழக்க செய்கிறது. ஒரு வாக்குச்சாவடியில் இருந்து 500 வாக்காளர்கள் நீக்கப்பட்டால் அது எத்தகைய சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலாக இருக்க முடியும். தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் அதிகாரிகள் சட்டம் 2023 படி 16 கீழ், தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் தங்களது அதிகாரப்பூர்வ பணிகளை மேற்கொள்ளும்போது அல்லது அவ்வாறு மேற்கொண்டதாகக் கருதப்படும் செயல்களுக்காக, அவர்கள் மீது சிவில் அல்லது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படுவதிலிருந்து பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.

    Advertisement

    மோடியும் அவரை இயக்குபவர்களையும் சட்டத்தைக் கொண்டு வந்து ஜனநாயகத்தை சீரழித்து வருகின்றனர். முதலில், அவர்கள் தேர்வுக் குழுவின் அமைப்பையே மாற்றிவிட்டனர். முன்பு, இந்திய தலைமை நீதிபதி, எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோர் அந்தக் குழுவில் உறுப்பினர்களாக இருந்தனர்" என்றார்.

    English Summary

    Mallikarjun Kharge, Congress leader has stated that the entire country is currently being governed based on illegal elections; he asserted that Modi is an illegal Prime Minister and Amit Shah is an illegal Minister, and demanded the dissolution of the Parliament and Legislative Assemblies formed through these illegally conducted elections.