பெங்களூர்: கர்நாடக வனத்துறை துப்பாக்கிச் சூட்டில் உயிர் தப்பிய மகிமைதாசன் விசாரணை அதிகாரியிடம் அஜராகி விளக்கம் அளித்தார். அப்போது அவர், "மாடுகளை வனப்பகுதிக்குள் தேடி சென்ற போது இரவானதால் பாறையில் படுத்து உறங்கினோம். அதிகாலையில் வந்த வனத்துறையினர் எந்த கேள்வியும் கேட்காமல் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.. 3 பேர் கொல்லப்பட்ட போது சற்று தனியாக இருந்ததால் உயிர் தப்பி வெளியே வந்தேன்" என்று கூறினார்.
கர்நாடக வனத்துறையால் தமிழகர்கள் 3 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் அவர்களுடன் சென்ற மகிமைதாசன் மட்டும் உயிர் தப்பினார். ஒரே சாட்சியான மகிமைதாசன் இன்று விசாரணை அதிகாரி தினேஷ்குமார் மீனாவிடம் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளார்.
கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் வனப்பகுதியில் மான் வேட்டையில் ஈடுபட்டதாக தமிழத்தை பூர்விகமாக கொண்ட அந்தோணிசாமி என்ற பெரியநாயகம், ஜான் ரோஸ் பீட்டர் என்ற யாகூப், சவேரியப்பன் ஆகிய 3 பேரை வனத்துறை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தது. இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு தமிழக முதல்வர் விஜய் கண்டனம் தெரிவித்து இருந்தார். திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.