காதலன் மீது பைத்தியம்.. இதுக்காகவே போன MBA பெண்.. பெங்களூரு ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் பார்த்துட்டாங்க

  • பெங்களூரு: காதலனை ஜெயிலிலிருந்து வெளியே கொண்டுவர வேண்டும்.. அதற்கு எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும்.. இந்த ஆசையில் 21 வயது எம்பிஏ மாணவி எடுத்த முடிவு, கடைசியில் அவரையே போலீசாரிடம் சிக்க வைத்திருக்கிறது. இதுதொடர்பாக விசாரணை நடந்து வந்தாலும், இந்தச் சம்பவத்தில் அவர் எப்படி இந்த வேலைக்கு வந்தார் என்பதுதான் முக்கியமான விஷயம்.

    Advertisement

    ஆந்திர மாநிலம் விஜயவாடாவின் படமட்டா பகுதியைச் சேர்ந்தவர் யெர்ரம்செட்டி நாகசௌம்யா. 21 வயதாகும் இவர் எம்பிஏ படித்து வருகிறார். இவருடைய காதலன் காசி வர்தன். இருவருக்கும் இன்டர்மீடியட் படிக்கும்போதே காதல் ஏற்பட்டுள்ளது.. இருவருமே உருகி உருகி காதலித்துள்ளனர்.

    Advertisement

    காதலன் ஜெயிலில்

    ஆனால் காதலன் காசி வர்தனுக்கு போதைப்பொருள் பழக்கம் இருந்துள்ளது.. சுமார் 3 மாதங்களுக்கு முன்பு போதைப்பொருள் வழக்கில் ஒன்றில் காசி வர்தன் சிக்கி விட்டார்.. சித்தூர் பகுதியில் இவரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர்..

    காதலன் சிறையில் இருப்பது, நாகசௌம்யாவுக்கு கவலையை தந்துள்ளது. எப்படியாவது அவரை வெளியே கொண்டுவர ஜாமீன் வாங்க வேண்டும் என்று நினைத்துள்ளார். ஆனால், அதற்குத் தேவையான பணம் நாகசௌம்யாவிடம் இல்லை. அப்போதுதான், போதைப்பொருளை கடத்த வேண்டும் என்று, நாகசௌம்யாவுக்கு ஆஃபர் ஒன்று தேடி வந்தது..

    விஜயவாடையின் கிருஷ்ணலங்கா பகுதியைச் சேர்ந்த பஷீர் என்பவர், நாகசௌம்யாவிடம் போதைப்பொருளைக் கொண்டுவர சொல்லியிருக்கிறார்.. இதற்காக ரூ.50,000 கமிஷன் தருவதாகவும் அவர் ஆசை காட்டியிருக்கிறார்..

    Advertisement

    பெங்களூரு - ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில்

    இதையடுத்து, கடந்த அக்டோபர் 13-ம் தேதி நாகசௌம்யா பெங்களூருவின் யெலஹங்கா பகுதிக்குச் சென்றார். அங்கு போதைப்பொருள் விற்பனை செய்பவர் ஒருவரைத் தொடர்புகொண்டு, 110 கிராம் MDMA போதைப்பொருளை 2 சின்ன பொட்டலங்களாக வாங்கி கொண்டார்..

    பிறகு அந்தப் பொட்டலங்களை எடுத்துக்கொண்டு SMVT பெங்களூரு - ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் விஜயவாடைக்குப் புறப்பட்டார். காரணம், போதைப்பொருளை விஜயவாடைக்குக் கொண்டுவந்து விற்பனை செய்வதுதான் நாகசௌமியாவுக்கு தரப்பட்ட அசைன்மெண்ட்டாகம்.

    அக்டோபர் 13-ம் தேதி இரவு 11.45 மணியளவில் ரயில் விஜயவாடையை வந்தடைந்தது. அப்போது ரயில்வே ஸ்டேஷனில், போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் வகையில் EAGLE குழுவினரும் ரயில்வே போலீசாரும் இணைந்து வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    Advertisement

    6-வது பிளாட்பார்மில் விழித்த பெண்

    6-வது பிளாட்பார்மில் உள்ள முதல் நடைமேம்பால படிக்கட்டு அருகே வந்த நாகசௌம்யா, தூரத்தில் போலீசாரைப் பார்த்ததுமே திணறிப்போனார்.. போலீஸ் ஏன் சோதனையிடுகிறது? என்று பயந்து அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளார்.. ஆனால், நாகசௌமியா விழித்ததையும், உடனே அங்கிருந்து நழுவ பார்த்ததையும் அங்கிருந்த பெண் RPF போலீசார் கவனித்து விட்டனர்.. உடனே நாகசௌமியாவை பிடித்து விசாரித்தனர்.

    அவருடைய பையையும் சோதனை செய்தனர்.. அதில் 2 சிறிய பொட்டலங்களில் 110 கிராம் MDMA போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. முதற்கட்டப் பரிசோதனையிலும் அது MDMA போதைப்பொருள் என்பது உறுதியானது. பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார் ரூ.11 லட்சம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

    Advertisement
    பெங்களூரு பாரில் நள்ளிரவில் ஆந்திரா ஐஏஎஸ் அதிகாரி.. என்ன நடந்தது? பாய்ந்த வழக்கு

    கைது - விசாரணை

    இதையடுத்து, விஜயவாடை ரயில்வே காவல் நிலையத்தில் குற்ற எண் 254/2026-ன் கீழ், போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் 8(c) மற்றும் 22(c) பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து, நாகசௌம்யாவை கைது செய்தனர்.

    அதேபோல, போலீசார் ரயில்வே ஸ்டேஷனில் சோதனை நடத்துவதை பார்த்து நடுங்கிய நாகசௌம்யா, உடனே பஷீருக்குத் தகவல் தந்துள்ளார். இதையடுத்து அலர்ட்டான பஷீர், உடனடியாக தப்பி சென்றிருக்கிறார்.. ஆனால், போலீசார் பஷீரையும் இப்போது கைது செய்துவிட்டார்கள்..

    பெங்களூருவில் இருந்து போதைப்பொருள் எங்கிருந்து வாங்கப்பட்டது, விஜயவாடையில் யாரிடம் ஒப்படைக்கத் திட்டமிடப்பட்டது, இந்தக் கடத்தலில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பதையெல்லாம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Advertisement
    காசாவிற்காக உயிர் தியாகம்.. விசாரணையில் ஓமன் துணை விமானி வாக்குமூலம் - பகீர் தகவல்

    பரபர வாக்குமூலம்

    அதேபோல நாகசௌமியாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.. "என்னுடைய காதலனுக்கு போதைப்பொருள் பழக்கம் உள்ளது.. போதைப்பொருளை மற்றவர்களுக்கும் பொட்டலங்களில் விற்று வந்தார்.. 3 மாதம் முன்பு கைதாகி, ஜெயிலில் உள்ளார்.. அவரை ஜாமீனில் எடுக்க பணம் தேவை என்பதால், இந்த வேலையில் இறங்கினேன்" என்று கூறியிருக்கிறார்.

    காதலனுக்கு ஜாமீன் வாங்குவதற்காகப் பணம் தேடியவர், அதற்காகப் போதைப்பொருள் கடத்தலில் இறங்கி இப்போது அவரே சிறைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். MBA படித்து என்ன பிரயோஜனம்??

    English Summary

    Why Did an MBA Student Travel to Bengaluru for Her Boyfriend? What Happened on the Bengaluru-Howrah Express?