பிரகாஷ் ராஜ் தலைமையில் கர்நாடக முதல்வரிடம் புகார்.. SIR நடவடிக்கைக்கு எதிராக குற்றச்சாட்டு

  • பெங்களூர்: கர்நாடகாவில் 'சார்' எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடந்து வருகிறது. இந்நிலையில் தான் நடிகர் பிரகாஷ் ராஜ் உள்பட கர்நாடகாவின் பல்வேறு சிவில் சமூக அமைப்புகளை சேர்ந்த பிரமுகர்கள் அம்மாநில முதல்வர் டிகே சிவக்குமாரை சந்தித்து அவசர கடிதம் ஒன்றை வழங்கி உள்ளனர்.

    Advertisement

    கர்நாடகாவில் SIR எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகள் தொடங்கி நேற்றுடன் முடிவுக்கு வந்தது. வரைவு வாக்காளர் பட்டியல் ஆகஸ்ட் 24ம் தேதி வெளியாக உள்ளது.

    Advertisement

    இதில் நடிகர் பிரகாஷ் ராஜ் பெயர் நீக்கப்பட்டுள்ளார். பிரகாஷ் ராஜ் தற்போது வேறு முகவரியில் உள்ளதால் அவர் பெயர் நீக்கப்பட்டுள்ளது. இதனால் பிரகாஷ் ராஜ் தற்போது வசிக்கும் முகவரியில் வாக்காளர் அடையாள அட்டையை பெற வேண்டும். இதற்காக அவர் SIR படிவம் வாங்கி நிரப்பி வழங்க வேண்டும். இதனால் பிரகாஷ் ராஜ் கடும் அதிருப்தியில் உள்ளார். மத்திய அரசு மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்தை விமர்சனம் செய்துள்ளார். பாஜகவுக்கு எதிரானவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

    இந்நிலையில் தான் நடிகர் பிரகாஷ் ராஜ் உள்பட சிவில் சமூக அமைப்புகளை சேர்ந்த பிரமுகர்கள் கர்நாடகா முதல்வர் டிகே சிவக்குமார், உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே (மல்லிகார்ஜூன கார்கே மகன்)சந்தித்து அவசர கடிதம் ஒன்றை வழங்கி உள்ளனர். 'சார்' நடவடிக்கையில் 3 முக்கிய நடவடிக்கைகளை மாநில அரசு எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்

    Advertisement

    இதுதொடர்பாக பிரகாஷ் ராஜ் தலைமையிலான குழுவினர் வழங்கிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ''வாக்காளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க 3 சிறப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஒன்று கர்நாடகாவில் தற்போது தேர்தல்கள் எதுவும் இல்லை. இதனால் 'சார்' வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை முடித்து இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிடுவதில் அவசரம் தேவையில்லை. 'சார்' பணியை மேலும் மூன்று மாதம் நீட்டிப்பு செய்ய வேண்டும். அதேபோல் 'சார்' முழு பணியையும் ஓராண்டு வரை நீட்டிப்பு செய்்ய வேண்டும்.

    2வது வீடு மாறி இடம்பெயர்ந்தவர்கள், அதிகாரிகள் வீட்டுக்கு சென்றபோது அங்கு இல்லாதவர்கள் உள்பட பிற பிரிவுகளில் .ள்ளவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்க கூடாது. வாக்குச்சாவடி அலுவலர்கள் மீண்டும் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் வீடு வீடாகச் சென்று, வேறு இடங்களுக்குக் குடிபெயர்ந்து குடியேறிய மக்களுக்கு கணக்கெடுப்புப் படிவங்களையும், படிவம் எண் 8-ஐயும் வழங்கிதங்கள் வாக்குகளை மாற்றிக்கொள்ள அனுமதிக்க வேண்டும்.

    Advertisement

    3வது இந்தியத் தேர்தல் ஆணையம் விரிவாக மக்கள் தொடர்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த பணியை செய்ய தவறினால் கர்நாடகா அரசு அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும். இதுதொடர்பாக சட்டசபையில் விவாதித்து தனித்தீர்மானம் நிறைவேற்றி இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது.

    ஆனால் தற்போது கர்நாடகாவில் SIR பணி நேற்றுடன் முடிவுக்கு வந்துவிட்டது. வரும் 24ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாக உள்ளது. அதன்பிறகு பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளை ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 23ம் தேதி வரை சமர்ப்பிக்கலாம். அதன்மீதான நடவடிக்கை ஆகஸ்ட் 24 முதல் அக்டோபர் 22 வரை நடைபெறும்.

    Advertisement

    பிறகு இறுதி வாக்காளர் பட்டியல் அக்டோபர் 27ம் தேதி வெளியிடப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கிடையே தான் SIR கணக்கெடுப்பு பணியை 3 மாதங்கள் வரையும், அதன்பிறகு விடுபட்டவர்களின் பெயர்களை சேர்க்கும் பணிக்கு ஓராண்டு வரையும் காலஅவகாசம் வழங்க வேண்டும் என்று பிரகாஷ் ராஜ் குழுவினர் கடிதம் வழங்கி உள்ளனர்.

    English Summary

    A special intensive revision of the electoral roll is currently underway in Karnataka. Against this backdrop, prominent figures from various civil society organizations in the state-including actor Prakash Raj-met with CM D.K. Shivakumar and submitted an urgent letter.