2 திருமணம் முடிக்கும் எம்எல்ஏக்கள்.. பெங்களூர் மக்கள்தொகை அதிகரிப்பது ஏன்? டிகே சிவக்குமார் சர்ச்சை

  • பெங்களூர்: பெங்களூரில் ஏன் மக்கள் தொகை அதிகரிக்கிறது என்பதுபற்றிய விவாதத்தில் கர்நாடகா முதல்வர் டிகே சிவக்குமார், ''பிற பகுதிகளில் இருந்து பெங்களூர் வரும் எம்எல்ஏக்கள் மீண்டும் திரும்பி செல்வது இல்லை. அவர்கள் 2 திருமணங்கள் செய்கின்றனர். இப்படியான எம்எல்ஏக்கள் டஜன் அளவில் உள்ளனர். அதற்கான பட்டியலை என்னால் கொடுக்க முடியும்'' என்று கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

    Advertisement

    கர்நாடகா சட்டசபையில் வறட்சி, பெங்களூர் நகரமயமாக்கல், மக்கள்தொகை அதிகரிப்பு பற்றி விவாதம் நடந்தது. இந்த விவாதத்தில் கர்நாடகா முதல்வர் டிகே சிவக்குமார் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    Advertisement

    ''கெம்பேகவுடா பெங்களூரை வடிவமைத்தார். கெங்கல் ஹனுமந்தையா விதானசவுதாவை கட்டினார். எஸ்எம் கிருஷ்ணா பெங்களூரை சர்வதேச நகரமாக மாற்றினார். பெங்களூருவுக்கு யார் வந்தாலும் அவர்கள் மீண்டும் செல்வது இல்லை.

    ஏன் நீங்களும் (எம்எல்ஏக்கள்) பெங்களூர் வந்தபிற மீண்டும் செல்வது இல்லை. பெங்களூர் வரும் அனைவருக்கும் 2 திருமணங்கள் ஆகி உள்ளது. டஜன் அளவில் அவர்கள் இருக்கின்றனர். என்னால் லிஸ்ட்டை கொடுக்க முடியும். தார்வார், தட்சிண கன்னடா உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த எம்எல்ஏக்களின் பெயரை என்னால் சொல்ல முடியும். ஆனால் அதுபற்றி பேச வேண்டாம்.

    அதேபோல் வழக்கறிஞர்கள் பெங்களூர் வந்துவிட்டால் மீண்டும் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வது இல்லை. இதனால் தான் பெங்களூர் நகரின் மக்கள்தொகை இப்படி அதிகரித்து கெண்டே செல்கிறது. நகரின் மக்கள்தொகை உயர்வு 33 சதவீதத்தில் இருந்து தற்போது 47 சதவீதமாக அதிகரித்துள்ளது'' என்று கூறினார்.

    Advertisement

    இதை கேட்டதும் எதிர்க்கட்சி தலைவர் ஆர் அசோக், ''இது தேவையற்ற கருத்து. உண்மையில் 2 திருமணம் செய்த எம்எல்ஏக்களின் பெயர் பட்டியலை வெளியிட வேண்டும். டிகே சிவக்குமார் இப்படி கூறியுள்ளதன் மூலம் மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்து பெங்களூருவுக்கு வந்தள்ள ஒவ்வொரு எம்எல்ஏக்களின் தலைக்கு மேலும் இப்போது கத்தி தொங்கி கொண்டிருக்கிறது. டிகே சிசவக்குமாரின் இந்த கருத்து பெங்களூரை பூர்வீகமாக கொண்டிராத எம்எல்ஏக்களையே குறிபக்கிறது. நான் பெ்ஙகளூரில் பிறந்து வளர்ந்தவன்'' என்றார்.

    பெங்களூர் ராஜாஜி நகர் பாஜக எம்எல்ஏ சுரேஷ் குமார் கூறுகையில், '' டிகே சிவக்குமார் வேடிக்கையாக இந்த விஷயத்தை கூறியிருக்கலாம். அவர் பேசும்போது நான் சபையி்இருந்தேன். உடனடியாக நான் எதிர்ப்பு தெரிவித்தேன். டிகே சிவக்குமாரின் இந்த பேச்சு கர்நாடகா சட்டசபை மாண்பை ஒருபோதும் உயர்த்தாது'' என்றார்.

    English Summary

    Karnataka CM DK Shivakumar has sparked a controversy during a discussion on Bengaluru's rising population by stating, "MLAs who come to Bengaluru from other regions do not return; they enter into second marriages. There are dozens of such MLAs, and I can provide a list of them."