லாவண்யாவை விடாத லவ்.. கர்நாடகா பஸ்ஸில் ஏறி உட்கார்ந்ததுமே கரெக்ட்டா வந்த நபர்! பதற வைத்த நிமிடங்கள்

  • பெங்களுரு: கர்நாடக மாநிலம் பந்த்வால் பகுதியில் நடைபெற்ற ஒரு சம்பவம், அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்லடுக்காவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் நர்ஸ்ஸாக வேலை பார்த்து வரும் லாவண்யா, நேற்று டியூட்டி முடிந்து வீட்டுக்கு செல்ல முயன்றார்.. அப்போதுதான் இந்த கொடுமை நடந்துள்ளது.. என்ன நடந்தது கர்நாடகாவில்?

    Advertisement

    கர்நாடக மாநிலத்தின் தட்சிண கன்னடா மாவட்டத்தில், கல்லடுக்காவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் நர்ஸாக வேலை பார்த்து வருகிறார் லாவண்யா. 22 வயதான இவர், தினமும் டியூட்டி முடிந்து பண்ட்வால் (Bantwal) பகுதியில் அமைந்துள்ள BC Road KSRTC பஸ் ஸ்டாண்டில், பஸ் ஏறி வீட்டிற்கு திரும்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

    Advertisement

    கர்நாடகா அரசு பஸ்

    லாவனர்யவை அதே பகுதியைச் சேர்ந்த சேத்தன் என்பவர் துரத்தி துரத்தி காதலித்து வந்திருக்கிறார்.. இவர் லாவண்யாவின் தூரத்து உறவினர் என்று கூறப்படுகிறது.. நீண்ட நாட்களாகவே லாவண்யாவை ஒருதலைக் காதலித்து வந்ததோடு, லாவண்யாவை தொடர்ந்து பின்தொடர்ந்து சென்று காதல் டார்ச்சரும் கொடுத்து வந்துள்ளார்.

    ஆனால் சேத்தனின் இந்த காதலை லாவண்யா ஏற்க மறுத்துவிட்டார்.. அத்துடன் சேத்தனிடம் பேசுவதையும் நிறுத்திவிட்டு, தன்னை இனிமேல் தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் லாவண்யா எச்சரித்ததாகக் கூறப்படுகிறது. இதை சேத்தனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இருந்த சேத்தன், லாவண்யாவை எப்படியாவது தீர்த்துக் கட்ட வேண்டும் என்று திட்டம் தீட்டினார்.

    Advertisement

    லாவண்யாவை விடாத லவ்

    நேற்று சாயங்காலம் வழக்கம் போல லாவண்யா டியூட்டி முடிந்து வீட்டிற்குச் செல்ல பஸ் ஸ்டாண்டு வந்தார்.. அங்கு நின்று கொண்டிருந்த, காக்யபாதவி செல்லும் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தார்.. அந்த நேரத்தில், ஒரு பையை மறைத்துக்கொண்டு அங்கு வந்த சேத்தன், பஸ்ஸூக்குள் ஏறி லாவண்யாவிடம் மீண்டும் தகராறு செய்துள்ளார்.. அப்போது 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது..

    ஒருகட்டத்தில் ஆவேசம் தாங்காமல், பையில் மறைத்து வைத்திருந்த அரிவாளை திடீரென வெளியே எடுத்து, லாவண்யாவை கொடூரமாக தாக்கியுள்ளார் சேத்தன்.

    இந்தத் தாக்குதலால் அதிர்ச்சியடைந்த லாவண்யா பஸ்ஸிலிருந்து கீழே குதித்து ஓட முயற்சித்துள்ளார். ஆனால், அவரை அங்கிருந்து நகர விடாமல், மேலும் விரட்டி வெட்டியுள்ளார்.. ஒரு கட்டத்தில் பஸ் நிலையத்துக்குள் தவறி விழுந்த லாவண்யாவை அவர் அரிவாளால் பலமுறை கொடூரமாக வெட்டியிருக்கிறார்.. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார் லாவண்யா..

    Advertisement

    பதற வைத்த நிமிடங்கள்

    இதை பார்த்து அங்கிருந்தவர்கள் பதறிப்போய், உடனடியாகப் பந்த்வால் அரசு மருத்துவமனைக்கு லாவண்யாவை தூக்கி சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    லாவண்யாவை கொடூரமாக வெட்டிய சேத்தன், அரிவாளை பஸ் நிலையத்திலேயே போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்... பிறகு பஸ் ஸ்டாண்டிலிருந்தவர்கள் இது குறித்து தகவல் பந்த்வால் போலீசாருக்கு தகவல் தந்தனர்.. உடனடியாக வந்த காவல்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மங்களூரு காவல் துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கொலை செய்த குற்றவாளியையும் தேடிக் கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

    Advertisement

    பட்டப்பகலில் பஸ் ஸ்டாண்டில் நடந்த இந்த கொடூர சம்பவம், பெண்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை மறுபடியும் ஒருமுறை மக்கள் மத்தியில் வலுப்படுத்தியுள்ளது...!!!

    English Summary

    Who Is Lavanya? 22 Year Old Nurse Killed in Shocking Karnataka government Bus Attack