பெங்களூர் - மும்பை இடையே இன்று முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்! கட்டணம் எவ்வளவு? டிராவல் டைம் என்ன?

  • பெங்களூர்: பெங்களூர் - மும்பை இடையே வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவை இன்று தொடங்கி வைக்கப்பட உள்ளது. மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த ரயில் சேவையை இன்று தொடங்கி வைக்கிறார். படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலில் 16 பெட்டிகள் உள்ளன.

    Advertisement

    மும்பை - பெங்களூர் வழித்தடம் என்பது நாட்டின் மிகவும் பிசியான ரூட்களில் ஒன்றாக உள்ளது. வேலை, தொழில், கல்வி, மருத்துவம் என பல்வேறு காரணங்களுக்காக இரு நகரங்களுக்கு இடையேயும் பல ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகிறார்கள். மும்பைக்கும் பெங்களூருக்கும் இடையே சுமார் 845 கிலோ மீட்டர் தொலைவு உள்ளது.

    Advertisement

    வந்தே பாரத் படுக்கை வசதி ரயில்

    இந்த நகரங்களுக்கு இடையே ரயில், பேருந்துகளில் சென்றால் சராசரியாக 20 மணி நேரத்திற்கும் மேல் ஆகிறது. இதனால், இரு நகரங்களுக்கும் இடையேயும் அதிவேத்தில் செல்லும் திறன் கொண்ட வந்தே பாரத் ரயில் இயக்கப்பட வேண்டும் என்பது பயனிகள் எதிர்பார்ப்பாக இருந்தது. அதிலும் ஸ்லீப்பர் ரயிலாக இயக்க வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்த்தனர்.

    இந்த நிலையில்தான் பயணிகள் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் விதமாக மும்பை- பெங்களூர் ரூட்டில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் இன்று தொடங்கி வைக்கப்படுகிறது. மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார்.

    Advertisement
    16 மணி நேரத்தில் பெங்களூரு-மும்பை.. 10-ஆம் தேதி முதல் படுக்கை வசதி வந்தே பாரத் ரயில்? முழு விவரம்

    நின்று செல்லும் இடங்கள்

    படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலில் 16 பெட்டிகள் உள்ளன. பெங்களூரில் இருந்து புறப்பட்டு இந்துப்பூர், தர்மாவரம், அனந்தப்பூர், குண்டக்கல், ராய்ச்சூர், கிருஷ்ணா, யாதகிரி, கலபுரகி, சோலாப்பூர், புனே, கல்யாண் வழியாக மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்துக்கு செல்ல உள்ளது.

    இன்று ஒருநாள் மட்டும் நண்பகல் 12.45 மணிக்கு புறப்பட்டு, நாளை காலை 6.15 மணிக்கு அந்த ரயில் மும்பையை சென்றடைய உள்ளது. வரும் 3 ஆம் தேதி முதல் தினமும் பெங்களுர் பையப்பனஹள்ளியில் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 11.55 மணியளவில் மும்பையை சென்றடைய உள்ளது.

    Advertisement

    திங்கட்கிழமையை தவிர்த்து மற்ற 6 நாட்களும் இந்த வந்தே பாரத் படுக்கை வசதி கொண்ட ரயில் பெங்களூரில் இருந்து மும்பைக்கு இயக்கப்பட உள்ளது. பெங்களூரில் இருந்து மும்பைக்கு உதயன் எக்ஸ்பிரஸ் ரயில் சென்றடைய 23 முதல் 24 மணி நேரம் ஆகும். ஆனால் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பெங்களூரில் இருந்து மும்பைக்கு 16 மணி நேரத்திலேயே சென்றடைந்து விடும். இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    வைகை எக்ஸ்பிரஸ்னா சும்மாவா.. வந்தே பாரத் கூட தோற்றுவிடும்.. 5.30 மணி நேரத்தில் மதுரைக்கு பாய்ச்சல்.!

    வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் கட்டணம்

    இந்த ரயிலில் ஏசி 3 அடுக்கு, ஏசி 2 அடுக்கு மற்றும் முதல் வகுப்பு ஏசி என 3 வகையான படுக்கை வசதிகள் இடம்பெற உள்ளன. ஏசி 3 அடுக்கு பெட்டியில் ரூ.2,810, ஏசி 2 அடுக்கு பெட்டியில் ரூ.3,630, முதல் வகுப்பு ஏசி பெட்டியில் ரூ.4,450 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    இந்த ரயிலில் மொத்தம் 823 பயணிகள் பயணிக்க முடியும். இதில் ஏசி 3 அடுக்கு பெட்டியில் 611 படுக்கைகளும், ஏசி 2 அடுக்கு பெட்டியில் 188 படுக்கைகளும், முதல் வகுப்பு ஏசி பெட்டியில் 24 படுக்கைகளும் உள்ளன.

    என்னென்ன வசதிகள் உள்ளன?

    சென்னை ஐசிஎப்பில் தயாரிக்கப்பட்ட இந்த ரயில் பெட்டியில் அதி நவீன சொகுசு வசதிகள் உள்ளன. தானியங்கி கதவுகள், வெளிப்புற சத்தம் உள்ளே கேட்காத வகையில் பிரத்யேக வடிவமைப்புகள், முழுவது ஏசி, கவாச் தொழில் நுட்பம் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. இந்த ரயில் அதிகபட்சமாக 180 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது ஆகும்.

    English Summary

    Vande Bharat sleeper train service between Bangalore and Mumbai is set to be inaugurated today. Union Minister Ashwini Vaishnaw will flag off this train service. The Vande Bharat sleeper train consists of 16 coaches.