தமிழக - கர்நாடக எல்லையில் மீண்டும் தொடங்கிய போக்குவரத்து.. போராட்டம் நடத்திய கன்னட அமைப்பினர் கைது!

  • பெங்களூர்: ஓசூர் வழியாக கர்நாடகாவிற்கு தற்போது கர்நாடகா மற்றும் தமிழக அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கன்னட அமைப்புகள் சார்பில் பந்த் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று காலையில் சாலை மறியல் காரணமாக தமிழக அரசு பேருந்துகள் ஓசூர் அடுத்த ஜுஜுவாடி எல்லையில் அனுமதிக்கப்படவில்லை. தற்போது, பேருந்துகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.

    Advertisement

    கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட வலியுறுத்தி இன்று ஒரு நாள் பந்த் நடத்தப்படும் என கன்னட அமைப்புகள் தெரிவித்து வந்த நிலையில் இன்று தமிழகத்தில் இருந்து ஓசூர் வழியாக தமிழக அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல் கர்நாடக மாநில அரசு பேருந்துகளும் இயக்கப்படுகிறது. ஆனால் பேருந்துகளில் குறைந்த எண்ணிக்கையில் பயணிகள் உள்ளனர்.

    Advertisement

    காவிரி நதிநீர் பங்​கீடு, மேகதாது அணை விவகாரம் ஆகிய​வற்​றில் தமிழகத்​தைக் கண்​டித்​தும், காவிரியில் நீர் திறந்துவிடக் கூடாது என வலியுறுத்தியும் கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடை​பெறும் என கன்னட கூட்​டமைப்​பின் தலை​வர் வாட்​டாள் நாக​ராஜ் தெரிவித்​திருந்தார்.

    போராட்​டத்தை கைவிடு​மாறு கர்​நாடக முதல்​வர் டிகே சிவகு​மார் கோரிக்கை விடுத்​தார். இதையடுத்​து, முன்னதாக பந்த்துக்கு ஆதரவு தெரி​வித்த கன்னட ரக்ஷன வேதி​கே, கர்​நாடக தனி​யார் பள்​ளி, கல்​லூரி​கள் கூட்​டமைப்​பு, தனி​யார் பேருந்து உரிமை​யாளர்​கள் சங்​கம், ஆட்டோ ஓட்​டுநர்​கள் சங்​கம் ஆகியவை தங்​களது முடிவை மாற்றிக் கொண்​டுள்​ளன.

    Advertisement

    இதனால், இன்று நடை​பெறும் பந்த் போராட்​டத்​தால் கர்​நாட​காவில் இயல்பு வாழ்க்கை பா​திக்​கப்​ப​டாது என தெரி​கிறது. அதேசமயம், கர்​நாட​கா, தமிழ்நாடு இடையே போக்​கு​வரத்​து பாதிப்பு ஏற்பட வாய்ப்​பு உள்ளதாகத் தெரிகிறது. எல்லைப் பகுதிகளில் மறியல் நடத்தப்படும் என்பதால், தமிழக அரசு பேருந்துகள் பல நிறுத்தப்பட்டுள்ளன. மற்ற வாகனங்கள் வழக்கம்போல சென்று வருகின்றன.

    இன்று அதிகாலையில் இரு மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து வழக்கம்போல் நடைபெற்றாலும், கன்னட ஜாக்ருதி வேதிகே என்ற கன்னட அமைப்பின் தலைவர் மஞ்சுநாத் தேவா தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர், தமிழ்நாடு - கர்நாடக எல்லையில் உள்ள கர்நாடக நுழைவுப் பகுதிக்கு அருகே திரண்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    Advertisement

    அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அதிகாரிகள் உடனடியாக தமிழ்நாடு பகுதியிலுள்ள ஜூஜுவாடி எல்லையில் பேருந்துகள் மற்றும் கனரக, இலகுரக வாகனங்களின் போக்குவரத்தை நிறுத்தினர்.

    இதன் காரணமாக தமிழ்நாட்டிலிருந்து பெங்களூர் மற்றும் கர்நாடகாவின் பிற பகுதிகளுக்குப் பயணம் செய்த பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். வாகனங்களால் எல்லையைக் கடக்க முடியாத சூழலில், பல பயணிகள் ஜூஜுவாடி சோதனைச் சாவடியிலிருந்து கர்நாடகப் பகுதிக்குள் நடந்தே சென்று, மாற்றுப் போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்துகொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.

    இதற்கிடையே, சாலையில் அமர்ந்து மறியல் செய்து போக்குவரத்தை முடக்கிய மஞ்சுநாத் தேவா மற்றும் 50-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர். போராட்டக்காரர்கள் அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, எல்லைப் பகுதியில் நிலவிய பதற்றம் தணிந்தது.

    Advertisement

    ஓசூர் வழியாக கர்நாடகாவிற்கு கர்நாடகா மற்றும் தமிழக அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கன்னட அமைப்புகள் சார்பில் பந்த் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று காலையில் சாலை மறியல் காரணமாக தமிழக அரசு பேருந்துகள் ஓசூர் அடுத்த ஜுஜுவாடி எல்லையில் அனுமதிக்கப்படவில்லை. மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து தற்போது, பேருந்துகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.

    English Summary

    Tamil Nadu busses start entering Karnataka: Traffic between Tamil Nadu and Karnataka has now returned to normal, with buses and other vehicles once again operating through the Jujuvadi border as usual.