கொட்டும் மழைக்கு நடுவே.. பெங்களூரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டம்.. குவிந்த தமிழ் இளைஞர்கள்!

  • பெங்களூர்: கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் இன்று கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெங்களூரில் ஏராளமான இளைஞர்கள் மழையையும் பொருட்படுத்தாமல் இந்தப் போராட்டத்தில் ஒன்றிணைந்து, "மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்" என முழங்கினர்.

    Advertisement

    பெங்களூரில் இன்று நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்களும் பங்கேற்றனர். நடிகரும், அரசியல் செயற்பாட்டாளருமான பிரகாஷ் ராஜ் இந்தப் போராட்டத்தில் பங்கேற்று இளைஞர்கள் மத்தியில் பேசினார்.

    Advertisement

    உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் விமர்சனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அபிஜித் திப்கே தொடங்கிய 'கரப்பூன்பூச்சி ஜனதா பார்ட்டி" என்ற சமூக ஊடகப் பக்கம், இளைஞர்களின் ஆதரவைப் பெற்று பெரும் இயக்கமாக உருவெடுத்துள்ளது.

    நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் டெல்லி, புணே மற்றும் லக்னோ உள்ளிட்ட நகரங்களில் போராட்டம் நடத்தினர்.

    இந்த நிலையில், நீட் வினாத்தாள் கசிவு மற்றும் சிபிஎஸ்இ தேர்வுகளில் நடைபெறும் முறைக்கேடுகளைக் கண்டித்து இன்று மாலை 4 மணியளவில் பெங்களூரின் ஃபிரீடம் பார்க் பகுதியில் கரப்பூன்பூச்சி ஜனதா பார்ட்டி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

    Advertisement

    ஏற்கெனவே, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரையில் இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் தங்களின் போராட்டம் தொடரும் என கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் கூறியிருந்தனர்.

    அந்தவகையில் இன்று பெங்களூரில் நடைபெற்ற கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் போராட்டத்தில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர். குறிப்பாக, ஏராளமான தமிழ்நாட்டு இளைஞர்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.

    பெங்களூரில் இன்று மாலை மழை பெய்தது. மழையையும் பொருட்படுத்தாமல் இந்தப் போராட்டத்தில் ஒன்றிணைந்து, "மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்" என முழங்கினர்.

    நடிகரும், அரசியல் செயற்பாட்டாளருமான பிரகாஷ் ராஜ், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நடத்திய இந்தப் போராட்டத்தில் பங்கேற்று இளைஞர்கள் மத்தியில் பேசினார். தங்கள் எதிர்காலத்திற்காகப் போராடிக் கொண்டிருக்கும் இந்நாட்டு இளைஞர்களின் குரலைக் கேட்குமாறு ஆளும்கட்சியினரை நடிகர் பிரகாஷ் ராஜ் வலியுறுத்தினார்.

    Advertisement

    கரப்பான்பூச்சி ஜனதா பார்ட்டி இயக்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஏராளமான பிரபலங்களும் ஆதரவளித்திருந்த நிலையில், டெல்லி, புனே போராட்டங்களில் லடாக்கைச் சேர்ந்த ஆர்வலர் சோனம் வாங்சுக் நேரில் பங்கேற்றிருந்தார்.

    English Summary

    Members of Cockroach Janata party staged a protest in Bengaluru today. Disregarding the rain, a large number of youths gathered for the CJP protest and raised slogans demanding the resignation of Union Education Minister Dharmendra Pradhan. Many youths from Tamil Nadu also participated in the protest held in Bengaluru today.