பெங்களூரில் மனித சங்கிலி போராட்டம்.. அழைப்பு விடுத்த கரப்பான் பூச்சி கட்சி! போலீஸ் அதிரடி தடை!

  • பெங்களூர்: பெங்களூரில் சமூக வலைதளங்களில் பெரும் அலைகளை ஏற்படுத்தி வரும் 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' (Cockroach Janta Party) சார்பில் அறிவிக்கப்பட்ட மனிதச் சங்கிலிப் போராட்டத்திற்கு காவல்துறை தடை விதித்துள்ளது.

    Advertisement

    காக்ரோச் ஜனதா கட்சி, நாளை மறுநாள் (மே24) காலை 11 மணிக்கு டவுன் ஹாலில் அமைதியான மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தப் போவதாக சமூக வலைதளங்களில் போஸ்டர் வெளியிட்டது. தங்கள் பலத்தை வெளிப்படுத்தி, சுயநல நிர்வாகத்திற்கு ஒரு மெசேஜ் அனுப்பவே இந்தப் போராட்டம் திட்டமிடப்பட்டது. ஆனால், அனுமதி கோரப்படாததால், காவல்துறை இதை திட்டவட்டமாக தடை விதித்தது.

    Advertisement

    அனுமதி மறுக்கப்பட்டதற்கு, கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவும் ஒரு காரணம். அதன்படி, 'ஃப்ரீடம் பார்க்' தவிர பெங்களூருவில் வேறு எங்கும் போராட்டங்களுக்கு அனுமதி இல்லை. டவுன் ஹாலில் கூடினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் என காவல்துறை எச்சரித்துள்ளது.

    வைரலான அந்தப் போஸ்டரில், “காக்ரோச் ஜனதா கட்சியின் அனைத்து கரப்பான்பூச்சிகளும் மற்றும் ரசிகர்களும் எங்களது பலத்தைக் காட்டவும், சுயநல நிர்வாகத்திற்கு ஒரு செய்தியை அனுப்பவும் டவுன் ஹால் அருகே வாரீர்” என அழைப்பு விடுக்கப்பட்டது. இளைஞர் எதிர்காலமின்மை, நீட் தேர்வுச் சுமை, விலைவாசி உயர்வு, வாக்குகள் திருடப்படுவது போன்ற சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அழைப்பு விடுக்கப்பட்டது.

    Advertisement

    உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், “வேலையில்லாத இளைஞர்களைக் கரப்பான்பூச்சிகள் மற்றும் சமூகத்தின் ஒட்டுண்ணிகள்” என ஒப்பிட்டதாகக் கூறப்பட்டதற்குப் பதிலடியாக, அரசியல் உத்தி வகுப்பாளர் அபிஜீத் திப்கேவால் அன்று இந்த கரபான்பூச்சி தொடங்கப்பட்டது.

    தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே, காக்ரோச் ஜனதா கட்சி இன்ஸ்டாகிராமில் 2 கோடிக்கும் (20 மில்லியன்) அதிகமான பின்தொடர்பவர்களைப் பெற்று பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. இந்தியாவின் முன்னணி அரசியல் கட்சிகளின் அதிகாரப்பூர்வ பக்கங்களை விட அதிக இணைய ஆதரவை இது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Bengaluru: The police have imposed a ban on the human chain protest announced by the 'Cockroach Janta Party'—an outfit that has been making significant waves on social media in Bengaluru. The Cockroach Janta Party had released posters on social media stating that it intended to conduct a peaceful human chain protest at Town Hall the day after tomorrow (May 24) at 11:00 AM.