கர்நாடகாவில்.. தமிழில் பேசிய புதுச்சேரி சுற்றுலா பயணிகளை தாக்கிய 5 பேர் கும்பல்.. என்ன நடந்தது?

  • பெங்களூர்: புதுச்சேரியில் இருந்து கர்நாடகாவில் முக்கிய சுற்றுலா தலமான சிக்கமகளூருவுக்கு 35 பேர் சுற்றுலா சென்றனர். இரவில் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு தமிழில் பேசி கொண்டிருந்தபோது 5 பேர் கும்பல் அவர்களிடம் தகராறில் ஈடுபட்டு பஸ் கண்ணாடியை உடைத்து பெண்களை கீழே தள்ளி தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக 5 பேர் கைதான நிலையில் இந்த சம்பவத்தின் பின்னணி பற்றி திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

    Advertisement

    அண்டை மாநிலமான கர்நாடகாவில் ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. குறிப்பாக குடகு, உடுப்பி, தட்சிண கன்னடா, மைசூரு, சிக்கமகளூர் உள்ளிட்ட மாநிலங்களில் ஏராளமான சுற்றுலா தலங்கள் அமைந்துள்ளன.

    Advertisement

    குறிப்பாக குடகு, சிக்கமகளூர் மாவட்டங்கள் மலை பிரதேசமாகும். இதனால் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஒவ்வொரு ஆண்டுகள் ஏராளமான மக்கள் குடகு, சிக்கமகளூர் உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா சென்று வருகின்றனர்.

    இந்நிலையில் தான் சிக்கமகளூர் மாவட்டத்தில் மழை பெய்து இதமான சூழல் நிலவி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் புதுச்சேரியை சேர்ந்த 35க்கும் அதிகமானவர்கள் பஸ் ஒன்றில் சிக்கமகளூருவுக்கு சுற்றுலா சென்றனர். அவர்கள் சிக்கமகளூர் டவுனில் இருக்கும் ஆர்ஜி ரோட்டில் அமைந்துள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தனர்.

    Advertisement

    இவர்களிடம் 5 பேர் கொண்ட கும்பல் தகராறில் ஈடுபட்டுள்ளது. தங்கும் விடுதியில் தங்கியிருந்தவர்கள் இரவில் அருகே உள்ள ஹோட்டல்களில் சாப்பிட்டு விட்டு தமிழில் பேசி கொண்டிருந்தனர். அப்போது அங்கு 5 பேர் கும்பல் வந்தது. அவர்கள் தகராறில் ஈடுபட்டனர். தங்களின் காருக்கு ஏன் வழிவிடவில்லை என்று கூறி பிரச்சனை செய்துள்ளனர்.

    இது கைக்கலப்பாக மாறி உள்ளது. அந்த கும்பல் சுற்றுலா பயணிகள் வந்த பஸ் கண்ணாடியை உடைத்தது. அதோடு பெண் சுற்றுலா பயணிகளை கீழே தள்ளியதோடு மற்றவர்களையும் தாக்கி உள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து மோதலை தடுத்து நிறுத்தினர். இதுபற்றி பசவனஹள்ளி போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரை கைது செய்தனர்.

    Advertisement

    விசாரணையில் அவர்களின் பெயர்கள் மனோஜ், உமேஷ், சந்தன், கிரீஷ், தீக்‌ஷித் என்பது தெரியவந்தது. இவர்கள் சுற்றுலா பயணிகளுடன் தகராறில் ஈடுபடும் காட்சிகள் தங்கும் விடுதியின் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. அதனபடிப்படையில் 5 பேரும் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கர்நாடகாவிற்கும், தமிழகத்துக்கும் இடையே தற்போது காவிரி நீர் பங்கீடு செய்வதில் பிரச்சனை உள்ளது. நேற்றைய தினம் கர்நாடகா - தமிழக எல்லையான அத்திப்பள்ளியில் கன்னட அமைப்பினர் வாகனங்களை தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தினர். மேலும் தமிழகத்துக்கு எதிராக ஆகஸ்ட் 13ம் தேதி (நாளை மறுநாள்) மாநிலம் தழுவிய பந்த் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

    English Summary

    Chikkamagaluru is a major tourist destination in Karnataka. An incident has caused shock where a group picked a quarrel with Tamil-speaking tourists, pushing women to the ground and assaulting them. While five individuals have been arrested in connection with this, startling details regarding the background of the incident have emerged.