கர்நாடகாவுக்கு வேற ஆப்ஷன் கிடையாது.. வழிக்கு வந்த டி.கே.சிவகுமார்! மேட்டூர் திறப்பு கன்பார்ம்!

  • பெங்களூர்: கர்நாடாகவில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால், அம்மாநில அணைகள் முழு கொள்ளவை எட்ட தொடங்கியிருக்கின்றன. இதனால், அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

    Advertisement

    கர்நாடகாவில் காவிரி கிளை ஆற்றின் குறுக்கே 4 அணைகள் கட்டப்பட்டிருக்கின்றன. குறிப்பாக கபினி அணை அதன் முழு கொள்ளளவை எட்டியிருக்கிறது. எனவே அணைக்கு வரும் நீர் காவிரி நதியில் திறந்துவிடப்படுகிறது.

    Advertisement

    கபினி அணையின் மொத்த கொள்ளளவு 19.52 டிஎம்சி. இதில் 19.06 டிஎம்சி அளவுக்கு தற்போது தண்ணீர் இருக்கிறது. அணைக்கான நீர் வரத்தும் சீராக இருப்பதால், அணையிலிருந்து விநாடிக்கு 5,800 கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. எனவே காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    ஆரம்பத்தில் நாங்கள் தண்ணீர் தர மாட்டோம் என்று கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் கூறியிருந்தார். இப்போது தண்ணீரை தேக்கி வைக்க போதுமான இடம் இல்லாததால், அணையிலிருந்து உபரி நீர் வேறு வழியின்றி வெளியேற்றப்பட்டு வருகிறது. கபினியின் உபரி நீர் காரணமாக மேட்டூர் அணையின் நீர் மட்டம் மேலும் அதிகரிக்கும் என்றும், இதனால் மேட்டூரிலிருந்து மேலும் அதிகமான நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.

    Advertisement

    மேட்டூர் அணை

    ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு கர்நாடகா சரியான நேரத்தில் நீரை விடுவிக்காததால், மேட்டூர் திறக்கப்படவில்லை. இதனால் டெல்டா மாவட்டங்களில் 3 லட்சம் ஏக்கரில் விவசாயம் பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே இந்த ஆண்டு சுமார் 5 லட்சம் டன் அளவுக்கு அரிசி உற்பத்தி பாதிக்கப்படலாம் என்றும், இது அரிசி விலையை உயர்த்தும் என்றும் சொல்லப்படுகிறது.

    மேட்டூர் அணை குறைந்தபட்சம் 90 அடியை எட்டினால்தான் திறப்பார்கள். மட்டுமல்லாது அணைக்கான நீர்வரத்து சீராக இருக்க வேண்டும். இதையெல்லாம் கணக்கில் கொண்டு 100-120 நாட்களுக்கு தொடர்ந்து தண்ணீர் திறந்தால்தான் குறுவை சாகுபடி முறையாக நடக்கும்.

    Advertisement

    இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் மட்டம் 89.24 அடியாக இருக்கிறது. அணைக்கான மொத்த கொள்ளளவான 93.47 டிஎம்சியில்தற்போதைய நீர் இருப்பு 51.78 டிஎம்சியாக இருக்கிறது. அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 7,454 கனஅடியாக இருக்கிறது. தற்போது கர்நாடகாவின் கபினி அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், அணைக்கான நீர் வரத்து மேலும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. செப்.1ம் தேதி பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Mettur water level: Widespread rainfall in the areas of Karnataka adjacent to the Western Ghats has caused the state's dams to begin reaching full capacity. Consequently, the volume of water being released from the dams has also been increased.