பெங்களூரில் ரூ.50 லட்சம் சம்பளம் வாங்கினாலும் நீங்கள் பணக்காரராகி விட முடியாது.. ஐடி ஊழியர் வீடியோ

  • பெங்களூர்: ஐடி துறையில் அதிக சம்பளம் வழங்குவதற்குப் பெயர் பெற்ற நகரம் பெங்களூரு. ஆனால், அங்கு ஆண்டுக்கு ரூ. 50 லட்சம் சம்பளம் வாங்கினாலும், குறிப்பிடத்தக்க செல்வத்தைச் சேர்ப்பது கடினம் என்று பெங்களூரைச் சேர்ந்த தொழில்நுட்ப ஊழியர் ஒருவர் வாதிட்டுள்ளார். அதிக வீட்டு வாடகை, அன்றாடச் செலவுகள், கார் பராமரிப்பு மற்றும் சொத்துக்களின் அதிக விலை ஆகியவை ஒரு ஐடி ஊழியரின் மாத வருமானத்தில் பெரும் பகுதி செலவாகிவிடுவதாக கூறியுள்ளார்.

    Advertisement

    அண்மையில் சிங்கப்பூரில் வீட்டு வாடகை இந்திய மதிப்பில் 2 லட்சத்திற்கு மேல் என்று வீடியோவை பார்த்து வாயடைத்து போக வேண்டியதிருந்தது. சென்னையில் ஒரு லட்சம் வாங்கி வாழும் வாழ்க்கையை சிங்கப்பூரில் வாழ வேண்டும் என்றால் சுமார் ₹4.20 லட்சம் முதல் ₹4.80 லட்சம் வரை வேண்டும் என்று பார்க்க நேர்ந்தது.. அப்படியே சென்னையைவிட்டு விட்டு பெங்களூர் பக்கம் போனால், பெங்களூரில் ரூ.50 லட்சம் சம்பளம் வாங்கினாலும் நீங்கள் பணக்காரராகிவிட முடியாது என்று கூறிய இன்ஸ்டாகிராம் வீடியோவை பார்க்க நேர்ந்தது.

    Advertisement

    இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்ட அன்மோல் அகர்வால், பெங்களூரில் அதிக சம்பளம் வாங்குவதன் நிதி எதார்த்தம் என்ன என்பதை விளக்கினார். அவர் கூறுகையில், "நீங்கள் ஆண்டுக்கு ரூ. 50 லட்சம் அல்லது ரூ. 70 லட்சம் சம்பாதிப்பது ஒருவரைப் பெங்களூரில் பணக்காரராக்கிவிடும் என்று அர்த்தமல்ல. இன்றைக்கு ரூ. 50 லட்சத்தையும் அடிப்படைச் சம்பளமாகப் பெறுவதே கடினம் என்றாலும், ஒரு கணக்கீட்டிற்காக அப்படி எடுத்துக்கொணடு சொல்கிறேன். "வரி மற்றும் வருங்கால வைப்பு நிதி ஆகியவற்றிற்காக சுமார் ரூ. 15 லட்சத்தைக் கழித்த பிறகு, ஒருவருக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.35 லட்சம் மட்டுமே கையில் கிடைக்கும். இது மாதத்திற்குச் சுமார் ரூ. 3 லட்சத்திற்குச் சமமாகும்.

    Advertisement

    2BHK (இரண்டு படுக்கையறை கொண்ட) வீட்டிற்கான வாடகைக்கு மட்டும் ரூ. 60,000 முதல் ரூ. 70,000 வரை செலவாகிறது. வீட்டு வேலை செய்பவர் மற்றும் சமையல்காரர் ஆகியோருக்குத் தலா ரூ. 10,000 வரை செலவாகிறது. மளிகைப் பொருட்கள் மற்றும் உடற்பயிற்சி நிலையக் கட்டணம் ஆகியவை கூடுதல் மாதச் செலவுகளைச் சேர்க்கிறது. ஷாப்பிங் மற்றும் பயணச் செலவுகளையும் சேர்த்தால், மொத்த மாதச் செலவு சுமார் ரூ. 1.2 லட்சம் முதல் ரூ. 1.3 லட்சம் வரை செல்கிறது.

    கார் வாங்குவது மாதச் செலவில் கூடுதலாக ரூ. 50,000-ஐச் சேர்க்கக்கூடும் என்று, இந்தக் கணக்கீட்டில் அந்தச் செலவை மிகக் குறைவாகவே மதிப்பிட்டுள்ளது. குழந்தைகள் உள்ளவர்களுக்குச் செலவுகள் இன்னும் அதிகரிக்கக்கூடும். இதனால், முதலீடு மற்றும் செல்வத்தை உருவாக்குவதற்கு ஒருவருக்கு மாதத்திற்குச் சுமார் ரூ. 1 லட்சம் மட்டுமே எஞ்சியிருக்கும் நிலை ஏற்படலாம். ஆனால் பெங்களூரில் வீடுகளின் விலை அதிகம். இன்று சுமார் ரூ. 3 கோடி மதிப்புள்ள ஒரு சொத்தின் விலை, காலப்போக்கில் ரூ. 6 கோடி முதல் ரூ. 7 கோடி வரை உயரக்கூடும்.

    Advertisement

    ஒருவர் எவ்வளவு சிறப்பாக முதலீடு செய்தாலும், ஓய்வு பெறும் காலம் நெருங்கும் வரை வீடு வாங்குவதற்குப் போராட வேண்டியிருக்கும். வேலை இழப்பு அல்லது செயற்கை நுண்ணறிவு சார்ந்த மாற்றங்களால் பாதிக்கப்படாமல், ஒருவர் தொடர்ந்து வேலையில் நீடிப்பார் என்ற அடிப்படையிலேயே இந்த கணக்கை கூறுறேன்.

    இதற்கு மாற்றாக, வாழ்க்கைச் செலவு ஒப்பீட்டளவில் குறைவாக உள்ள மூன்றாம் நிலை நகரங்களில் வசித்துக்கொண்டு, அங்கிருந்தே வெர்க் புரம் ஹோம் செய்வதையோ அல்லது சொந்தமாகத் தொழில் தொடங்குவதையோ நான் பரிந்துரைக்கிறேன்.

    பெங்களூரில் அன்றாடப் பொருட்களின் விலை மிக அதிகமாக இருக்கிதுறது. அங்கு ஒரு கோப்பை காபியின் விலை கூட 250, 300 அல்லது 350 ரூபாயாக இருக்கலாம். என்னை பொறுத்தவரை, வாழ்க்கைச் செலவு இவ்வளவு அதிகமாக இருக்கும்போது, ​​ஒருவர் எவ்வளவு சம்பாதித்தாலும் உண்மையான செல்வந்தராக மாறுவது மிகவும் கடினமான காரியம்" இவ்வாறு அன்மோல் அகர்வால் கூறியுள்ளார்.

    Advertisement

    ஆனால் அவரது வாதம் சரியானது இல்லை. ஏனெனில் அன்மோல் அகர்வாலின் இந்த வாதம் ஆடம்பரத்தை அடிப்படையாக கொண்டிருக்கிறது. ஏனெனில் பெங்களூரில் 2BHK வீட்டிற்கு ₹60,000-70,000 வாடகை என்பது முக்கிய நகரப்புறமான இந்திரா நகர், கோரமங்களா போன்ற சொகுசு அபார்ட்மெண்ட்களில் மட்டுமே. சற்று தள்ளி 3-5 கி.மீ போனால் ₹25,000 - ₹35,000-லேயே சிறந்த வீடுகள் கிடைக்கும். அதேபோல் வேலைக்காரர், சமையல்காரர், ஜிம், ஷாப்பிங் என மாதத்திற்கு ₹1.3 லட்சம் செலவு செய்வதும், ₹50,000 கார் தவணை கட்டுவது என்பது அவர் எந்த மாதிரியான உயர்தர வாழ்க்கையை விரும்புகிறார் என்பதை பொறுத்தே அமையும். ₹300 காபி என்பது ஸ்டார்பக்ஸ் போன்ற இடங்களில் தான் இருக்கும். வெறும் 20 முதல் 40 ரூபாயில் தரமான காபி பல இடங்களில் பெங்களூரில் கிடைக்கும்.

    English Summary

    Bengaluru is known for offering high salaries in the IT sector. However, a tech professional based in the city has argued that even with an annual salary of ₹50 lakh, it is difficult to accumulate significant wealth there. He pointed out that high house rents, daily living expenses, car maintenance costs, and the steep prices of properties consume a large portion of an IT employee's monthly income.