பெங்களூர் - சென்னை எக்ஸ்பிரஸ்வே டோல் கட்டணம் அதிரடியாக உயர்வு! புதிய ரேட் என்ன?

  • பெங்களூர்: பெங்களூர் - சென்னை எக்ஸ்பிரஸ்வேயில் சுங்கக் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை - பெங்களூர் எக்ஸ்பிரஸ்வேயில், 71 கிலோ மீட்டர் தொலைவுக்கு கர்நாடக பகுதியில் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளது. ஹோஸ்கோட்டே - பெத்தமங்களா வரையில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் தான் தற்போது கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    Advertisement

    ஜூலை 22 ஆம் தேதி இந்த புதிய கட்டணம் அமலுக்கு வந்தது. அடுத்த ஆண்டு மார்ச் வரை இந்த கட்டணம் அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டணப்படி, கார்கள், ஜீப்கள், வேன்கள் மற்றும் பிற இலகு ரக வாகனங்களுக்கு ரூ.150 கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. ஹோசகட்டவில் இருந்து கேஜிஎப் - பெதமங்களா (சுந்தரபாளையா) வரை இதற்குள் வருகின்றன. ஒரு வழி பயணத்திற்கு ரூ.150-ம், அதேநாளில் திரும்ப வருவதற்கான ரிட்டன் டிரிப் கட்டணம் ரூ.225 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    சுங்கக் கட்டணம் உயர்வு

    50 டிரிப்களுக்கான மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.4,995 ஆகும். இலகுரக வணிக வாகனங்கள், மினி பஸ்களுக்கான கட்டணம் ரூ.240 ஆகும். ரிட்டர்ன் பயணத்திற்கும் சேர்த்து என்றால் ரூ.360 ஆகும். கனரக வாகனங்கள் என்றால், ஒன் வே டிரிப்பிற்கு ரூ.505 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரிட்டர்ன் டிரிப்புக்கு ரூ.755 ஆகும். மூன்று அச்சு கொண்ட வணிக வாகனங்கள் என்றால் ரூ.550 கட்டணம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ரூ.960 கட்டணம்

    நான்கு முதல் 6 அச்சு கொண்ட வாகனங்கள் என்றால் ரூ.790 கட்டணம் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏழு அல்லது அதற்கு மேல் உள்ள அச்சு வாகனங்கள் என்றால் ஒன் வே டிரிப்புக்கு ரூ.960 கட்டணம் ஆகும் ஆகும். தற்போது, ​​இந்த விரைவுச்சாலையில் கார்கள், ஜீப்புகள், மினி பேருந்துகள், பேருந்துகள் மற்றும் சரக்கு லாரிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. இருசக்கர வாகனங்கள், டிராக்டர்கள் மற்றும் ஆட்டோ-ரிக்‌ஷாக்களுக்கு அனுமதி இல்லை.

    Advertisement

    சென்னையில் இருந்து பெங்களூர் எக்ஸ்பிரஸ் வே சாலை 263 கி.மீட்டர் தொலைவு கொண்டதாகும். இந்த சாலை பயன்பாட்டுக்கு வந்தால் சென்னையில் இருந்து 3 மணி நேரத்தில் பெங்களூர் செல்ல முடியும் என்பதால், இந்த எக்ஸ்பிரஸ் வே பயணிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு நகரங்களுக்கு இடையேயும் தினமும் லட்சகக்ணக்கான பயணிகள் சென்று வரக்கூடிய நிலையில், 3 மணி நேரத்தில் செல்ல முடியும். இந்த சாலைக்கு 2012 ஆம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, ரூ.17,930 கோடி மதிப்பில் 2022 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது.

    Advertisement

    இந்த ஆண்டு இறுதிக்குள்

    இந்த சாலை திட்டம் 10 தொகுப்புகளாக பிரிக்கப்பட்டது. சாலையில், கர்நாடக எல்லைக்கு உட்பட்ட 71 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலை திறக்கப்பட்டுள்ளன. ஆந்திர பகுதிகளிலும் தமிழ்நாடு - ஆந்திரா எல்லையிலும் 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. எனினும், ஸ்ரீபெரும்பதூர், அரக்கோணம், காஞ்சிபுரம் ரூட்டில் நிலம் கையகப்படுத்துதல், ரயில்வே மேம்பால அனுமதி பெறுவதில் உள்ள சிக்கல் ஆகியவை காரணமாக சாலை பணிகள் இன்னும் முடிவடையாமல் உள்ளன.

    சென்னை - பெங்களூர் எக்ஸ்பிரஸ் வேயில் இதுவரை 230 கிலோ மீட்டர் தொலைவுக்கு பணிகள் முடிந்துள்ள நிலையில், இன்னும் முடிக்கப்படாமல் உள்ள பணிகளும் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவு பெற்று பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English Summary

    Bangalore - Chennai Expressway : Toll charges on the Bangalore-Chennai Expressway have been sharply increased. A 71-kilometer stretch of the expressway within the Karnataka region—specifically between Hoskote and Bethamangala—has been opened to traffic. It is at the toll plaza on this section that the rates have now been raised.