மேகதாது அணை விவகாரம்: வாட்டாள் நாகராஜ் போராட்டம்! கர்நாடகா தமிழ்நாடு பேருந்துகள் எல்லையில் நிறுத்தம்

  • சென்னை: மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழகத்தை கண்டித்து கன்னட அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. வாட்டாள் நாகராஜ் போராட்ட அறிவிப்பால் இன்று கர்நாடக - தமிழ்நாடு எல்லையில் இரு மாநில போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரு மாநில எல்லைகளிலும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. எல்லையில் போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    Advertisement

    மேலும், தமிழகத்தில் இருந்து பெங்களூர் செல்லும் பேருந்துகள் ஓசூர் எல்லையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. இதே போன்று கர்நாடாவில் இருந்து தமிழகம் இயக்கப்படும் பேருந்துகளும் அத்திப்பள்ளி கர்நாடக அருகிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    Advertisement

    வாட்டாள் நாகராஜ் போராட்டம்

    காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்று கர்நாடக அரசு அடம் பிடித்து வருகிறது. இந்த அணை கட்டினால் தமிழகத்தில் விவசாயம் பாதிக்கப்படும். குடிநீர் தட்டுப்பாடும் அபாயம் இருப்பதால் அணை கட்டுவதை தடுப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. ஆனால், கர்நாடக அரசு அடாவடியாக இந்த விவகாரத்தில் பேசி வருகிறது.

    மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை எதிர்க்கும் தமிழக அரசை கண்டித்து மாநில எல்லை அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று வாட்டாள் நாகராஜ் போராட்டம் அறிவித்து இருந்தார். இது தொடர்பாக கடந்த வாரம் கர்நாடக சலுவாலி அமைப்பின் தலைவரான வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். அதாவது, ஜூலை 15 ஆம் தேதி கர்நாடக - தமிழ்நாடு எல்லையான அத்திப்பள்ளி எல்லையில் முழு எல்லை அடைப்பு போராட்டம் நடைபெறும்.

    Advertisement

    எல்லையில் பேருந்துகள் நிறுத்தம், பயணிகள் அவதி

    தமிழ் திரைப்படங்கள் கர்நாடகத்தில் ஓடுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என்று கூறியிருந்தார். வாட்டாள் நாகராஜ் போராட்ட அறிவிப்பால் இன்று கர்நாடக - தமிழ்நாடு எல்லையில் இரு மாநில போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் இருந்து பெங்களூர் செல்லும் பேருந்துகள் ஓசூர் எல்லையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.

    கர்நாடாவில் இருந்து தமிழகம் இயக்கப்படும் பேருந்துகளும் அத்திப்பள்ளி அருகே கர்நாடக அருகிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இரு மாநில எல்லையிலும் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

    தமிழக விவசாயிகளும் போராட்டம்

    கன்னட அமைப்புகள் சார்பாக நடைபெறும் எல்லை அடைப்பு போராட்டம் நண்பகல் 12 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளன. வாட்டாள் நகராஜ் தலைமையில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது. முன்னெச்சரிக்கையாக சேலம், தர்மபுரி, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பெங்களூர் செல்லக் கூடிய பேருந்துகள் ஓசூர் பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கர்நாடக சென்று இருந்து தமிழக அரசு பேருந்துகளும் நேற்று இரவே மீண்டும் தமிழகத்திற்கு எடுத்து வரப்பட்டன..

    Advertisement

    இன்னும் சற்று நேரத்தில் இரு மாநில எல்லையில் போராட்டம் முற்றிலும் நிறுத்தப்படும் எனத்தெரிகிறது. வாட்டாள் நாகராஜ் தலைமையில் போராட்டம் தொடங்கும் போது போக்குவரத்து நிறுத்தப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இதேபோல, கர்நாடக அரசை கண்டித்து தமிழக விவசாயிகளும் தமிழக எல்லையில் கன்னட அமைப்புகளையும், கர்நாடக அரசை கண்டித்தும் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளன. ஒரே நாளில் இருபக்கமும் போராட்டம் நடைபெற இருப்பதால் கர்நாடக - தமிழக எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

    எல்லையில் போலீசார் குவிப்பு

    கர்நாடாகவில் போராடும் கன்னட அமைப்புகள் தமிழக பகுதிக்குள் நுழைந்துவிடாதவாறு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கர்நாடக பகுதியிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. போராட்டம் காரணமாக சுமார் 1 மணி நேரம் அல்லது 2 மணி நேரம் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

    Advertisement

    தற்போது தனியார் வாகனங்கள் வழக்கம் போல இயக்கப்பட்டு வருகின்றன. பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருப்பதால், கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம், தொழில் என பல்வேறு காரணமாக தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கும், கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கும் வரக்கூடிய பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

    English Summary

    Vatal Nagaraj: Kannada organisations led by Vatal Nagaraj staged a protest against Tamil Nadu over its opposition to the Mekedatu dam project. As a precaution, interstate bus services near Hosur were suspended, while police intensified security and surveillance along the Tamil Nadu–Karnataka border.