ரசிகர்களை ஏமாற்றிய முதல்வர் விஜய்.. இப்படி செய்வார்னு எதிர்பார்க்கலை.. கர்நாடகா கோவிலுக்கு சென்றபோது சம்பவம்

  • பெங்களூர்: தமிழக முதல்வர் விஜய் டெல்லிக்கான 3 நாள் பயணத்தை முடித்துவிட்டு இன்று கர்நாடகாவில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இந்த சமயத்தில் முதல்வர் விஜய் தனது ரசிகர்களை ஏமாற்றி சென்ற சம்பவம் நடந்துள்ளது. இதனால் கர்நாடகாவில் உள்ள விஜய் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

    Advertisement

    தமிழக முதல்வர் விஜய் 3 நாள் பயணமாக நேற்று முன்தினம் டெல்லி சென்றார். ஜனாதிபதி திரெளபதி முர்மு, காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். அதன்பிறகு நேற்று 2வது நாளில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள 'நிதி ஆயோக்' கூட்டத்தில் பங்கேற்றார்.

    Advertisement

    3வது நாளான இன்று விஜய் தனது டெல்லி பயணத்தை முடித்து கொண்டு புறப்பட்டார். டெல்லியில் இருந்து முதல்வர் விஜய் கர்நாடகா மாநிலம் மங்களூருவுக்கு விமானத்தில் சென்றார். அங்கிருந்து காரில் உடுப்பில் மாவட்டம் கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

    இந்த சமயத்தில் விஜய் தனது ரசிகர்களை ஏமாற்றினார். இதனால் விஜய்யின் ரசிகர்கள் அதிருப்தியாகி உள்ளனர். அதாவது விஜய் முதல்வரான பிறகு கர்நாடகாவிற்கு முதல் முறையாக சென்றார். மங்களூர் விமான நிலையத்தில் இறங்கிய விஜய்யை பார்க்க அவரது ரசிகர்கள் அதிகமானவர்கள் குவிந்தனர். ரசிகர்களை பார்த்து விஜய் கையசைத்துவிட்டு காரில் புறப்பட்டார்.

    Advertisement

    விஜய் விமான நிலையத்தில் இருந்து அங்குள்ள தனியார் ஹோட்டலுக்கு செல்வார். அங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்த பிறகு தான் கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு காரில் செல்வார் என்று கூறப்பட்டது. இதனால் விஜய் ஓய்வெடுப்பதாக கூறிய ஹோட்டல் அருகே இன்று காலை முதல் ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். ஆனால் விஜய், விமான நிலையத்தில் இருந்து ஹோட்டலுக்கு செல்லவில்லை. நேரடியாக உடுப்பி மாவட்டம் கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு சென்றார். இதனால் ஹோட்டல் அருகே விஜய்யை பார்க்க குவிந்திருந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

    English Summary

    Vijay in Kollur Mookambika Temple: After concluding a three-day trip to Delhi, Tamil Nadu Chief Minister Vijay visited the Kollur Mookambika Temple in Karnataka today to offer prayers. During this visit, an incident occurred where Chief Minister Vijay left without meeting his fans, leaving them disappointed.