ஜமீர் டூ ரிஸ்வான் வரை.. கர்நாடகவின் 20 புதிய அமைச்சர்கள் யார் யார்? வெளியான உத்தேச பட்டியல்

  • பெங்களூர்: கர்நாடகா அமைச்சரவையில் மொத்தம் 20 இடங்கள் காலியாக உள்ளன. கர்நாடகா அமைச்சரவை நாளை விரிவாக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் புதிதாக அமைச்சராகும் பிரமுகர்களின் உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது.

    Advertisement

    கர்நாடகாவின் முதல்வராக இருந்த சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து முதல்வராக டிகே சிவக்குமார் பொறுப்பேற்றார். கர்நாடகாவை பொறுத்தவரை முதல்வரை தவிர 33 பேர் அமைச்சர்களாக இருக்க முடியும்.

    Advertisement

    தற்போது முதல்வராக டிகே சிவக்குமார் உள்ளார். துணை முதல்வராக பரமேஸ்வர் உள்ளார். இதுதவிர 12 பேர் அமைச்சர்களாக உள்ளனர். அமைச்சரவையில் மொத்தம் 14 பேர் உள்ளனர். 20 இடங்கள் காலியாக உள்ளன.

    இதற்கிடையே தான் அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக டிகே சிவக்குமார், முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆகியோர் டெல்லி சென்று மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தியுடன் ஆலோசனை மேற்கொண்டனர். தற்போது டிகே சிவக்குமார் 20 பேரின் பெயர்களை இறுதி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதுபற்றிய உத்தேச பட்டியல் வருமாறு:

    அஜய் தரம் சிங்
    யஷ்வந்தராயகவுடா பட்டீல்
    சரத் பச்சேகவுடா
    ரிஷ்வான் அர்சத் (பெங்களூர் சிவாஜி நகர் எம்எல்ஏ)
    ஏஎஸ் பொன்னன்னா
    எஸ்எஸ் மல்லிகார்ஜுன்
    லட்சுமண் சவதி
    ரகுமூர்த்தி
    அன்னபூர்ணா துக்காராம்
    விஜயானந்த் காசப்பனவர்
    புட்டரங்க செட்டி
    ருத்ரப்பா லமானி
    ஆனேக்கல் சிவண்ணா (பெங்களூர் புறநகர் ஆனேக்கல் எம்எல்ஏ)
    செலுவராயசாமி
    சந்தோஷ் லாட்
    சிவலிங்கேகவுடா
    பங்கார்பேட்டை நாராயணசாமி,
    ஜமீர் அகமது கான் (பெங்களூர் சாம்ராஜ்பேட்டை எம்எல்ஏ)
    லட்சுமி ஹெப்பால்கர்

    Advertisement

    ஆகியோரின் பெயர்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இது உத்தேச பட்டியல் தான். இறுதி பட்டியல் இன்று இரவு அல்லது நாளை காலை காங்கிரஸ் மேலிடம் வெளியிட வாய்ப்புள்ளது. அதன்பிறகு நாளை பெங்களூரில் உள்ள ஆளுநர் மாளிகையில் கர்நாடகாவின் புதிய அமைச்சர்கள் பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    English Summary

    Karnataka Cabinet: There are a total of 20 vacancies in the Karnataka cabinet. The cabinet is likely to be expanded tomorrow. Amidst intensive preparations for this, a tentative list of the individuals set to become new ministers has emerged.