என்னது பேச்சுலரா? பெங்களூரில் ஆசை ஆசையாக வாடகை பிளாட்டுக்கு போன வாலிபர்.. கடைசியில் நேர்ந்த கதி

  • பெங்களூர்: இளம் வயது.. கைநிறைய சம்பளம்.. கேட்ட அட்வான்ஸ் தொகையும் கொடுத்து வசிப்பதற்கான பிளாட் சாவியையும் கையில் வாங்கினார் அந்த இளைஞர். பெங்களூரில் நீண்டகாலமாக வாடகைக்கு வீடு தேடியும் கிடைக்காமல் தவித்த அந்த இளைஞர் வீடு தேடும் போர் முடிந்துவிட்டது என்று உற்சாகமாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட நிலையில் திருமணமாகவில்லை என்று கூறி 5 நாட்களில் பிளாட்டை காலி செய்ய அறிவுரை வழங்கப்பட்டு இருக்கும் சம்பவம் நடந்துள்ளது.

    Advertisement

    பேச்சுலராக இருந்தால் வீடு கிடைக்காது என்று 80,90ஸ் காலத்தில் சொல்வார்கள். இந்த நிலை தற்போதும் தொடர்ந்து வருகிறது. குறிப்பாக சென்னை, பெங்களூர் போன்ற ஹைடெக் நகரங்களிலும் இந்த நிலை தான் நீடிக்கிறது. இதற்கு உதாரணமாக தான் பெங்களூரில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:

    Advertisement

    அந்த இளைஞரின் பெயர் நிகில் ஷியோரன். இளம் வயது. இன்னும் 30யை தொடவில்லை. திருமணம் ஆகாத பேச்சுலர். இவர் நீண்டகாலமாக பெங்களூரில் வசிக்க 'பிளாட்' தேடினார். ஆனால் எங்கு தேடியும் அவருக்கு ஏற்ற பிளாட் கிடைக்கவில்லை. பிளாட் நன்றாக இருந்தால் 'நாங்க பேச்சுலருக்கு எல்லாம் வீடு கொடுக்கிறது இல்லைப்பா' என்று விரட்டியடிக்கும் சம்பவங்கள் நடந்தன.

    இதனால் நிகில் ஷியோரன் தவித்து வந்தார். கடந்த 22ம் தேதி அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ''பெங்களூரில் வசிக்க பிளாட் தேடிப்போனேன். இன்றைய நாளிலும் 2ம் தர குடிமகன் போல் என்னை நடத்தினார்கள். என்னுடைய கெட்ட நேரம் என்னவென்றால் 20 வயதில் திருமணம் முடித்து குடும்பமாக இருக்க முடியாதே'' என்று கூறியிருந்தார். திருமணம் ஆனவர்களுக்கு மட்டுமே பிளாட் கொடுப்பதாக பலரும் சொல்வதால் பிளாட் கிடைக்காமல் அவதிப்படுவதை அவர் இப்படி பதிவு செய்திருந்தார்.

    Advertisement

    இந்த பதிவை தொடர்ந்து அடுத்த 3 நாட்களில் அதாவது செப்டம்பர் 25ம் தேதி அவருக்கு பிளாட் கிடைத்தது. பிளாட்டின் முன்பு கையில் சாவி வைத்திருப்பது போல் தனது எக்ஸ் பக்கத்தில் போட்டோவை பகிர்ந்ததோடு, ''போர் முடிவடைந்து விட்டது?'' என்று எழுதியிருந்தார். பிளாட் தேடி அலைந்த தனக்கு இறுதியாக கிடைத்துவிட்டதாக அவர் கூறியிருந்தார் நிகில் ஷியோரன். அவருக்கு பலரும் வாழ்த்துகள் தெரிவித்தனர்.

    நிகில் ஷியோரனும் ஹேப்பியானார். ஆனால் இந்த மகிழ்ச்சி நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. 'பேச்சுலர் இங்கே தங்க கூடாது. உடனடியாக பிளாட்டை காலி செய்ய வேண்டும்'' என்று குடியிருப்பு நலச்சங்க தலைவர் அவருக்கு அறிவுரை வழங்கி உள்ளார்.

    Advertisement

    நிகில் ஷியோரன் வாடகைக்கு எடுத்துள்ள பிளாட் அமைந்து இருக்கும் குடியிருப்பில் குடியிருப்போர் நலச்சங்கம் உள்ளது. இந்த சங்கத்தை சேர்ந்த தலைவர் நிகில் ஷிரோனுக்கு வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பினார் அதில், ''நா்ன குடியிருப்பு நலச்சங்கத்தின் இப்போதைய தலைவர். உங்கள் ஓணரிடம் பேசிவிட்டு தயவு செய்து வேறு பிளாட்டை பாருங்க'' என்று மெசேஜ் அனுப்பினார்.

    இதற்கு நிகில் ஷியோரன், ''நாங்கள் டெபாசிட் பணம் கட்டிவிட்டோம். வாடகை தொடர்பான ஒப்பந்தம் செய்துள்ளோம். உரிமையாளரிடம் ஆலோசித்துவிட்டோம். நீங்கள் ஓணரிடம் பேசுனீர்களா?'' என்று கேட்டார். அதற்கு தலைவர், ''ஆமாம். நாங்கள் பேசினோம். திருமணம் ஆகாத பேச்சுலர்களுக்கு வீடு கொடுக்க கூடாது என்ற சங்கத்தின் முடிவு பற்றி தெரிவித்தோம். இதனால் உங்களின் ஓணருடன் பேசி முடிந்தவரை விரைவாக காலி செய்யுங்கள்'' என்று கூறியுள்ளார்.

    Advertisement

    இதனால் நிகில் ஷியோரன் அதிர்ச்சியில் உறைந்தார். இதுதொடர்பான் ஸ்கீரின்ஷாட்டை எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்த ''பெங்களூரின் பிளாட் உரிமையாளர்கள் மிகவும் கொடூரமானவர்கள். நீங்கள் திருமணம் செய்யாத பேச்சுலர் என்று தெரிந்திருந்தால் அவர்கள் உங்களின் தலையில் துப்பாக்கி வைத்து கூட சுட்டுவிடுவார்கள்'' என்று கூறியுள்ளார். நீண்ட தேடுதல் வேட்டைக்கு பிறகு கிடைத்த இந்த பிளாட்டையும் தற்போது நிகில் ஷியோரன் காலி செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இதனை பார்த்த பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

    English Summary

    Residential Welfare Association president evicts young man from rented flat in Bengaluru for being a bachelor.