கர்நாடகாவில் புயலை கிளப்பும் பிரகாஷ் ராஜ்! SIRக்கு எதிராக நேரடியாக களமிறங்கி பிரச்சாரம்!

  • பெங்களூர்: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடைமுறைக்கு (SIR) எதிராக நடிகர் பிரகாஷ் ராஜ் கர்நாடகாவில் தொடங்கியிருக்கும் களப்போராட்டம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கிறது. செப்.23 அன்று கல்புர்கி மாவட்டத்தின் ராமநகர் பகுதியில் உள்ள பழங்குடியின மக்கள் மற்றும் குடிசை பகுதி குடியிருப்பாளர்களை நேரில் சந்தித்து தனது 10 நாட்கள் SIR எதிர்ப்பு பயணத்தை தொடங்கியிருக்கிறார். இவரது நடவடிக்கை தற்போது கர்நாடகாவில் மிகுந்த கவனம் பெற்றிருக்கிறது.

    Advertisement

    கல்புர்கி மாவட்டத்தில் மட்டும் சுமார் 5,21,950 வாக்காளர்கள் நீக்கபட உள்ளனர் என்று பிரகாஷ் ராஜ் குற்றம்சாட்டியிருக்கிறார். கேட்டால்.. தொகுதி மாறினோர், முகவரி மாற்றியவர்கள், உயிரிழந்தவர்கள், போலி வாக்காளர்களைதான் நாங்கள் நீக்க இருக்கிறோம் என்று தேர்தல் ஆணையம் விளக்கமளித்திருப்பதாக கூறியுள்ளார்.

    Advertisement

    தேர்தல் ஆணையத்திற்கு கேள்வி

    தேர்தல் ஆணையத்தின் மிகக் குறுகிய காலக்கெடுவுக்குள் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான சாமானிய மக்கள் தங்களின் தகுதியை எவ்வாறு நிரூபிக்க முடியும்? என்று அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார். ஏற்கெனவே பல ஆண்டுகளாக வாக்களித்து வரும் தகுதியான குடிமக்களை எதற்காக புதிய வாக்காளர்களுக்கான படிவம் 6ஐ சமர்ப்பிக்குமாறு தேர்தல் ஆணையம் வற்புறுத்துகிறது? என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

    தனது பெயரே இல்லை

    பெங்களூரில் வசிக்கும் தனது பெயரும் இதே போல நீக்கல் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்ட அவர், நான் ஒரு பிரபலமான நபர் என்பதால் எப்படியாவது எனது படிவத்தை அதிகாரிகள் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால், அரசு அலுவலக நடைமுறைகள் தெரியாத ஏழை மற்றும் விளிம்புநிலை மக்களின் நிலை என்ன? படிவம் 6ல் ஏதேனும் தவறான தகவல்கள் இருந்தால், அதற்கு விண்ணப்பதாரரே சட்டப்பூர்வ விளைவுகளை சந்திக்க நேரிடும் என்ற பயமும் மக்களிடையே உள்ளது என்று பிரகாஷ் ராஜ் கூறியிருக்கிறார்.

    Advertisement

    மிரட்டும் நிர்வாகம்

    தேர்தல் அதிகாரிகள் மற்றும் அரசு நிர்வாகம் விஜபிகளையும் ஏழை மக்களையும் கையாளும் விதத்தில் உள்ள பாகுபாட்டை பிரகாஷ் ராஜ் கடுமையாக சாடியுள்ளார். "பெரிய அரசியல் தலைவர்கள் அல்லது ஓய்வு பெற்ற நீதிபதிகளின் வாக்காளர் அட்டையில் ஏதேனும் தவறு இருந்தால், அதிகாரிகள் அவர்களது வீட்டிற்கெ நேரில் சென்று சரி செய்கிறார்கள். ஆனால், குடிசை பகுதிகளிலும், சாமானிய மக்களின் குடியிருப்புகளிலும் வாழும் ஏழை மக்கள் கெடு தேதிக்குள் ஆவணங்களை சமர்ப்பிக்காவிட்டால் மொத்தமாக பெயரை நீக்கிவிடுவோம் என நிர்வாகம் மிரட்டுகிறது" என்று விமர்சித்திருக்கிறார்.

    வட்டமேசை மாநாடு

    இந்த 10 நாட்கள் பயணத்தின் முடிவாக செப்.30 அன்னு பெங்களூருவில் அனைத்து சமூக ஆர்வலர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளுடன் இணைந்து ஒரு வட்டமேசை மாநாட்டை நடத்த திட்டமிட்டிருக்கிறார். அன்று சேகரிக்கப்படும் அனைத்து ஆவணங்கள் மற்றும் கள நிலவரத் தரவுகளை கர்நாடக முதலமைச்சரிடம் நேரில் வழங்கி இந்த SIR திருத்த முறையை முழுமையாக திரும்பப்பெற வலியுறுத்த உள்ளார். தொடர்ந்து அக்.1 அன்று டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தி இந்த விவகாரத்தை தேசிய அளவில் கொண்டு செல்ல போவதாகவும் கூறியிருக்கிறார்.

    Advertisement

    தற்போது பிரகாஷ் ராஜ் கர்நாடகா முழுவதும் மக்களை சந்தித்து பிரச்சனைகளை கேட்டு வருகிறார். அவரது முயற்சிக்கு மக்கள் பரவலாக ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். இந்த மூமெண்ட் தற்போது கர்நாடகா முழுவதும் கவனம் பெற்றிருக்கிறது.

    English Summary

    Prakash Raj: The grassroots campaign launched by actor Prakash Raj in Karnataka against the Special Intensive Revision (SIR) of the electoral rolls has garnered a positive response from the public. He began his 10-day protest tour on September 23 by personally meeting tribal communities and slum dwellers in the Ramanagar area of ​​Kalaburagi district. His initiative is currently attracting significant attention across Karnataka.