கர்நாடகாவில் எஸ்பிஐ பெண் வங்கி ஊழியர்.. கேரளாவில் எஸ்பிஐ ஆண் வங்கி ஊழியர்.. இப்படியா ஆகணும்

  • பெங்களூர்: கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் பூச்சக்காடு பகுதியை சேர்ந்த அனுஸ்ரீ என்ற பெண் கர்நாடக மாநிலத்தில் ஹான்சூர் பகுதியில் உள்ள ஸ்டேட் வங்கியில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு பெற்றோர் மாப்பிள்ளை பார்த்தார்கள். கண்ணூர் மாவட்டம் இரட்டி அருகே அம்பலத்தட்டு பகுதியை சேர்ந்த அமல் என்பவரை பேசி முடிந்தார்கள். இவருக்கும் இனிதே நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த சூழலில் பெண் வங்கி ஊழியர் எடுத்த முடிவும், அவருக்கு நிச்சயம் செய்யப்பட்டவர் எடுத்த முடிவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Advertisement

    கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் பூச்சக்காடு பகுதியை சேர்ந்தவர் சந்திரன் ரீனா தம்பதியின் மூத்த மகள் அனுஸ்ரீக்கு 25 வயது ஆகிறது. இவர் கர்நாடக மாநிலத்தில் ஹான்சூர் பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் ஊழியராக பணியாற்றி வந்தார். இதற்காக அங்குள்ள விடுதியில் தங்கி இருந்தார்.

    Advertisement

    இதற்கிடையே அனுஸ்ரீக்கும், கண்ணூர் மாவட்டம் இரட்டி அருகே அம்பலத்தட்டு பகுதியை சேர்ந்த சுதாகரன் என்பவரது மகனான 27 வயதாகும் அமல் என்பவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. அமல், எர்ணாகுளத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு வருகிற டிசம்பர் மாதம் 26-ந்தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இருவரும் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி வந்தனர்.

    கடந்த வாரம் அமல், அனுஸ்ரீ ஆகிய 2 பேரும் கண்ணூரில் சந்தித்து பேசியிருக்கிறார்கள். பின்னர் அவர்கள் வேலைக்கு சென்றதாக தெரிகிறது. கடந்த 11-ந்தேதி வங்கியில் அனுஸ்ரீ பணியாற்றியதோடு, தனது சகோதரியை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். பின்னர் இரவில் ஹான்சூரில் உள்ள விடுதி அறைக்கு சென்றார். நேற்று முன்தினம் காலை அனுஸ்ரீயை குடும்பத்தினர் செல்போனில் பலமுறை அழைத்தும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    Advertisement

    இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் கூறி விடுதிக்கு சென்று பார்க்க அறிவுறுத்தியுள்ளனர். அவர்கள் விடுதியில் சென்று பார்த்துள்ளனர். அங்கு அனுஸ்ரீ தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதை அறிந்த அமல், வருங்கால மனைவி இறந்து விட்டதால் மனமுடைந்தார். அவரது பிரிவை தாங்க முடியாமல் அவர் எர்ணாகுளத்தில் உள்ள விடுதியில் அவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அனுஸ்ரீ தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கேரளாவில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

    Advertisement

    வாழ்க்கையில் எந்தப் பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வல்ல. மனக்கவலைகள் இருந்தால் தயக்கமின்றி மேலே உள்ள எண்களைத் தொடர்பு கொண்டு பேசுங்கள்

    Tele-MANAS (மத்திய அரசு மனநல உதவி எண்): 14416 அல்லது 1800-891-4416

    சினேகா : 044-24640050

    தமிழ்நாடு அரசு: 104

    English Summary

    wrong Decision taken by a female SBI employee in Karnataka and a male SBI employee in Kerala , whose marriage had been fixed,