பெங்களூர் பெயரை சேர்த்து கர்நாடகாவில் 2 மாவட்டங்களின் ‘நேம்' மாற்றம்? வலுத்தது டிமாண்ட்

  • பெங்களூர்: பெங்களூர் நகரின் அருகே ராமநகர், துமகூரு என்ற மாவட்டங்கள் உள்ளன. இந்நிலையில் தான் ராமநகர் மாவட்டத்தின் பெயரை பெங்களூர் தெற்கு மாவட்டம் என்றும், துமகூரு மாவட்டத்தின் பெயரை பெங்களூர் வடக்கு மாவட்டம் என்றும் பெயர் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்து வரும் நிலையில் தற்போது வலுக்க தொடங்கி உள்ளது.

    Advertisement

    கர்நாடகாவின் தலைநகராக பெங்களூர் உள்ளது. பெங்களூர் நகரில் மக்கள்தொகை நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது. இதனால் நிலம் மற்றும் வீடுகளின் மதிப்பு கிடுகிடுவென அதிகரித்து செல்கிறது. மக்கள்தொகை பெருக்கத்தால் பெங்களூர் நகர் விரிந்து கொண்டே செல்கிறது. புறநகர் பகுதிகளில் ஏராளமான புதிய நிறுவனங்கள் தொடங்கப்படுகிறது. இதனால் பொதுமக்களும் அங்கு குடியேறி வருகின்றனர்.

    Advertisement

    Photo Credit:

    இதனால் அண்டை மாவட்டங்களும், பெங்களூர் நகரும் ஒன்றாக இணையும் நிலை ஏற்பட்டுள்ளது. புறநகர் பகுதிகளில் உள்ள சில கிராமத்தை சேர்ந்தவர்கள் தங்கள் பகுதியை பெங்களூர் நகருடன் சேர்த்து கொள்ள வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

    இந்நிலையில் தான் கர்நாடகா உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் இன்று அளித்த பேட்டியில், ''எங்களின் மாவட்டம் துமகூரு, பெங்களூரின் அருகே அமைந்துள்ளது. பெங்களூரில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இதனால் எங்கள் மாவட்டத்தை பெங்களூரின் ஒரு பகுதியாக மாற் வேண்டும். துமகூரு வரை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான திட்டத்தை நாங்கள் ஏற்கனவே தயாரித்துள்ளோம். அதை பட்ஜெட்டில் முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். இந்த திட்டத்தை நிறைவேற்ற முதல்வர், துணை முதல்வர் உறுதி கொடுக்க வேண்டும்'' என்றார்.

    Advertisement

    இந்த கோரிக்கையை வைத்துள்ள பரமேஸ்வர் துமகூரு மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் துமகூரு மாவட்டம் கொரட்டகெரே சட்டசபை தொகுதியில் 3வது முறையாக வென்று உள்துறை அமைச்சராக செயல்பட்டு வருகிறார். கர்நாடகா காங்கிரஸ் தலைவராக 2 முறை பதவி வகித்து வந்துள்ளார். பரமேஸ்வரின் இந்த கோரிக்கைக்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் பரமேஸ்வர் துமகூரு மாவட்டத்தின் பெயரை பெங்களூர் வடக்கு என மாற்றம் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்.

    முன்னதாக கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவக்குமார் தனது சொந்த மாவட்டமான ராமநகரின் பெயரை மாற்றம் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். இந்த ராமநகர் மாவட்டம் என்பது பெங்களூரின் அருகே அமைந்துள்ளது. இதனால் ராமநகர் மாவட்டத்தின் பெயரை பெங்களூர் தெற்கு என்று பெயர் மாற்றம் செயய வேண்டும் என்று கூறி உள்ளார். அந்த வரிசையில் தற்போது துமகூரு மாவட்டத்தின் பெயரை பெங்களூர் தெற்கு என மாற்றம் செய்ய உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கோரிக்கை வைத்துள்ளார்.

    Advertisement

    தற்போது கர்நாடகாவில் பெங்களூர் என்று தனி மாவட்டமும், பெங்களூர் புறநகர் என்று தனி மாவட்டமும் உள்ளது. இதில் பெங்களூர் நகரில் மக்கள்தொகை அதிகரித்து இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பல நிறுவனங்கள் பெங்களூர் புறநகர் பகுதியை நோக்கி செல்கின்றன. அந்த வகையில் தங்களின் மாவட்டங்களின் பெயரையும் பெங்களூர் என்பதை சேர்த்து மாற்றினால் தொழில் நிறுவனங்கள் பெருகி வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என பரமேஸ்வர், டிகே சிவக்குமார் ஆகியோர் நம்புகின்றனர்.

    இதனால் தான் தங்கள் மாவட்டங்களின் பெயரை மாற்றம் செய்ய வேண்டும் என பேசி வருகின்றனர். இருப்பினும் தற்போது வரை பெயர் மாற்றம் தொடர்பாக முதல்வர் சித்தராமையா எந்த முடிவையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    The districts of Ramanagara and Tumakuru are situated in the vicinity of Bangalore city. Against this backdrop, a long-standing demand-to rename Ramanagara District as 'Bangalore South District' and Tumakuru District as 'Bangalore North District'-has recently begun to gain momentum.