இப்போலாம் யாரு சார் ஜாதி பார்க்கிறாங்க? தலித் சமுதாயத்தை சேர்ந்தவருக்கு நடந்ததை பாருங்க.. தீண்டாமை

  • பெங்களூர்: கர்நாடகாவில் தலித் சமுதாயத்தை சேர்ந்த ஒருவரிடம், ஹோட்டல் உரிமையாளர் தீண்டாமையை கடைப்பிடித்தது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு ஹோட்டல் உரிமையாளர் மீது அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். அப்படி என்ன நடந்தது? வாங்க பார்க்கலாம்.

    Advertisement

    ''இப்போலாம் யாரு சார் ஜாதி பார்க்கிறாங்க''.. என பலரும் சொல்லி நாம் கேள்விப்பட்டு இருப்போம். இப்போது யாரும் ஜாதி பார்ப்பது இல்லை. அனைவரும் சமமாக தான் பார்க்கின்றனர் என்பதற்காக இப்படி சொல்வது உண்டு. ஆனால் அது உண்மையா? என்று ஒவ்வொருவரும் நமக்குள்ளேயே கேட்டு பார்த்தால் கிடைக்கும் பதில் இல்லை என்பது தான்.

    Advertisement

    ''பிறப்பால் அனைவரும் சமம்.. பிறப்பின் அடிப்படையில் பூமியில் உயர்ந்தோர் - தாழ்ந்தோர் இல்லை'' என்று தொடர்ந்து விழிப்புணர்வு செய்து வந்ததன் பலனாக ஜாதி அடிப்படையிலான பாகுபாடு தற்போது குறைந்துள்ளது. ஆனால் முற்றிலுமாக இன்னும் ஒழியவில்லை.

    'தீண்டாமை ஒரு பாவச்செயல்.. தீண்டாமை ஒரு பெருங்குங்குற்றம்.. தீண்டாமை ஒரு மனித தன்மையற்ற செயல்'' என்று நாம் பள்ளி புத்தகங்களில் படித்து இருந்தாலும் கூட சில இடங்களில் ஜாதி அடிப்படையில் தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தான் கர்நாடகாவில் தலித் சமுதாயத்தை சேர்ந்த ஒருவரிடம் ஹோட்டல் உரிமையாளர் தீண்டாமையை கடைப்பிடித்த வீடியோ வெளியாகி அனைவரையும் அதிர வைத்துள்ளது.

    Advertisement

    இந்த சம்பவம் ராய்ச்சூர் மாவட்டம் லிங்கசூகூர் தாலுகாவில் உள்ள எச்சனாலா கிராமத்தில் நடந்துள்ளது. இங்கு சிவப்பா சரணப்பா என்பவர் சொந்தமாக ஹோட்டல் நடத்தி வருகிறார். இவரது ஹோட்டலுக்கு தலித் சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் சென்றார். அவர் ஹோட்டலில் தண்ணீர் குடிக்க முயன்றார்.

    அப்போது ஹோட்டல் உரிமையாளர் சிவப்பா, அவருக்கு தண்ணீர் வழங்கவில்லை. அவர் ஹோட்டலில் உள்ள டம்ளரை தொட்டால் தீட்டாகிவிடும் என்று தடுத்து நிறுத்தி உள்ளார். அதுமட்டுமின்றி 'கப்' ஒன்றில் தண்ணீர் எடுத்து வந்து அந்த நபருக்கு ஊற்றினார். அதனை தனது உள்ளங்கையால் பிடித்து அந்த நபர் குடித்து சென்றார்.

    Advertisement

    இதனை அங்கிருந்த ஒருவர் செல்போனில் வீடியோவாக எடுத்தார். இந்த வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவியது. வீடியோவை பார்க்கும் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தீண்டாமையை கடைப்பிடித்த ஹோட்டல் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதுதொடர்பாக அந்த எச்சனாலா கிராமத்தை சேர்ந்த அமரப்பா என்பவர் சமூக நலத்துறையிடம் புகார் அளித்தார்.

    சமூக நலத்துறையின் உதவி இயக்குநர் ரவீந்திரா உப்பார் விசாரணை மேற்கொண்டார். அப்போது ஹோட்டல் உரிமையாளர் சிவப்பா சரணப்பா, தலித் சமுதாயத்தை சேர்ந்தவரிடம் தீண்டாமையை கடைப்பிடித்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    English Summary

    A video showing a hotel owner in Karnataka practicing untouchability against a person from the Dalit community is going viral online. Water poured into palms from a distance from the hotel owner. Following this, officials conducted an inquiry and promptly registered a case against the hotel owner. What exactly happened? Let's take a look.