ஞானேஷ் குமார் பதவி விலகினால் மட்டும் போதாது! எஸ்ஐஆரே இருக்க கூடாது! பிரகாஷ் ராஜ் டென்ஷன்

  • பெங்களூர்: பெங்களூரில் எஸ்.ஐ.ஆருக்கு எதிராக நடந்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டத்தில் பங்கேற்ற நடிகர் பிரகாஷ் ராஜ், ஞானேஷ் குமார் பதவி விலகினால் மட்டும் போதாது.. எஸ்ஐஆரே இருக்க கூடாது என்று கூறினார். மேலும், "ஆதிவாசிகள், ஏழைகள், சிறுபான்மையினர் மற்றும் முஸ்லீம்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளது. அவர்களை கொல்ல முடியாது என்பதால் அவர்களின் வாக்குகளை பறித்துள்ளீர்கள்" எனவும் குற்றம்சாட்டினார்.

    Advertisement

    எஸ்.ஐ.ஆருக்கு எதிராக பெங்களூரில் நடைபெற்ற கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டத்தில் பங்கேற்ற பிரகாஷ் ராஜ் கூறியதாவது:- எஸ்.ஐ.ஆர் நடைமுறையை கைவிட வேண்டும். வாக்காளர்கள் பட்டியலில் இருந்து பெயர்களை வெறுமனே நீக்க மட்டுமே அது பயன்படுத்தப்படுகிறது. இது குடிமக்கள் மீதான தாக்குதலுக்கு நிகரானது.

    Advertisement

    எஸ்.ஐ.ஆரை ரத்து செய்ய வேண்டும்

    மோடி மற்றும் அமித்ஷா ஆகியோரின் கட்டளையை பின்பற்றி ஞானேஷ் குமார் செயல்படுகிறார். ஆதிவாசிகள், ஏழைகள், சிறுபான்மையினர் மற்றும் முஸ்லீம்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளது. அவர்களை கொல்ல முடியாது என்பதால் அவர்களின் வாக்குகளை பறித்துள்ளீர்கள். ஞானேஷ் குமார் பதவி விலகுவதற்காக மட்டும் நாங்கள் போராடவில்லை.

    ஞானேஷ் குமார் ராஜினாமா செய்தால் இன்னொருவர் வரப்போகிறார். எங்களுக்கு தேவை எல்லாம் எஸ்.ஐ.ஆர் ரத்து செய்ய வேண்டும். அதன்பிறகு ஞானேஷ் குமாரிடம் விசாரணை நடத்த வேண்டும். அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய வேண்டும். என்று கூறினார்.

    Advertisement
    எஸ்ஐஆர் ரத்து செய்யனும்.. பெங்களூரில் சிஜேபி போரட்டம்.. கைகோர்த்த துருவ் ராதே, பிரகாஷ் ராஜ்

    காங்கிரஸ் போராட்டம்

    எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக செயல்பட்டதாக சக தேர்தல் ஆணையர்கள் அதிருப்தி தெரிவித்ததாக வெளியான தகவல் இந்திய அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. ஏற்கனவே தேர்தலுக்கு முன்பே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எஸ்.ஐ.ஆர் எனப்படும் வாக்காளர் திருத்த சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தன.

    எஸ்.ஐ.ஆரில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் ஞானேஷ் குமார் மீது சக தேர்தல் ஆணையர்களே குற்றச்சாட்டு வைத்ததை எதிர்க்கட்சிகள் விடாமல் பிடித்துகொண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்தியா கூட்டணி எம்பிக்கள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யபப்ட்டனர்.

    Advertisement
    ஞானேஷ் குமாருக்கு எதிராக போராட்டம்.. தடையை மீறி சென்றதாக ராகுல், பிரியங்கா மீது பாய்ந்தது வழக்கு

    பெங்களூரில் போராட்டம்

    இதே போன்று தான் மாணவ அமைப்புகள் மற்றும் இளைஞர்கள் ஒன்று சேர்ந்த ஆரம்பித்த கரப்பான் பூச்சி ஜனதாவும் போராட்ட களத்தில் குதித்துள்ளது. டெல்லியில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி எம்பிக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கும் நிலையில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியும் பெங்களூரில் இந்த போராட்டத்தினை நடத்தியது.

    இந்த போராட்டத்தில் பங்கேற்ற போது தான் பிரகாஷ் ராஜ் மேற்கண்டவாறு பேசினார். இந்த போராட்டத்தில் யூடியூபரும் அரசியல் ஆய்வாளருமான துருவ் ரத்தே இடது சாரி தலைவர்கள் நேஹா போரா மற்றும் ஆஷ் கோஷ் ஆகியோரும் பங்கேற்றனர்.

    English Summary

    Prakash Raj, who participated in the 'Cockroach Janata Party' protest in Bangalore against the SIR, stated that the resignation of Gyanesh Kumar alone is not enough—the SIR itself should not exist.