மேகதாது விவகாரம்: கன்னட அமைப்புகள் போராட்டம்! பெங்களூர் செல்லும் தமிழக பஸ்கள் ஓசூரிலேயே நிறுத்தம்! பயணிகள் தவிப்பு

  • சென்னை: மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக அரசை கண்டித்து கன்னட ஜக்ருதி வேதிகா அமைப்பின் தலைவர் மஞ்சுநாத் தேவா தலைமையில் இன்று சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூர் செல்லும் தமிழக அரசு பேருந்துகள் ஓசூரிலேயே நிறுத்தப்பட்டன.

    Advertisement

    காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்று கர்நாடகா அடம் பிடித்து வருகிறது. கர்நாடகாவின் இந்த முயற்சியை எப்பாடுபட்டவாது தடுத்து நிறுத்துவதில் தமிழக அரசு பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. காவிரியின் குறுக்கே அணை கட்டும் முயற்சிக்கு முட்டுக்கட்டை போடும் தமிழக அரசை கண்டித்தும் மேகதாதுவில் அணை கட்டியே தீர வேண்டும் என்று வலியுறுத்தி கன்னட அமைப்புகள் இன்று போராட்டத்தை அறிவித்துள்ளன.

    Advertisement

    சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையான கர்நாடக மாநில அத்திப்பள்ளியில் சாலை மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு பேருதுகள் ஓசூரிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.

    தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்க்ளில் இருந்தும் ஓசூர் வழியாக பெங்களூருக்கு அரசு விரைவுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நெல்லை, மதுரை, சென்னை, கன்னியாகுமரி என பலநகரங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், இந்த பேருந்துகள் அனைத்தும் இன்று ஓசூரிலேயே நிறுத்தப்பட்டன. கர்நாடகாவில் இருந்து ஓசூருக்கு இயக்கப்படும் பேருந்துகளும் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளன.

    நாளொன்றுக்கு 110 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், 20 சதவீத பேருந்துகளே இயக்கப்படுகின்றன. தனியார் பேருந்துகள் மட்டும் வழக்கம் போல் இயங்குகின்றன. இதனால், மக்கள் முண்டியடித்துக்கொண்டு பேருந்துகளில் ஏறுவதை பார்க்க முடிகிறது. குறைந்த அளவிலான பேருந்துகள் மட்டுமே இயங்குவதால் பயணிக்ள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

    Advertisement

    மருத்துவம், தொழில் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இரு மாநிலங்களில் இருந்தும் தினம் தோறும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் நிலையில் கன்னட அமைப்புகளின் மறியல் அறிவிப்பால் பயணிகள் கடும் திண்டாட்டத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

    English Summary

    Mekedatu dam: A road blockade protest has been announced for today, led by Manjunath Deva of the Kannada Jagruthi Vedike, to condemn the Tamil Nadu government's opposition to the Mekedatu dam project. As a precautionary measure, Tamil Nadu government buses bound for Bangalore have been halted at Hosur.