Vatal Nagaraj: காவிரி விவகாரம்: டிகே சிவக்குமார் சொல்றதை எல்லாம் கேக்க முடியாது! வாட்டாள் நாகராஜ் அடம்

  • பெங்களூர்: கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமார் சொல்வதை கேட்க முடியாது. வரும் 13 ஆம் தேதி போராட்டம் நடந்தே தீரும் என ஆட்டாள் நாகராஜ் கூறியுள்ளார். மேலும் எங்களுக்கே தண்ணீர் இல்லாத போது எப்படி தமிழ்நாட்டுக்கு நீர் கொடுக்க முடியும். எனவே, எந்த காரணத்திற்காகவும் தண்ணீரை திறந்து விடக்கூடாது. பொதுமக்களும் எங்களுக்கு ஆதரவு தர வேண்டும் என கன்னட சலுவளி அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறந்துவிட மறுத்து கர்நாடகா தொடர்ந்து அடாவடி செய்து வருகிறது. காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுகளை செயல்படுத்தக்கூடாது என்று கர்நாடக அரசுக்கு அங்குள்ள அரசியல் கட்சிகள், கன்னட அமைப்புகள் கடும் அழுத்தமும் கொடுத்து வருகின்றன.

    Advertisement

    போராட்டம் நடத்தியே தீருவோம்

    உபரி நீரை மட்டுமே திறந்து வரும் கர்நாடக அரசு, தமிழகத்திற்கு உரிமைப்படி கிடைக்க வேண்டிய உபரி நீரை கேட்டால், தங்களிடமே நீர் இல்லை என கை விரித்து வருகிறது. தற்போது, கபிணி அணை முழு கொள்ளளவை எட்டும் நிலையில் இருப்பதால் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில் தமிழகத்திற்கு காவிரியில் தண்னீர் திறக்கக் கூடாது என்று கூறி கன்னட சங்கங்கள் சார்பில் வரும் 13 ஆம் தேதி முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    தற்போது அணைகள் நிரம்பி வருவதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது எனவே, போராட்ட அழைப்பை வாபஸ் பெற வேண்டும் என்று டிகே சிவக்குமார் கோரிக்கை விடுத்து இருந்தார். ஆனால் டிகே சிவக்குமார் கோரிக்கையை ஏற்க மறுத்துள்ள கன்னட சலுவளி அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ், போராட்டம் நடத்தியே தீருவோம் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக வாட்டாள் நாகராஜ் கூறியிருப்பதாவது:-

    Advertisement

    நமக்கே தண்ணீர் இல்லாத போது

    காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டு இருக்கிறது. இதனை கண்டித்து வரும் 13 ஆம் தேதி போராட்டம் நடத்துவோம். போராட்டத்தை கைவிட வேண்டும் என்று அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் போராட்டத்தை கைவிடப்போவது இல்லை.

    காவிரி நீர் பங்கீட்டு பிரச்சினைக்காக மட்டுமின்றி கர்நாடக மாநிலத்தின் பிரச்சினைகள், தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு இட ஒதுக்கீடு, பிற மொழியினரின் ஆதிக்கம் உள்ளிட்ட பிரச்சினைகளை முன்னிறுத்த்தியும் முழு அடைப்பு நடத்த இருக்கிறோம்.

    எங்கள் போராட்டத்திற்கு அனைத்து கன்னட அமைப்புகளும் ஆதரவு கொடுத்துள்ளன. மக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நமக்கே தண்ணீர் இல்லாத போது, தமிழ்நாட்டிற்கு எப்படி நீர் கொடுக்க முடியும். எனவே, எந்த காரணத்திற்காகவும் தண்ணீரை திறந்து விடக்கூடாது. நமது அணைகள் அனைத்தும் நிரம்பினால் தமிழகத்திற்கு உபரி நீரை திறந்துவிடட்டும்" என்றார்.

    English Summary

    Vatal Nagaraj, leader of the Kannada Chaluvali organization, has stated that the protest scheduled for the 13th will definitely take place, asserting that they cannot heed Karnataka Chief Minister DK Shivakumar words. He questioned how water could be released to Tamil Nadu when they themselves are facing a shortage, insisting that water should not be released under any circumstances. He also appealed to the public to extend their support.