உல்லாசம் அனுபவித்தது போதும்.. எப்போ கல்யாணம் பண்ணுவ.. கேள்வி கேட்ட கள்ளக்காதலிக்கு நேர்ந்த சோகம்

  • பெங்களூர்: கணவரை பிரிந்த பெண்ணுடன் திருமணம் செய்யாமல் பெங்களூரில் ஒரே வீட்டில் 28 வயது இளைஞர் வாழ்ந்து வந்தார். இருவரும் அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வாழ்ந்து வந்த நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியதால் ஆத்திரமடைந்த இளைஞர், கள்ளக்காதலியை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Advertisement

    அசாம் மாநிலம் காசார் மாவட்டம் லக்கிபூர் கிராமத்தை சேர்ந்தவர் முன்னா தாஸ் (வயது 28). திருமணம் ஆனவர். இவருக்கும் சம்போதாஸ் (21) என்ற அசாம் பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. சம்போ தாஸ் தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

    Advertisement

    இந்நிலையில் தான் முன்னா தாஸ்,சம்போ தாஸ் உடன் நெருக்கமாக பழக தொடங்கினார். இந்த பழக்கம் கள்ளக் காதலாக மாறியது. இருப்பினும் இருவரும் அசாமில் இருந்தால் அடிக்கடி சேர்ந்து இருக்க முடியாது என்று முன்னா தாஸ் நினைத்தார்.

    இதனால் முன்னா தாஸ், தனது கள்ளக்காதலி சம்போ தாஸை பெங்களூர அழைத்து வந்தார். பெங்களூர் நாகரநாதபுராவில் வாடகைக்கு வீடு எடுத்து இருவரும் ஒன்றாக தங்கினர். இருவரும் உல்லாசமாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் தான் கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி அவர்கள் வசித்து வந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. வீட்டு உரிமையாளர் உள்ளே சென்று பார்த்தார்.

    Advertisement

    அப்போது வீட்டு உள்ளே சம்போதாஸ் இறந்து கிடந்தார். முன்னா தாஸை காணவில்லை. இதுபற்றி உடனடியாக வீட்டு உரிமையாளர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து சம்போ தாஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இயற்கைக்கு மாறான மரணம் என்று போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதற்கிடையே தான் பிரேத பரிசோதனை அறிக்கை கடந்த 15ம் தேதி வந்தது. அதில் சாம்போ தாஸ் மரணம் இயற்கையானது இல்லை. அவர் கழுத்து நெரித்தும், மூச்சு திணறடிக்கப்பட்டு கொல்லப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்தனர். முன்னா தாஸை தீவிரமாக தேடினர். அப்போது அவர் தமிழ்நாட்டில் பதுங்கியது தெரியவந்தது. அவரது நடமாட்டத்தை அறிந்து கொண்ட போலீசார் கடந்த 16ம் தேதி கைது செய்து பெங்களூர் அழைத்து சென்றனர். அவரிடம் நடத்திய விசாரணையில் சம்போதாஸை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதுதொடர்பாக முன்னா தாஸ் வாக்குமூலம் அளித்தார்.

    Advertisement

    அதில், ''நானும் சம்போதாசும் காதலித்து வந்தோம். சம்போதாஸ் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். இதனால் அவருடன் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்து வந்தேன். திருமணம் செய்வதாக கூறி சம்போதாஸ் உடன் உடலுறவு வைத்தேன். ஆனால் அவரை திருமணம் செய்யவில்லை. இதனால் சம்போதாஸ் அடிக்கடி திருமணம் செய்துக்கொள்ளும்படி என்னிடம் கூறுவார். இதுதொடர்பாக இருவருக்கும் அடிக்கடி சண்டை நடந்தது. சம்பவத்தன்றும் திருமணம் தொடர்பாக இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டது. அவரது கழுத்தை நெரித்து மூச்சு திணறடித்து கொன்றேன்'' என்றார்.

    English Summary

    A 28-year-old man had been living with a separated woman in a shared home in Bengaluru without being married. A shocking incident occurred when the man, enraged by her persistent demands that he marry her, strangled his partner to death.